Wednesday, September 30, 2009
உலக சிறுவர்தினம்
அக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்தினம் ஆகும் . உலக நாடுகள் அனைத்தும் சிறுவர்களுக்காக ஒருமித்து குரல் கொடுக்கும் நாள் .இன்றைய சிறுவர்கள் தான் நாளைய தலைவர்கள் அவர்களுக்கு போதிய கல்வியறிவை புகட்டுவதன் மூலம் தான் எதிர்காலத்தில் அவர்கள் நல்ல பிரயைகளாக வாழ முடியும் .
எல்லா பிள்ளைகளும் நல்லவர்கள் ஆவதும், தீயவர்கள் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று சொல்கிறார்கள். அதை தீர்மானிப்பது அவர்களின் குடும்ப சூழ்நிலையும் , வீட்டு சூழ்நிலையும் தான். பெற்றோர்கள் தமது பிள்லைகளை நல்ல பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு முன் பெற்றோர் சண்டை இடுவதை தவிர்க்க வேண்டும் . பிள்ளையும் எதிர்காலத்தில் அதையே பழகிவிடும் . தந்தை குடிப்பவராக , சிகரட் பத்துபவரக இருந்தால் அதை வீட்டில் பிள்ளைகளுக்கு முன்னால் குடிப்பதை நிறுத்த வேண்டும் .
சிறுவர்களை கூடுதலாக கண்டித்தும் வளர்க்க கூடாது. இயன்றவரை அவர்களுக்கு வீட்டு சூழ்நிலை பற்றி தெரிய வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கூடுதலாக ஏசுவது , அடிப்பதை தவிர்த்து நல்ல புத்திமதிகளை கூறி , அன்பாக பிள்ளைகளை வளர்க்க வேண்டும் .
சிறுவர்களை பெற்றோர் வேலைகளுக்கு அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் . அவர்களை கஷ்டப்பட்டாவது படிக்க வைக்க வேண்டும் . சில பெற்றோர் தங்கள் பிழைகளை எவ்வளவு கஷ்டப்பட்டாவது படிக்க வைக்கிறார்கள். எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகள் தன சொந்த காலில் நிக்க வேண்டும் .
பிறரை நம்பி இருக்க கூடாது .என்று நினைத்து கஷ்டப்பட்டாவது தமது பிள்ளைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் சில பெற்றோர் பிள்ளைகளை
சிறு வயதிலேயே தங்கள் கஷ்டத்தின் நிமித்தம் வேலைக்கு விடுகிறார்கள் .
அந்த பிள்ளைகளின் எதிர்காலத்த பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. நாம் என்ன தான் கஷ்டப்பட்டாலும் எம்முடைய பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கவேண்டும்.
நாம் பட்ட கஷ்டம் நம்மோடு போகட்டும். பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டுமென பெரும்பாலான பெற்றோர் நினைக்கின்றனர்.அதை புரிந்து கொண்டு பிள்ளைகள் பெற்றோரின் கனவுகளை நனவாக்கவேண்டும்.தம் பிள்ளைகளை உலகம் சான்றோன் என போற்ற வேண்டுமென தான் எல்லா பெற்றோரும் விரும்புவர். சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும்.
சிறுவர்களை கடத்தல், கப்பம் பெறுதல் , சில சட்டவிரோத செயல்களில் சிறுவர்களை ஏடுபடுத்தல் போன்றவற்றை நிறுத்த வேண்டும் . இவற்றுக்கு துணை போபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
எல்லா நாடுகளிலும் சிறுவர்களுக்கு எதிரான சட்டதிட்டங்கள் இருக்கின்ற போதும் அவை பேரளவில் இருக்கின்றனவே தவிர அவை அமுல்படுத்த படுகின்றனவா? இல்லையே. அதுதான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் வழி கோலுகின்றன .
இவற்றை தடுக்க வேண்டும் . நல்ல சிறுவர்களை இந்த சமூகத்தில் உருவாக்கி நல்ல பிரைஜைகளாக உருவாக்க வேண்டும் . அப்போது தான் நாட்டில் பல நல்ல பிரைஜைகளை உருவாக்க வேண்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment