Tuesday, October 6, 2009

உலக ஆசிரியர் தினம்

 

மாதா , பிதா , குரு, தெய்வம் இவர்கள் எல்லோரையும் மதித்தல் , வழிபடல் எம்முடைய தலையாய கடமைகளில் ஒன்று. மாணவ பருவத்தில் நாம் பெரும்பாலான நேரத்தை பாடசாலையில் தான் களிக்கிறோம் .

நமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைப்பதே பாடசாலை தான் . ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் தான் எம்மை முன்னேற்றம் காண வைக்கின்றன.


ஒரு மாணவனை நல்வழிகாட்டி பாடங்களை கற்பித்து ஒரு சிறந்த ஆசானாக , வைத்தியனாக , பொறியியலாளனாக , என்று பல கோணங்களில் பலதரப்பட்ட தொழில்களை அவர்கள் ஈடுபடுவதற்கு ஆணிவேராக இருந்து நல்வழி படுத்துகிறார்கள் ஆசான்கள் . 


அவர்கள் இல்லாவிட்டால் , அவர்கள் எவ்வளவு விடயங்களை கற்று தாரவிட்டால் நம் மாணவர்கள் இவ்வளவு முன்னேற  முடியாது .

ஆசானை மாணவர்கள் மதித்து நடக்க வேண்டும் . அவர்கள் சொல்வதை கேட்க்க வேண்டும். அவர்கள் குடுத்து விடும் வீட்டு வேலைகளை அடுத்த நாள் கட்டாயம் செய்து கொண்டு போக வேண்டும் .



ஆசிரியர்கள் நம் முன்னேற்றத்துக்கு தான் எந்த விடயங்களயும் செய்வார்கள் . ஒரு படிப்பில் அக்கறை இல்லாத மாணவனையும் ஒரு நல்ல சிறந்த மாணவனாக மாற்றும் திறன் படைத்தவர்கள் ஆசிரியர்கள் .



ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதோடு மட்டுமின்றி இன்னும் தாங்களும் கல்வி பயின்று படித்து கொண்டு இருப்பார்கள். ஏன் எனில் காலத்துக்கு காலம் பாடவிதானங்கள் மாறுபடும் . 


பல புதிய விடயங்கள் உள் வாங்கப்படும் . அதற்கு ஏற்ப அவர்களும் தங்களை ஆயத்தப் படுத்த வேண்டும்.

சில மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை . பெற்றோர்களை மதிப்பதில்லை . ஆசான்கள் கொடுக்கும் வீட்டு வேலைகளை செய்வதில்லை . 


நன்றாக படிக்கும் மாணவர்களை சில மாணவர்கள் குழப்பி கொண்டு இருப்பார்கள் .
இதனால் ஆசிரியர்களுக்கு பாடம் படிப்பிக்க முடியாமல் போகின்றது . மாணவர்கள் அப்படி நடந்து கொள்ள கூடாது .








மாணவர்களை நீ இந்த வழியில் சென்று இந்த பாடத்தை கற்றால் நீ நல்ல நிலையை அடைவாய் என பல மாணவர்களை தட்டி ஊக்க படுத்துபவர்கள் ஆசான்கள் . அவர்களை வாழ்த்தவும் , போற்றவும் என்னை பொறுத்தவரை ஒரு நாள் போதாது . அனைத்து  ஆசான்களுக்கும் இந்த வேளையில் எனது வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன் .



1 comment:

தங்க முகுந்தன் said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்!

எம்மை வழிநடத்தி - நல் ஒழுக்கத்தைப் புகட்டிய அத்தனை ஆசிரியர்களையும் நினைவுபடுத்த உங்கள் பதிவை நான் உபயோகிக்கலாம்தானே!

நன்றியும் வாழ்த்துக்களும்!