காதல்
தாய் பிள்ளை பாசம்,சகோதரர்கள் பாசம், உறவுகள் மீதான பாசம் எல்லாம் காதல் என்ற ஒன்றுக்குள் அடங்குகிறது. காதல் என்பதுதான் அன்பு, பாசம் என பலதரபபட பெயர்களில் இருக்கிறது .என்னை பொறுத்தவரை காதலி , காதலன் என்பதை பற்றி பெரிதாக நான் இன்னும் அனுபவப்படவில்லை. அதனால் எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். காதலர்கள் காதலிப்பது தான் காதல் எண்டில்லை. தாய் பிள்ளை மீது அன்பு காட்டுவதும் காதல் தான். காதலித்து பார் உன்னை சுற்றி ஒரு ஒளி வட்டம் தோன்றும்.என்றதை பார்த்து ஒருவர் காதலித்தாராம்.இப்போ அவரை சுற்றி மது போத்தல்களும் ,சிகரட் குப்பிகளும் தான் இருக்கின்றன. இப்பிடி சில காதலர்கள் காதல் என்ட பெயரில் அப்பெயரையே கொல்கிறார்கள். காதல் புனிதமானது. மானிடரே எல்லோரையும் காதலியுங்கள்.வாழ்க்கையின் வசந்தத்தை சுவாசியுங்கள்.
அழகு
மானிடரே முக அழகை பார்த்து மயங்காதீர்கள். அக அழகே உண்மையான அழகு. செயற்கை அழகு மணிக்கு மணி குறைந்து கொண்டே போகும்.அக அழகு தான் உண்மையான அழகு. பத்து வயதில் ஒருவர் இருக்கும் அழகு இருபது வயதில் கொஞ்சம் கூட இருக்கும் . முப்பதில் அந்த அழகு கொஞ்சம் குறைந்து அப்பிடியே குறைந்து கொண்டு போகும் . அழகு அழிய கூடியது . இப்போது கறுப்பானவர்கள் எல்லோரும் வெள்ளை ஆக தெரிகிறார்கள் . அதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அழகை பார்த்து மயங்குபவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகம் . அதில் ஒரு சிலர் ஒவ்வொருவரின் மனசை பார்க்கிறார்கள்.
பணம்
பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பார்கள்.இன்றைய நவீன உலகில் பணமில்லை என்றால் உறவுகள் கூட பின்னுக்கு தான் நிக்கின்றன.முன்னர் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு.இப்போ அக்கற்றவனிடத்தில் கொஞ்ச பணம் இருந்தால் மற்றவன் மதிக்கிறான்.இதை நான் அனுபவ ரீதியாக கண்டுள்ளேன். பணத்தின் அருமையை பார்த்தீர்களா.பணம் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது தான்.. கொஞ்சம் சுற்றியுள்ளவர்களையும் நேசிக்க பழகுங்கள்.பணம் இன்று இருக்கும் நாளை இருக்காது.ஆனால் நம்முடன் கூட வருவது நம் உறவுகள் தான்.
கடவுள்
கடவுளை நம்புவோர் பலர்.நம்பாதோர் சிலர்.கஷ்டம் வரும்போது கடவுளிடம் அழும் நாம் சந்தோசமாக இருக்கும் போது மட்டும் ஏன் நாம் கடவுளை நினைப்பதில்லை. இறைவனை வழிபடுங்கள் . எந்த மதத்தையும் கேலி , கிண்டல் செய்யாதீர்கள். நீங்கள் செயும் அக்கிரமங்களை எல்லாம் கடவுள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். ஒரு நாளைக்கு விளங்கும் கடவுளின் செயல் . இறைவனை வழிபட்டு நல்ல பேறு அடையுங்கள் .
இவை எல்லாவற்றுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என நீங்கள் கேட்பது புரிகிறது . அன்பு கொண்ட உள்ளங்கள் இறைவனை வழிபட்டு வாழ்வில் நல்ல நிலையை அடைகிறார்கள். பணம் இருந்தால் தான் நாலு பேர் நம்மை மதிக்கிறார்கள் .அழகை ரசிக்கிறார்கள். நாம் அழகாக இருக்க வேண்டும் . காதலித்து கல்யாணம் செய்கிறார்கள் . அவர்கள் நல்லபடி வாழ , சிறப்பாக வாழ , அழகாக இருக்க சம்பாதித்து பணம் சேர்க்க வேண்டும் . அதனுடன் இறை வழிபாடும் இருந்து வந்தால் வாழ்வு சிறக்கும் . வாழ்வு வளம் பெறும். வாழ்கையின் சந்தோசத்தை அனுபவிப்பீர்கள். சிறந்து விளங்குவீர்கள்.
2 comments:
தோழி பாவி…….
காதல், கடவுள், பணம், அழகு என்ற நான்கு விடயங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தங்களின் எண்ணக்கருக்கள் பலவற்றுடன் நான் முரண்படுகின்ற போதிலும், தங்களின் கருத்துக்களின் தாக்கங்களை உணர்கிறேன். என்னுடைய அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கும் நன்றி தோழி.
பவி உங்களுடைய தளத்திற்கு இன்றுதான் நான் முதல் முதலாக வருகிறேன். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
இந்த பதிவில் உங்களுடைய கருத்துக்களுடன் என்னாலும் உடன்பட முடியிவில்லை. :-(( ம். பார்ப்போம்.
Post a Comment