நல்ல ரசனை உள்ள , எல்லோரும் பார்க்ககூடிய , நல்ல பாடல்கள் உள்ள , நல்ல கதை அம்சங்கள் உள்ள படங்கள் என்றால் பார்க்க பிடிக்கும். அதிலும் இப்போது வரும் தமிழ் படங்களில் நல்ல ரசனை என்பது இல்லை. குத்தாட்டமும் , கும்மாளமும் , மட்டவர்களை முகம் சுளிக்கும் கதை அம்சங்களுடன் தான் படங்கள் வெளியாகிறது . அதிலும் நான் இந்த வருடத்தில் பார்த்து ரசித்த நல்ல படங்கள் என்றால் அது அயன் , நாடோடிகள் என்ற இரு படமும் தான். நல்ல கதை, பாடல்கள் , கட்சி அமைப்பு , நடிப்பு என எல்லா விதத்திலும் என்னை கவர்ந்தது அயன் படம் தான். சூர்யா தானா இது என மெய் சில்லிர்க்க வைத்தது . ஏற்கனவே எனக்கு சூர்யா நடித்த சில படங்கள் பிடிக்கும் . எனினும் இந்த அயன் படம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. சூர்யாவின் நடிப்பு இன்னும் பிடித்து இருந்தது . ஆதவன் படத்திலும் நம்ம சூர்யாவின் நடிப்பு சும்மா அணல் பறக்கும் என நம்பலாம்.
எனக்கு நம்ம சூர்யா நடித்த பிதாமகன், ப்ரண்ட்ஸ், கஜினி , வேல், போன்ற படங்களும் இன்னும் சில படங்களும் பிடிக்கும். அவற்றில் ஒவ்வொரு அம்சங்கள் பிடிக்கும். ப்ரண்ட்ஸ் படம் சூர்யாவின் ஜாலியான , இயல்பான , சாதுவான , மென்மையான அம்சம் பிடித்தது. பிதாமகனும் பிடித்தது அப்படிதான். கஜனி படம் சூர்யாவின் ஆக்ரோசமும் , நடிப்பும் சும்மா என்னவென்று சொல்வது. சூப்பர். அந்த படம் சூர்யாவை நல்ல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று கொடுத்தது எனலாம். பிதாமகனும் அவரை நல்ல ஹீரோவாக காட்டியது தான். வாரணம் ஆயிரம் படம் சூர்யாவின் நடிப்புக்கு தீனி போட்ட படம் எனலாம். நல்ல பாடல்கள் , நடிப்பு இருந்தும் நல்ல கதை அம்சம் இல்லாததால் படம் பெரிசாக வெற்றி படமாக அமையவில்லை . சூர்யாவின் மூன்று வருட உழைப்பு . வீண் போனது என்று சொல்ல முடியாது. அவரை ஒரு அழகிய , கட்டு மஸ்தான சூர்யாவை பார்த்த மகிழ்ச்சயும் , மூன்று வேடங்களில் அவர் ஏற்று நடித்த வேடங்களும் பிடித்து இருந்தது. பாடல்களும் அந்த மாதிரி சூப்பர் பாடல்கள். எல்லோருக்கும் பிடித்து இருந்தது.
இவை எல்லாம் பிடித்து இருந்தும் படம் நல்ல கதை அம்சம் இல்லாததால் வெற்றி படமாக அமையவில்லையே என்ற கவலை ரசிகர்கள் எல்லோருக்கும் இருந்தது , ஏன் சூர்யாவுக்கும் இருந்திருக்கும் . அதன் பின் மூன்று மாதத்தில் நடித்து முடித்த படம் தான் இந்த அயன் . பெரும் வெற்றி, மாபெரும் வெற்றி. சூர்ஜாவின் படங்களின் ரெகார்ட் எல்லாம் உடைத்ட படமாக அமைந்தது. வணிக ரீதியாக , வசூலிலும் சாதனை படைத்தது. சிவாஜி பட வசூலையும் மிஞ்சியது என்கிறார்கள். படம் மாபெரும் வெற்றி படம். சூர்யாவின் டாப் படத்தில் ஒன்றாக அமைந்தது. அவரை முன்னணி ஹீரோ ஒருவராகவும் மாறி விட்டார். அஜித், விஜய் இருவரும் இரண்டு, மூன்று வருடங்களாக ஒரு வெற்றி படம் ஒன்றை இன்னும் குடுக்கவில்லை. நம்ம சூர்யா இனி தொட்டது எல்லாம் பொன்னாகும் காலமிது . நம்ம சூர்யாவின் அடுத்த படத்துக்கு இப்பவே ஏகப்பட்ட அனுமானங்கள் . படம் வெற்றி பெற வேண்டும் . நல்ல படமாக இருக்க வேண்டும். சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் .
இன்னும் நல்ல படங்கள் நடித்து நம்ம சூர்யா இன்னும் முன்னேறி ஹிட் படங்கள் கொடுக்க வேண்டும் .பல ரசிகர்கள் அவருக்கு கிடைக்க வேண்டும் .அயன் போல் நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற வேண்டும். அயன் படம் நல்ல பாடல்கள் கொண்டும் அமைந்தது. எல்லா படல்கும் சூப்பர் ஹிட் தான். நல்ல கட்சி அமைப்பு. . நம்ம சூர்யாவும் , தமன்னாவும் நல்ல ஜோடி பொருத்தம் எல்லாம் ஒரு சேர அமைந்தது, சூர்யாவின் அற்புத நடிப்பு , சூர்யாவின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது எனலாம்.
என் அபிமான ஹீரோ ஆகி விட்ட நம்ம சூர்யாவின் அடுத்த படமான ஆதவன் படமும் நல்ல படமாக அமைய என் வாழ்த்துக்கள்.
தன்னம்பிக்கையும் , விடா முயற்சயும் , அதிஸ்டமும் , கடின உழைப்பும் தான் ஒரு மனிதனை வெற்றி ஆளனாக அமைய வைக்கிறது.
No comments:
Post a Comment