நான் வாசித்தேன் . பிடித்திருந்தது அந்த கவிதை . அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
பெய்து கொண்டிருக்கிறது
சிலர் நனைகின்றோம்
பலர் நகர்கின்றோம்
எல்லையில்லாத்
தேவைகளைக் கூட்டியதால்
தேடலில் தொலைகின்றோம்...
தன்னிடம் கிடைப்பதை
விட்டுவிட்டு
தானையமாய் திரிவதில்
நாம் தீவிரவாதிகள்...
சுயநலம் என்பது
நமக்கு
மற்றவர்களோடு அல்ல
நம்மிடமே...
அனைத்தையும்
ஆசைக்கு அடகுவைத்து விட்டு
அந்த அனைத்திலும்
நம்மை மீட்கத் தவறுகிறோம்...
சின்னச் சின்ன அறிவுகளில்
சிறைப்படும் நம்மால்
சம்பூரண அறிவு பெற்று
விடுதலையாகத்
தெரியவில்லை
பெய்வது
ஞானமழை
சாரலுக்குத் தேவையில்லை
குடை...!
காதல்
உன் பாதச் சுவடுகள்
பதிந்த மணல் கொண்டும்
உன் விரல் பட்ட
மரக்கிளைகள் கொண்டும்
உன் வெட்கத்தில்
வழிந்த வர்ணம் கொண்டும்
நமக்கான வீட்டைக் கட்டுவோம்...
அதில்
காற்றும் புகாத அளவுக்கு
காதலை நிரப்பி வைப்போம்...!
அம்மா
மருத்துவமனையின் பல உபகரணங்கள் சுற்றியிருக்க
விழிகள் மூடியபடி படுக்கையில் என் தாய்.
'கடைசி காலத்துல என்னைய கஷ்டபடுத்தாதடா...
பொட்டுனு ஒரு ஊசிய போட்டு கொன்னுபுடுடா,
உனக்குப் புண்ணியமாப் போவும்!'
வாரம் பத்து முறையாவது
வாய் வலிக்க ஒப்பிப்பாள்.
பக்கவாதத்தின் பலனால்
இடப்புறம் முழுதும் செயலற்று,
சிறுநீர் கழிக்கும் உணர்வுகூட இன்றி,
இரத்த அழுத்தம், சர்க்கரை நோயின்
அரவணைப்பில் கிடக்கும் போதும்,
இதையேச் சொன்னாள் திரும்பத் திரும்ப
விழிகள் திறக்கும் போதெலாம்!
அறையிலிருந்து வெளிவந்து
விறுவிறுவென வளாகத்தின் வாசல் வந்தேன்.
'வணக்கம் டாக்டர்' என்று வழிநெடுக கேட்ட குரல்களுக்கு
பதில் வணக்கம் கூட சொல்லத் தோன்றாமல்.
வெளி சுவற்றின் மீது என் பார்வை நிலைத்தது -
'மதில் மேல் ஒரு பூனை!'
No comments:
Post a Comment