Wednesday, October 7, 2009

அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள்


இப்போது எந்த பத்திரிகையை பார்த்தால் என்ன , தொலைக்காட்சி பார்த்தால் என்ன ஒவ்வொரு நாளும் வாகன விபத்தில் ஒருவர் பலி, இருவர் பலி, ஐவர் பலி என்று தான் இருக்கின்றது. மனித உயிர்கள் இப்படி வீணாக பலியாகின்றதே. 



இதற்க்கு காரணம் வாகனம் ஒட்டுபவர்களா? அல்லது தெருவில் நடந்து போகும் மக்களின் கவன குறைவா ? இதற்கு தீர்வு தான் என்ன ? உடனே பஸ் நெரித்து மாணவன் பலி என்றவுடன் ஆத்திரத்தில் பஸ்ஸை எரித்தால் சரியா? உடனே அந்த மாணவன் உயிர் பிழைத்து விடுவானா? இல்லையே . போன உயிர் திரும்பி வருமா?  


ஒன்றில் ஆட்டோ அல்லது கார் , வான் , லொறி , மோட்டார் சைக்கிள் என வீதி எங்கும் வாகனங்கள் ஓடிக்கொண்டு போகின்றன . அவற்றை ஓட்டும் வாகன ஓட்டுனர்கள் சிலர் அவசரமாகவும், மது போதைகளிலும் வாகனத்தை ஓடுகிறார்கள். இதனாலும் விபத்துகள் இடம்பெறுகின்றன.



முதலில் வாகனம் ஓடும் நபர் பொறுமையாக வாகனத்தை ஓட்டுபவராக இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அதிக டென்சனுடன் நாம் வாகனத்தை ஓட்டும்போதும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது .


ஒரு குடும்பத்தில் அந்த தாய், தந்தைக்கு ஒரே ஒரு குழந்தை . அது பாடசாலை பஸ்சில் போகும்போது விபத்து நடந்து அந்த பிள்ளை இறந்து விட்டது . அப்போ அந்த தாய், தந்தையின் நிலை என்ன? அவர்களின் கனவு, எதிர்காலம் எல்லாம் தவிடு பொடி ஆகி விட்டுது . அவர்கள் அந்த பிள்ளைக்காக எவ்வளவு தவம் இன்றி பெத்து , எவ்வளவு கனவுகளுடன் வாழ்ந்து இருப்பார்கள் . வாகன ஓட்டுனரின் கவன குறைவால் இந்த பிள்ளை பரிதாபமாக உயிர் இழந்து விட்டது . இப்படி தினம் தினம் உலகில் எவ்வளவு சம்பவங்கள் நடை பெறுகின்றன ?


மஞ்சள் கோடுகல் கீறி இருக்கும் பாதசாரிகள் கடவை அதை  கடக்கும்  போதும் வாகனங்கள் அடித்து இறகின்றார்களே.  இவர்களுக்கு எல்லாம் உயிரின் மதிப்பு தெரிவதில்லை . அதுதான் நாய் , பேய் என்று நினைக்கிறார்கள் போல இருக்கின்றது .

இதற்கு என்னதான் தீர்வு ?
முதலில் வாகனம் ஓட்டுபவர்கள் அவசரப்படாமல் , அமைதியாக, பொறுமையாக வாகனத்தை ஓட்ட வேண்டும். வீதியில் போகும் மக்களும் வீதியில் போகும் போது ஆறுதலாக , கவனமாக செல்லவும். வாகனம் துரத்தில் தானே வருகின்றது என இந்த பக்கத்தில் இருந்து மற்றைய பக்கத்துக்கு திரும்பிரத்துக்கு இடையில் வாகனம் அடித்து விட்டு போய்விடும் . வாகனம் பாஸ்டாக ஓடும்போது உடனே ஸிலோவ் பண்ண முடியாது . அப்போது பாதிக்கப்படுவது மக்களாகிய நாம் தான் . கால் , கைகள் முறிந்து , தலையில் அடி பட்டு இருக்க வேண்டியது தான் . வீதியில் செல்லும் போது கவனமாக வாகனங்களை பார்த்து மற்றைய பக்கம் மாறுங்கள் .



எல்லோரும் சேர்ந்து ஒன்று பட்டு நடந்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கும் , பிரச்சனைகளும் தீரும் .

4 comments:

RAGUNATHAN said...

நல்ல சமூக சிந்தனை கொண்ட பதிவு...வாழ்த்துகள்...அப்புறம் word verification எடுத்துடீங்க போலிருக்கு... :)

RAGUNATHAN said...

but you may keep comment moderation

க.பாலாசி said...

இவ்வாறான விபத்துக்கள் நடக்காமல் இருக்க தாங்கள் சொன்ன வழிமுறைகள் நன்று...

Pavi said...

எல்லாம் நீங்க சொல்லிதந்ததால தான் ரகுநாதன் அண்ணா.
நன்றி பாலாஜி அண்ணா , ரகுநாதன் அண்ணா .