இந்த தைப் பொங்கலுக்கு முட்டி மோத போகும் படங்கள் விஜயின் "காவலன்", தனுசின் "ஆடுகளம் ", கார்த்தியின் "சிறுத்தை "போன்ற முக்கிய மூன்று படங்களும் அதை தவிர வேறு சில படங்களும் திரைக்கு வர காத்து இருக்கின்றன. பொங்கலன்று அதிக படங்கள் திரைக்கு வருவது வழமை . ஆனால் இம்முறை பல படங்களை திரை இடுவதற்க்கு தியேட்டர்கள் இல்லையாம் . பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காவலன் உள்ளது. படத்தை வர விடாமல் தடுப்பதாக விஜய் தரப்பு புகார் கூறியுள்ளால் இந்த பரபரப்பு அதிகரித்துள்ளது. தியேட்டர் கூட தர மறுப்பதாக விஜய் தரப்பு குமுறலுடன் உள்ளது. கடும் சிரமத்திற்கு மத்தியில் கணிசமான தியேட்டர்களை பிடித்துள்ளதாக தெரிகிறது.விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய்க்கும் கூட இந்தப் படம் முக்கியமானது. கடந்த சில படங்கள் ஓடாததால் விஜய் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் அப்செட்டாக உள்ளனர். இளம் தலைமுறை நாயகர்களில் விஜய்க்குத்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். மேலும் விரைவில் அவர் அரசியல் களத்திற்கும் வரப் போகிறார். எனவே காவலனின் வெற்றி வி்ஜய்க்கு முக்கியம் என்றே கூறலாம் . விஜய், அசின் இருவரும் இணைந்து நடித்துள்ள காவலன் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளிவரும் என்று அறிவித்து தியேட்டர்கள் கிடைக்காததால் பின்தள்ளப்பட்டு கடைசியாக பொங்கலுக்கு திரைக்கு வருகிறது . விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காவலன் திரைப்படத்தை பார்ப்பதற்க்கு காத்து இருக்கின்றனர். பாப்போம் காவலன் படத்தில் விஜய் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வாரா என்று ? ஏற்கனவே சுறா, வில்லு , வேட்டைக்காரன் , குருவி போன்ற தோல்வி படங்களுக்கு பிறகு வெளிவர இருக்கிறது . அனைத்து ரசிகர்களையும் இந்த படம் திருப்தி படுத்தும் என்று நம்பபடுகிறது . அடுத்து நம்ம சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ள படம் சிறுத்தை . பையா, நான் மகான் அல்ல போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் . சிறுத்தை படத்துக்கு இப்போதே போட்டி தொடக்கி விட்டதாம் என்றால் பாருங்களேன் . விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றனவாம் . அதுவும் கார்த்தியும் , தமன்னாவும் என்றால் ரசிகர்கள் முண்டி அடித்து கொண்டு நிற்பார்கள் . இரு வேடத்தில் ஒரு வேடம் ஜாலியாகவும் , ராக்கெட் ராஜா என்ற ரோலிலும் அசத்தலாக நடித்து உள்ளாராம் கார்த்தி . சரி பொங்கலுக்கு படத்தை பார்த்தால் தெரியும் தானே படம் எப்படி வந்திருக்கிறது என்று . பொல்லாதவன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் தனுசுடன் கூட்டுச்சேர்கின்றார். படத்திற்கு புது நாயகி தபசி என்பதும் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியிருக்கின்றது. வெற்றி கூட்டணி இணைந்து உள்ளதனால் படத்தையும் ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்க்கிறார்கள் . இவை முன்னணி கதாநாயகர்களின் படங்கள் . இன்னும் வேறு சில படங்கள் வெளிவரும் . சரி இப்போது போட்டி இவர்கள் மூவருக்குள்ளும் தான் . சபாஷ் சரியான போட்டி . விஜயா ? கார்த்தியா ? தனுஷா? பாப்போம் பொங்கலுக்கு என்ன நடக்கின்றது . இவர்கள் மூவரின் படங்கள் தான் முட்டி மோத இருக்கின்றன . பொங்கலுக்கு எந்த படம் பொங்குகிறது , எந்த படம் புஸ்பவானமாகிறது என்று நாம் பொறுத்திருந்து பாப்போம் . |
Wednesday, January 5, 2011
பொங்கலுக்கு முட்டி மோதப்போகும் படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
புத்தாண்டில காவலன் காலை வாராமல் இருந்தால் சரி...
கார்த்திக் நடிப்பில் ஒகே... சிறுத்தை சீறுமா?
சத்தமில்லாமல் வெற்றிப் படங்களை கொடுக்கும் தனுஷ் இந்த முறை ஆடியிருப்பது சன் பிக்சர்ஸ் தயவில்... கேட்கவா வேண்டும்...
ம்ம் பார்ப்போம்
நன்றி குமார்
Post a Comment