Sunday, October 18, 2009
அதிகரித்துவரும் கொள்ளை சம்பவங்கள்
இப்போது எல்லா இடங்களிலும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. எங்கு பார்த்தாலும் களவு தான் இடம்பெறுகின்றன. பொருட்களின் விலைகள் அதிகரித்து விட்டதாலும் இந்த பிரச்சனையோ தெரியவில்லை. கூலி சம்பளத்துக்கு நின்றாலும் இப்படி கிடைக்காது விடாது தானே. ஒரு நாளைக்கு களவு எடுத்தால் ஒரு மாதத்துக்கு வைத்து செலவு செய்யல்லாம் தானே என்று நினைக்கிறார்கள் போல் இருக்கிறது . அது எவ்வளவு பெரிய தப்பு . சிலர் தப்பு என்று தெரிந்தும் அந்த தப்பை செய்கிறார்கள் . என்ன செய்வது ?
கஷ்டப்பட்டு ஒரு வேளை சாப்பாடு என்றாலும் வெயர்வை சிந்தி உழைத்து சாப்பிடுங்கள் . அது எவ்வளவு நல்ல விஷயம் . மனதுக்கும் ஒரு திருப்தி கிடைக்கும் .
களவு எடுத்தால் கள்ளன் , திருடன் என்ற பட்ட பெயர் தான் கிடைக்கும். எவ்வளவு பேரின் வயிற்று எரிச்சலை வாங்கி கட்டுகிறீர்கள் தெர்யுமா ? அந்த பாவம் உங்களை சும்மா விடுமா ? அவற்றை ஏன் யோசிக்க மறுக்கிறார்கள் ?
நோயாளியாக வைத்தியசாலையில் படுத்து இருக்கும் தனது அப்பாவுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் . உடனே பணம் வேண்டும் . என்ன செய்வது என மகன் யோசித்து விட்டு வங்கியில் பணத்தை எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் பணத்தை பறித்து விட்டார்கள் கொள்ளையர்கள் . என்ன செய்வது ? மகன் திகைத்து நிக்கிறான் . கொள்ளையர்கள் பணத்தை பறித்து கொண்டு ஓடி விட்டார்கள் . தகப்பனுடைய சத்திரசிகிச்சை தள்ளி போனது . தகப்பனுக்கு சரியான வருத்தம் கடுமை .
இப்படி எத்தனை பேர் தவிக்கிறார்கள் . தெர்யுமா ? ஏன் இந்த நிலை .
இந்த நிலை மாற வேண்டும் . கஷ்டப்பட்டு பணத்தை உழைத்து சேமித்து வைத்து விட்டு கஷ்டம் வரும்போது அந்த பணத்தை கொள்ளையர்கள் திருடி எடுத்து கொண்டு போனால் அந்த கஷ்டப்பட்டு உழைத்தவரின் மனம் எவ்வளவு வேதனை படும் .
இவைட்டை எல்லாம் உணர்ந்து திருடர்கள் திருந்த வேண்டும் . இப்படி கொள்ளையர்கள் திருந்தாமல் விட்டால் நாம் மாறித்தானே ஆக வேண்டும் . நாம் என்ன செய்யல்லாம் ?
தீர்வு என்ன?
நாம் எம்மிடம் இருக்கும் பயத்தை போக்க வேண்டும் . துணிவுடன் இருக்க வேண்டும் . வங்கியில் ஒரு தொகை பணத்தை எடுத்ததும் கவனமாக பாக்கில் வைத்து இல்லை இல்லை பாக்கில் வைத்தால் பாக்கை பறித்து கொண்டு ஓடி விடுவார்களே . பேசில் வைத்தால் பேசை பறித்து விடுவார்களே. ம்ம்ம்ம்ம்ம்ம் ஒகே . நீங்கள் ஜீன்ஸ் போட்டு இருந்தால் ஜீன்ஸ் பொக்கட்டுக்குள் வடிவாக இரண்டு போக்கட்டுகளுக்கும் காசை பகிர்ந்து வைக்கவும் . வித்தியாசமாக தெரிய கூடாது . ஏனெனில் ஜீன்ஸ் பொக்கட்டையும் வெட்டி எடுத்துவிடுவர் . நோமலக பயப்பிடாமல் , சாதுவாக வாருங்கள் . உங்களை ஒருவரும் கணக்கு எடுக்க மாட்டார்கள் . அதுவே முளிந்து, முளிந்து பதுங்கி பதுங்கி , ஜீன்ஸ் பொக்கட்டை பார்த்து பார்த்து வந்தீர்கள் என்றால் அவ்வளவு தான் ?
நகைகளை போட்டு கொண்டு தெரிவில் போகும் போது கவனமாக செல்லுங்கள் . கள்ளர் நகைகளை பறிக்கிறார்கள் என்று தெரிந்தும் நம்மில் சிலர் கழுத்தில் காதில் , கையில் அடுக்கி கொண்டு தான் செல்கிறார்கள் . இவர்களுக்கு எல்லாம் சொன்னால் புரியாது . பட்டுத்தான் இவர்கள் திருந்த வேண்டும் .
நம்மில் சிலர் இப்போது திருந்தி விடாலும் சிலர் திருந்துவாதாக இல்லை. மட்டவர்கள் எங்களை மதிக்க மாட்டார்கள் நாங்க நகை போடாவிட்டால் என்று சொல்லும் பேர் வழிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் .சிலவேளை நகைகளை போட்டு கொண்டு போய் உயிர் போகும் நிலைமையும் வரும். கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு நகைகளை கொண்டு போய் விடுவார்கள் . நகையும் இல்லை . உயிரும் இல்லை . இது தேவையா ?
இப்போது தான் தங்க நகை போல பான்சி கடைகளில் விக்கின்றனர். இம்மிடேசன் என்று சொல்வார்கள் . பார்க்க தங்கம் போல இருக்கும் . வசதி குறைந்தவர்கள் , வசதி கூடியவர்கள் என எல்லோரும் இப்போது இது தான் கூடுதலாக பயன்படுத்துகிறார்கள் .
அவற்றை பயன் படுத்தலாம் . ஒவ்வொரு உடுப்புக்கு தகுந்தபடி மாலைகள் இருக்கின்றன. அவற்றை அணியலாம்.
உங்களை ஆபத்தில் இருந்து காப்பது உங்கள் கடமை. சோலியை விலைக்கு வாங்குவதும் , வாங்காததும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது . அதனை புரிந்து கொள்ளுங்கள் ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment