மனதில் உள்ள பொறாமை, வஞ்சகம் , பொய் , களவு , சூது போன்ற நம் உள்ளத்தில் இருக்கும் கெட்ட குணங்களை இல்லது ஒழித்து கொள்ள வேண்டும் . மனதில் உள்ள தீய எண்ணங்களை அளித்து நல்ல எண்ணங்களை மனதில் கொள்ள வேண்டும் .
நல்ல மனதுடன் இருந்து குதூகலம் கொண்டு தீபாவளியை கொண்டாடுங்கள் . எல்லா வசந்தங்களும் , சந்தோசங்களும் உங்களை வந்தடையட்டும் . புது வசந்தங்கள் பிறக்கட்டும் .
நானும் இந்த முறை எல்லா வருடங்களை போல கொண்டாட இருக்கின்றேன் . எனினும் சில துன்பங்கள் மனதில் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் நேரம், காலத்துக்கு ஏத்தபடி நடக்க வேண்டும் அல்லவா ? ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதன் படி நாமும் நடக்க வேண்டும் .
டிவியில் நல்ல நிகழ்ச்சிகள் போக இருக்குது . பார்க்கலாம் . எல்லா டிவ்யிலும் நல்ல போட்டி இருக்கிறது . போட்டி இருந்தால் தானே நாங்கள் நல்ல படம் பார்க்கலாம் . தசாவதாரம் பார்க்கலாம் . கமலின் அற்புத நடிப்பில் அது சூப்பர். இன்னொரு தரம் பார்க்கலாம். வசந்தம் டிவியில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கிறது . புதிதாக ஆரம்பித்து நல்ல தரமான நிகழ்ச்சிகளை மக்களுக்கு கொடுக்கிறார்கள் . அதுவும் நம்ம நாட்டு கலையர்களை வைத்தும் நல்ல நிகழ்ச்சிகளை கொடுக்கிறார்கள் . வாழ்த்துக்கள் வசந்தம் டிவிக்கு .
மற்றைய டிவிகளில் என்னென்ன நிகழ்ச்சிகள் போடா போகிறார்கள் என்று ஆவலாக உள்ளது . இன்னும் அறிவுப்புகள், முன்ஓட்டங்கள் இடம்பெறவில்லை . பொறுத்திருந்து பாப்போம் .
எல்லோரும் கோவிலுக்கு சென்று , புத்தாடை அணிந்து தீபாவளியை சந்தோசத்துடன் கொண்டாடுங்கள் .
No comments:
Post a Comment