Tuesday, October 20, 2009

சக்தி டிவி ஆரம்பித்து 11 ஆவது ஆண்டுகள் இன்று


தமிழ் பேசும் நெஞ்யங்களை கொள்ளை கொண்டு 11 ஆவது ஆண்டுகளை கொண்டாடும் சக்தி டிவிக்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . உண்மை செய்திகளை உடனுக்குடன் கொண்டு வருவதில் சக்திக்கு நிகர் சக்தி தான் . பல நல்ல நிகழ்ச்சிகளை தாங்களே தயாரித்தும் வழங்குகின்றது. அவை தரமான நிகழ்ச்சிகளாகவும் , மக்கள் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சிகளாகவும் அமைந்து இருக்கின்றது .



காலையில் குட் மோர்னிங் ஸ்ரீலங்கா நிகழ்ச்சியில் பல சுவையான தகவல்கள் , விடயங்களை தாங்கி வருகின்றது . பிரியமான தோழியே நிகழ்ச்சியில் பல சமையல் குறிப்புகள், கைவேலைப்பாடுகள்  என பல நல்ல விடயங்கள் எல்லோருக்கும் உபயோகமான விடயங்களை தாங்கி வருகிறது .


மதியம் பெண்மணிக்காக நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம்  ஒவ்வொருவரும் அழகு குறிப்புகளை சொல்லலாம். அழகு  டிப்ஸ்களை சொல்லலாம் . அதன் பின்பு பெண்கள் நேரம் நிகழ்ச்சியில் மருத்துவரின் ஆலோசனைகள் , பல கேள்விகளுக்கு மருத்துவரின் பதில்கள் எல்லாம் இடம்பெறுகின்றன .

கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சயும் ஒரு அறிவு சார்ந்த , எல்லோரும் பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது . பல பாடகர்களை வெளி உலகுக்கு கொண்டு வரும் விதமாக சக்தி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி அமைந்துள்ளது . பல நல்ல பாடகர்கள் இதன் மூலம் வெளிக்கொண்டு வரப்படுகிறார்கள் . ஏற்கனவே இசை இளவரசர்கள் மூலம் பல கவியர்கள் , பாடகர்கள் , இசை அமைப்பாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது சக்தி அது எல்லோருக்கும் நினைவு இருக்கலாம் .


பல புதிய திரைப்படங்கள் எல்லாம் ஒலி பரப்பபடுகின்றன . ஒவ்வொரு மாத இறுதியிலும் .

இவை எல்லாம் தமது தயாரிப்பில் வெற்றி நடை போடும் சக்தி இன்னும் பல நல்ல, தரமான படைப்புகளை தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் பேர் அவா .


இன்னும் பல ஆண்டுகள் வெற்றி நடை போட வேண்டும் சக்தி என நான் வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் .


11 comments:

சூரியன் said...

ஆங்கிலத்தில் சகல நிகழ்ச்சிகளுக்கும் பெயர் வைத்திருக்கும் இவர்கள் தான் தமிழ்மொழியின் சக்தியாம்.

கிராண்ட் மாஸ்டர் ஒரு ஏமாற்று நிகழ்ச்சி. கலந்துகொண்டவன் என்றவகையில் அவர்களின் தில்லுமுல்லுகள் தெரியும்.

வந்தியத்தேவன் said...

அவர்களின் குறைகளையும் சொல்லியிருக்கலாம், சிலவேளைகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இந்தியத் தயாரிப்புகளாக இருப்பதால் குறை தெரியவில்லையா?

கிராண்ட் மாஸ்டர் ஏமாத்தும் நிகழ்ச்சிதான்.

காலையில் தலைவிரிகோலத்துடன் நிகழ்ச்சி செய்வதுதான் தமிழ்ப் பண்பாடா?

இன்பரூபன் said...

உங்க பதிவில் காணப்படுகிற எழுத்துப் பிழைகளைப் பார்த்தாலே தெரியிது நீங்க சொத்தி டீவீயின் ரசிகை எண்டு..

கருமம்.இதையெல்லாம் பாக்கிறீங்களா? பேசாம ஏதாவது சிங்கள டிவி பாருங்கோ.

(உண்மை செய்திகளை உடனுக்குடன் கொண்டு வருவதில் சக்திக்கு நிகர் சக்தி தான் .) ஹா ஹா. நல்ல நகைச்சுவை

(பல நல்ல நிகழ்ச்சிகளை தாங்களே தயாரித்தும் வழங்குகின்றது. அவை தரமான நிகழ்ச்சிகளாகவும் , மக்கள் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சிகளாகவும் அமைந்து இருக்கின்றது .
)
பேசாம உங்கள் பதிவுக்கு புழுக மூட்டை எண்டு பெயர் வையுங்கோ.

(கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சயும் ஒரு அறிவு சார்ந்த , எல்லோரும் பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது )
த்தூ..

(பல புதிய திரைப்படங்கள் எல்லாம் ஒலி பரப்பபடுகின்றன .)
அருமையான தமிழ்.நீங்களும் சொத்தி டிவியில் தான் வேலை செயிரீன்களோ?

நடத்துங்கோ. தமிழ் நாசமாப் போகட்டும்

வந்தியத்தேவன் said...

//இன்பரூபன் said...
பல புதிய திரைப்படங்கள் எல்லாம் ஒலி பரப்பபடுகின்றன .//

பவியின் இந்த வரிகளில் தவறில்லை ஏனென்றால் சக்தியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான படங்களில் மதுபானம், புகைத்தல் சம்பந்தமான காட்சிகளில் இவர்கள் முற்றுமுழுதாக காட்சிகளை மறைத்து ஒலியைத் தான் வெளிவிடுகின்றார்கள். கலைஞர், விஜய் தொலைக்காட்சிகள் போல் கீழே புகைத்தல் உடன் நலத்திற்க்கு கேடு என்றோ மது குடும்பத்தின் எதிரி என்றோ போடும் மூளை சக்தியில் வேலை செய்பவர்களிடம் எதிர்பார்க்ககூடாது.

Anonymous said...

en sakthi methu ivvalavu veruppu ?

Pavi said...

ஆங்கிலத்தில் சகல நிகழ்ச்சிகளுக்கும் பெயர் வைத்து இருக்கிறார்கள் . அதை நான் ஒத்துக்கொள்கிறேன் . என்னுடைய பார்வையில் கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சி எப்பிடி என்பதை தான் எழுதி இருக்கின்றேன் சூரியன் .

Pavi said...

குறைகளை சொல்லவில்லை தான் . இதை விட பல குறைகள் ஏனைய தொலைகாட்சிகளிலும் உண்டு. அதனால் அவற்றை தவிர்த்து விட்டேன் வந்தியத்தேவன் அண்ணா.

Pavi said...

சில நல்ல விடயங்களை செயும் போது பாராட்ட வேண்டும் . நியூஸ் பெஸ்ட் செய்தியால் பலன் அடைந்தவர்களும் உண்டு தானே .முந்திய விட இப்போது சில நிகழ்ச்சிகளை தாங்கள் தயாரிக்கிறார்கள் தானே . நான் சக்தி டிவியில் வேலை பார்க்கவில்லை இன்ப ரூபன் .

Pavi said...

சக்தி டிவியில் படம் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போது முக்கியமான தருணங்களில் மதுபானம், புகைத்தல் சம்பந்தமான காட்சிகளை மறைப்பதனால் படம் பார்க்கவே வெறுப்பு வரும் . அதனால் நான் சக்தியில் படம் பார்ப்பதில்லை .
நான் ஒரு இடமும் வேலை பார்க்கவில்லை.

நண்பி said...

2,3 கேள்விகள் எழுகிண்றன உங்கள் பதிவை பார்த்து
1>உங்ளுக்கு ரசனையே இல்லையா?
2>சொத்தி TV உங்களுக்கு காசு தந்தாங்கள? இபபடி எழுத சொல்லி?
3>இல்லா விட்டா நண்பன் இன்பரூபன் கூறியது போல நீங்களும் தமிழ் கொல்லும் கூட்டத்துடன் சேர்ந்து விட்டிர்களா?
4>மன்னிக்கவும் இல்லா விட்டால் உங்களுக்கு அறிவு இல்லையா?
5>செத்தி டிவியின் செந்த தயாரிப்பு மின்னல் நிகழ்ச்சி மட்டும் தான்...
மிச்சம் எல்லாம் சன், விஜ்ய், etc.. இன் உடைய கோப்பி...
இந்த பதிவு இட முன் விடயங்களை அலசி ஆராய்ந்தீர்களா?

உங்கள் பதிவுக்கு கேள்வி கேட்டா நான் இன்று முழுக்க உங்கள் பதிவுடன் தான் இருக்க வேண்டும்....

Unknown said...

நீங்கள் வாழ்த்துச் சொல்வதில் தவறேதும் இல்லை...
உங்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன.

ஆனால் சக்தி தொலைக்காட்சியை வாழ்த்தி பதிவிடும் அளவிற்கு நீஞ்கள் இருக்கிறீர்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.
இலங்கையில் இப்படி ஒருவர் இருக்கமுடியுமா???

முதலாவது இந்த முகவரிக்குச் சென்று இங்கிருக்கும் கருத்துக்களில் ஏதாவதொன்றை உங்களால் எதிர்க் முடியமா என்று பாருங்கள்...
http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post.html

இனி உங்கள் பதிவிற்கு விடையளிக்கிறேன்...

தமிழ்பேசும் நெஞ்சங்களை சக்தி கொள்ளை கொண்டது என்பது தவறு.
எமது நேயர்களுக்கு வேறு தெரிவில்லாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
புதிய தொலைக்காட்சிகள் வந்தாலும் அவை சொல்லிக் கொள்ளுமளவிற்கு இல்லை என்பது தான் கவலை.
என்னைப் பொறுத்தவரை நேத்ரா பரவாயில்லை. அவர்களின் தமிழ் உச்சரிப்பு, நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் ஆளுமை சக்தியிலிருக்கும் அனேகமானோரைவிட சிறப்பானது.
அவாகள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக தமிழ் நிகழ்ச்சிகளை நிறுத்துவதும், செய்திகளில் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்படுவதும் தான் பிழை.
ஆனால் நேத்ரா அரசாங்கம் என்றால் சக்தி ஐ.தே.கட்சிக்கு ஆதரவளிப்பது 5 வயது குழந்தைக்கும் தெரியும்.
'இன்று ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியது. அங்கு கருத்துத் தெரிவித்த (....ஒருவரின் பெயர்)' என்ற செய்தி முக்கிய செய்தியாக இட்மபெறுவதில்லை என்கிறீர்களா???

முக்கிய செய்திகளை செய்தி முடியும் வரை நேயர்களை காத்திருக்க வைத்து கடைசிச் செய்தியாக சொல்வதை 'உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது' என்கிறீர்களா?

குட்மோனிங் ஸ்ரீலங்கா என்ற பெயர் தேவையா?
எங்காவது பிரதிசெய்வது என்றால் இப்படியா பிரதி செய்வது?
(அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சியில் குட்மோனிங் அமெரிக்கா' என்ற நிகழ்ச்சி இருக்கிறது என்று நம்புகிறேன்.

பெண்மணிக்காக நிகழ்ச்சியிலோ, பிரியமான தோழி நிகழ்ச்சியிலோ அல்லது கோலர் கலாட்டா நிகழ்ச்சியிலோ யாராவது தமிழை ஒழுங்காக உச்சரித்தால் நான் சத்தி தொலைக்காட்சிக்கு இரசிகர் மன்றம் வைக்கத் தயாராக இரு்ககிறேன்...

கிரான்ட் மாஸ்ரரில் குளறுபடிகள் நிலவுவதாக நிறையப் பேர் தெரிவிக்கிறார்கள்..

ஒருவரை வாழ்த்துவது வேறு...
ஆனால் பிழையாக புகழ்ந்து அவர்கள் திருந்துவதை தடுக்காதீர்கள்...
தயவுசெய்து....

உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட கோபங்கள் எதுவும் கிடையாது.

மிக்க நன்றி.