Monday, December 21, 2009

புகைத்தல் உடல் நலத்திற்க்கு கேடு

http://www.hyscience.com/smoke.jpg 
http://www.tamilnet.dk/net/dk-news25.jpg 
நமது உடல் நலத்திற்க்கு கேடு விளைவிப்பன என்று தெரிந்தும் திருந்தாத மனிதர்களை நாம் என்ன என்று சொல்வது ? எத்தனை புத்தகங்கள் , பத்திரிகைகள் என எதை பார்த்தாலும் புகைத்தல் உடல் நலத்திற்க்கு கேடு என வருகிறது . அவற்றை வாசித்து அதன் படி நடக்கிறார்களா ? இல்லையே . நாமே நோய்களை விலை கொடுத்து வில்லங்கமாக நோய்களை வரவழைத்து நமது உயிரை நாமே போக்குகின்றோம் என்று தான் சொல்ல வேண்டும் 


ஆண்கள் தான் புகைத்தலுக்கு அடிமை என்றால் இப்போது பெண்களும் தான் இந்த லிஸ்டில் சேர்ந்து விட்டார்கள் . ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன: புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன. புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருந்தும் திருந்தினார்களா ? திருந்துவதாக இல்லை . எத்தனை ஆராய்ச்சியாளர்கள் சொன்னால் என்ன புகைப்பதை கை விடுவதாக இல்லை இந்த மதிகெட்ட மனிதர்கள் .
 http://www.clarian.org/ADAM/doc/graphics/images/en/19349.jpg 
புகைபிடிப்பது உடல் நலத்திற்க்கு தீங்கானது . நுரையீரல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் , காசநோய் போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புகள் உண்டு .இந்த விபரம் எல்லோருக்கும் தெரியும் .தெரிந்தும் என்ன பயன் ? அதைவிட மேலாக மூளையும் பாதிக்கப்படுகின்றது . 



http://images.psxextreme.com/wallpapers/ps3/smoke_01.jpg 
புகையில் உள்ள நச்சு தன்மையுள்ள பொருட்கள் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தூண்டுகின்றன . இவை மத்திய நரம்பு உள்ள ஆரோக்கியமான செல்களை தாக்குகின்றன . இதனால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும் . இதன் ஒரு பகுதியாக மூளையில் உள்ள மைக்ரோலியா என்ற முக்கிய செல்களும் பாதிக்கப்படுகின்றன .


http://www.theshisha.com/shopcart/skin1/images/electroSmokeBNPS_468x348.jpg 
புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும். நான் இனி புகைக்க மாட்டேன் என்று மனதில் உறுதி பூண்டு புகைப்பதை நிறுத்த வேண்டும் .  


http://fc03.deviantart.net/fs39/f/2008/321/b/0/Smoke_by_Maximaxou.jpg 
உலக சுகாதார தாபனத்தின் அறிக்கைப்படி புகை சார்ந்த நோய்களால் ஒவ்வொரு நிமிடமும் 6 பேர் இறக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பேர் இறக்கின்றனர் . இளம் வயதிலிருந்து புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பவரின் ஆயுட்காலம் 8 – 10 வருடங்களால் குறைந்துவிடுகிறது. புள்ளி விபரங்களின்படி, அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஆண்களில் 50 வீதமும் பெண்களில் 8 வீதமும் புகைத்தலுக்கு அடிமைப்பட்டுள்ளனர். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஆண்களில் 41 வீதமும் பெண்களில் 21 வீதமும் புகைத்தலுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.
  

எனவே நாம் நாமாக சந்தோசமாக வாழவேண்டும் . நமது வாழ்நாளை சந்தோசமாகவும் நோய் , பிணிகள் இல்லாது பாதுகாத்து  கொள்வது  நமது கையில்  தான் உள்ளது ..




9 comments:

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு ..!

புகைபிடித்தல் பற்றி நானும் ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க...!

அண்ணாமலையான் said...

சிகரெட் மேலயே அச்சடிச்சும் திருந்தாதவங்க நீங்களும் நானும் சொல்லியா திருந்த போறாங்க? சரி ஊதற சங்க ஊதுவோம்...ஊஊஊஊஊஊ

Pavi said...

ம்ம்ம் நன்றி ஜீவன் .
உங்களது பதிவையும் பார்க்கின்றேன் .

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது .
மனம் கேக்குதில்லையே . நாம் எமது கடமையை செய்வோம் .
திருந்துபவர்கள் திருந்தட்டும் .
நன்றி அண்ணாமலையான் .

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு........

புகைப்பதினால் வரும் அனைத்து தீமைகளையும் அழுத்தமாக சொல்லியிருக்கறீர்கள்..

Pavi said...

நன்றி சங்கவி

அஸ்பர் said...

நல்ல பதிவு, இதுபோன்ற பதிவுகளைத் தெடர வாழ்த்துக்கள்

அஸ்பர் said...

நல்ல பதிவு, இதுபோன்ற பதிவுகளைத் தொடர... வாழ்த்துக்கள்

ஞானப்பழம் said...

சரி.. இனிமேல் புகைக்க மாட்டேன்.. போதுமா?