Thursday, November 26, 2009

ஆசைகள் பல விதம்




மனிதர்கள் எல்லோருக்கும் ஆசை இருக்கும் . அந்த ஆசைகள், விருப்பங்கள் ஒவ்வொருத்தருக்கும் மாறுபட்டு காணப்படும் .அதாவது எனக்கு பாண் பிடிக்கும் என்றால் என் நண்பிக்கும் பாண் பிடிக்கும் என்று சொல்ல முடியாது . அவருக்கு சிலவேளை தோசை பிடிக்கும் . அல்லது அப்பம் பிடிக்கும் .





இப்படி ஒவ்வொருவருக்கும் ஆசைகள் ஒன்றல்ல இரண்டல்ல பல ஆசைகள் இருக்கும் . சிலருக்கு அந்த ஆசைகள் நிறைவேறும் . சிலருக்கு அந்த ஆசைகள் நிறைவேறாமல் விடுவதும் உண்டு . சிலருக்கு விபரீதமான ஆசைகளும் உண்டு . வானத்தில் இருந்து குதிக்க வேண்டும் , மேகத்தை தொட வேண்டும் என்றெல்லாம் பல ஆசைகள் இருக்கும் . பறவைகள் பலவிதம் . ஒவ்வொன்றும் ஒருவிதம் . அது போல் தான் மனிதர்கள் பலவிதம் . ஒவ்வொருவரும் ஒருவிதம் . ஆசைகள் பலவிதம் .


ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் . அம்மாவை வாங்க முடியுமா ? என்ற சினிமா பாடல் உண்டு . அது நூறு வீதம் உண்மை தானே. காசு இருந்தா எல்லாத்தையும் வாங்கலாம் . சின்ன சின்ன ஆசை , சிறகடிக்கும் ஆசை , வெண்ணிலவே தொட்டு முத்தமிட ஆசை என்று ஆசைகளை இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.


 வாழ்க்கையில் சந்தோசமாக வாழ வேண்டும் .{ பிறப்பு ஒரு தடவை . இறப்பு ஒரு தடவை தான் }
எல்லோருடனும் எப்பவும் சந்தோசமாகவும் சிரித்து பேசி மகிழ்வுடன் இருக்க வேண்டும் .
எல்லா மக்களும் கவலைகளை மறந்து சந்தோசமாக வாழ வேண்டும் .
எல்லோருக்கும் என்னால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் . இப்படி எனக்குள்ளே பல ஆசைகள் உண்டு . 


 

சாப்பாடு விடயத்திலே எனக்கு இட்லி , சாம்பாரு என்றால் தனி ஆசை . பழங்களில்  அன்னாசி , தோடம்பழம் என்றால் போதும் . சொக்லேட்  என்றால் மில்க் சொக்லேட் என்றால் ரொம்ப பிடிக்கும் . வனிலா ஐஸ்கிரீம் என்றால் அதில் ஒரு தனி பிரியம் தான் எனக்கு .அப்படி ஆசைகளை சொல்லி கொண்டே போகலாம் ....................






3 comments:

sathishsangkavi.blogspot.com said...

சிலருக்குப் பொறாமை வரும்..

உங்களுக்கு ஆசை வந்தது நல்லது...

Pavi said...

ஆசை இருக்கலாம் . பொறாமைப்பட கூடாது .

Magia da Inês said...

Oi, amiga!
Voltei porque fiquei com saudade do seu cantinho,
Continua lindo, nutritivo e delicioso...
Sucesso sempre!
Beijinhos.
Itabira - Brasil