சச்சினை பற்றி பதிவு போட வேண்டும் என நீண்ட நாட்களாக யோசித்து கொண்டு இருந்தேன் . இன்று தான் அது நிறைவேறியது . அதுவும் சாதனைகளோடு இன்னொரு சாதனையை தொட்டு இருக்கிறார் . பதிவு போடாமல் இருப்பேனா ?
சச்சினின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம் . ஒரு புத்தகமே வெளியிடலாம் . சாதனைகள் படைத்த வண்ணமே இருக்கிறார். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது . ஓட்ட எண்ணிக்கை கூடுகிறது . சதங்கள் அதிகரிக்கிறது . அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனைகள் தொடர்கின்றன . வைரம் பட்டை தீட்ட தீட்ட மிளர்வது போல் தான் சச்சினும் . சச்சினும் ஒரு வைரம்.
குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
முதலில் 194 என்ற சாதனையே இருந்தது . அதனை தகர்த்து எறிந்தார் சச்சின் . சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களை எடுத்திருந்ததே சாதனைகளாக இருந்தது .
147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். சாதனைக்கும் சொந்தகாரர் ஆனார் .இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
200 ரன்களை பெற்றது குறித்து சச்சின் கூறுகையில் :
இரட்டை சதம் அடிப்பேன் என்று நான் நினைத்தது இல்லை. 175 ரன்னை தொட்ட போது தான் எனக்கு அந்த ஆர்வம் ஏற்பட்டது. அப்போது 42 ஓவர் தான் முடிந்து இருந்தது. இந்த வாய்ப்பு கிடைத்ததும் ஒவ்வொரு ரன்னாக எடுக்க முடிவு செய்தேன். ஏனென்றால் மறுமுனையில் டோனியின் அதிரடி ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன்.
இரட்டை சதம் அடிப்பேன் என்று நான் நினைத்தது இல்லை. 175 ரன்னை தொட்ட போது தான் எனக்கு அந்த ஆர்வம் ஏற்பட்டது. அப்போது 42 ஓவர் தான் முடிந்து இருந்தது. இந்த வாய்ப்பு கிடைத்ததும் ஒவ்வொரு ரன்னாக எடுக்க முடிவு செய்தேன். ஏனென்றால் மறுமுனையில் டோனியின் அதிரடி ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன்.
200 ரன்னை அடித்ததை எப்படி உணர்வது என்றே எனக்கு தெரியவில்லை. 20 ஆண்டு காலமாக எனக்கு ஆதரவு தந்த இந்திய மக்களுக்கு இந்த இரட்டை சதத்தை அர்ப்பணிக்கிறேன்.
எனது ஆட்டம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. பந்து சரியான முறையில் மட்டையில் பட்டது. சாதனைக்காக நான் ஆடவில்லை. அது தானாக நடக்கிறது. நான் எப்போதுமே சாதனைக்காக ஆடியது கிடையாது. 200 ரன் எடுத்தது மிகவும் சிறப்பானது. எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவரையும் மதிக்கிறேன். அவர்களது வாழ்த்து எனக்கு மிகவும் முக்கியம். 199 ரன்னில் இருந்த போது நெருக்கடி எதுவும் இல்லை.
நான் 50 ஓவர்கள் வரை நின்றது மகிழ்ச்சியை தருகிறது. எனது உடல் தகுதிக்கு கிடைத்த நல்ல சோதனையாகும்.
நான் 150 ரன்னில் இருந்த போது 350 முதல் 360 ரன் வரை எடுக்க முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யூசுப்பதானும், டோனியும் அதிரடியாக ஆடி 400 ரன்னை குவிக்க காரணமாக இருந்தார்கள். யூசுப்பதான் ஆட்டத்தை மாற்றினார். டோனி அருமையாக நிறைவு செய்தார் என்று கூறினார் இந்த நாயகன் .கிரிக்கெட்டின் கடவுள், பிதாமகன், சகாப்தம், அம்பாசிடர் என்று அனைத்து சொல்லுக்கும் உரியவர் சச்சின் .
37 வயதில் அவர் இப்படி அபாரமாக விளையாடுவது மிகுந்த ஆச்சரியம் தான் .கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்து அதற்கு ஏற்றவாறு அவர் விளையாடி வருவது பாராட் டுக்குரியது. ஆட்ட ஸ்டைல், பந்தை கணிக்கும் விதம் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
சச்சின் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் . சிறப்பாக இன்னும் ஆட வேண்டும் என நானும் சச்சினை வாழ்த்துகின்றேன் .
8 comments:
வாழ்த்துக்கள். சச்சினுக்கு
வாழ்த்துக்கள்... சச்சினுக்கு
நன்றி.... உங்களுக்கு.
பதிவு எழுதிய விதம் ரசிக்க வைத்தது நன்றி ...!
நல்லா சொல்லி இருக்கீங்க... ஆனா படங்களுக்கு கீழே எழுத்து வந்தால் நல்லா இருக்கும். ஓரத்தில் இருப்பதை தவிர்கலாம் என நினைக்கிறேன் சரியாக படிக்க முடியல..!! மற்றபடி நல்ல அலசல்.
நன்றி உங்கள் வருகைக்கு அண்ணாமலையான்.
நன்றி சி. கருணாகரசு
நன்றி ஜீவன்...
நன்றி பிரவின்குமார் .
அடுத்த பதிவில் படங்களுக்கு கீழே போடுகிறேன் . இப்படியான பிழைகளை எனக்கு எடுத்து சொல்லுங்கள் . நான் அதை சரி செய்கிறேன் .
Post a Comment