Monday, November 23, 2009

எனக்கு பிடித்த வரிகள் - பழைய பாடல்களில் இருந்து -2

அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள் கவிதைக்கு மேல்
கவிதைக்கு மேல்
அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை உழுகின்ற ஏர்
உழுகின்ற ஏர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை


கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தில் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் கலந்ததெடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி


வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!

ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு


சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்


ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமணம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....








No comments: