Wednesday, October 21, 2009

டெங்கு கவனம்

 

எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் . டெங்கு கொஞ்ச நாட்களாக காணவில்லை என்று பார்த்தால் திரும்பி டெங்கு காச்சல் பருவுகின்றது . எல்லோரும் சுத்தமாக இருக்க வேண்டும் . உங்களுடைய வீட்டையும் , சுற்று புற சூழலையும் சுத்தமாக வைத்து கொள்ளவும் .சுத்தம் சுகம் தரும் தானே.

டெங்கு காச்சலால் எவ்வளவு பேர் இறந்து இருக்கிறார்கள் . சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் டெங்கு காச்சல் தாக்குகிறது .


மழை காலத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகமாகிறது . பிளாஸ்டிக் பொருட்கள், பாக்குகள் , ஐஸ்கிரீம் மூடிகள் எல்லாம் கவனமாக குப்பைகள் கொட்டும் இடத்தில் போட வேண்டும் . அல்லது மண்ணுக்குள் புதைக்க வேண்டும் .



பிரசவத்தை எதிர்நோக்கியிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். குழந்தையும் இறந்து போய் விட்டது . இப்படி பல பரிதாபமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன .

 


டெங்கு ஆபத்தானது.
டெங்கு கொடுரமானது


3 comments:

Muruganandan M.K. said...

டெங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திதற்கு நன்றி

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இது எல்லோரினதும் கடமை

புலவன் புலிகேசி said...

உபயோகமான பதிவு.நன்றி...