Saturday, February 27, 2010

ஏழைகளுக்கு உதவுங்கள்

http://www.unp.co.in/attachments/f96/1769d1178438193-help-poors-bulla-ki-jaane-main-kaun-06_poor_child.jpg 
இப்போது எல்லாம் எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை குறைந்து கொண்டு செல்கிறது . ஒரு சிலர் எல்லோருக்கும் உதவி செய்கிறார்கள் தான் . அதற்காக எல்லோரும் உதவி செய்வதில்லை என்று கூற வரவில்லை . இன்னும் எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கூடிக்கொண்டு போக வேண்டும் .

உதவி செய்யுங்கள் . ஆனால் அது யாருக்கு செய்ய வேண்டும் . யாருக்கு செய்யக் கூடாது , எப்பிடி செய்ய வேண்டும் என்பதை முதலில் கவனியுங்கள் .
  

இரண்டு கால்களும் , கைகளும் இருந்தும் ஒருவன் பிச்சை எடுக்கிறான் என்றால் அவனுக்கு நீங்கள் காசு போட கூடாது . அவனை பின்பு இரவில் பார்த்தால் தலை கால் தெரியாதபடி கிடப்பான் . சிகரட் , கசிப்பு என்று குடித்து விட்டு வீதியில் கிடப்பான் . இப்படியே அவன் உழைக்காமல் பிச்சை எடுத்தே பிழைப்பை நடத்துவான் . அது தவறு . அவனுக்கு ஒரு சிறிய தொழிலை ஆரம்பிக்க உதவி செய்து கொடுங்கள் . அவனும் முன்னேறுவான் . ஒரு சப்பாத்து தைத்து கொடுப்பது , கச்சான் விற்பது , பலூன் விற்பது என்று ஒரு சிறு தொழிலை ஆரம்பித்து கொடுங்கள் . அது மிகவும் சிறந்தது .

http://www.canada.com/business/Encouraging+signs+cash+climate+summit/2303156/2260382.bin?size=620x400 
கணவனை இழந்த பெண் தனது பிள்ளைக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கையேந்தி நிக்கும் போது உதவுங்கள் . அந்த சிறு பிள்ளை உணவு உண்ணட்டும் உங்கள் புண்ணியத்தால் .
 

கை ஒன்று இல்லாமல் , கால் நடக்க இயலாமல் இருப்பவர்களை பார்த்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் . அவர்கள் பாவம் . எம்மை போல் இல்லை அவர்கள் . அவர்கள் எந்த நாளும் தங்கள் நிலையை நினைத்து யோசித்து கொண்டே இருப்பார்கள் . அவர்கள் உங்களை கை எடுத்து கும்பிட்டு அன்பாக நீங்கள் கொடுத்ததை வாங்குவார்கள் .
http://www.dangerzone-collectibles.com/images/shop/more/148x148_1233501311CutOffLegWeb.jpgஏதாவது விசேட தினங்களுக்கு அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள் . பணிஸ் வாங்கி கொடுங்கள் . அநாதை சிறுவர்களுக்கு ஒருவேளை சாப்பாடுக்கு உதவுங்கள் . அதைவிடுத்து சும்மா அங்க குடுத்து , இங்க குடுத்து கணக்கு காட்டாதீர்கள் .

சிலர் நாங்கள் உதவி செய்கிறோம் செய்கிறோம் என்று ஒரு தரகரிடம் பணத்தை கொடுத்து ஒரு அநாதை இல்ல பெயரையும் கொடுத்து இதை அங்கெ கொண்டு போய் கொடுத்து விடு என்பார் . ஆனால் அங்கெ அரைவாசி பணம் தான் கொடுபடும் . மீதி பணம் தரகர் சுட்டு விடுவார். ஏன் அப்படி செய்வான் ? நீங்களே நேரடியாக கொண்டு போய் கொடுங்கள் .விசேட தினங்களுக்கு நீங்களும் அங்கு போய் அந்த சிறார்களுடன் சேர்ந்து சந்தோசமாக இருந்து பாருங்கள் .

உதவிகள் பல செய்து உத்தமனாக இருங்கள் . உங்களுக்கும் வைத்து கொண்டு உதவி செய்யுங்கள் . இருக்கும் காலங்களில் நல்லதை செய்யுங்கள் .

நீ ஒருவனுக்கு உதவு
உனக்கு நாளை ஒருவன்
உதவ முன்வருவான் .
நீ உதவி செய்யாமல்
இருப்பான் ஆனால்
அவனுக்கு ஆபத்து
என்று வரும்போது
ஒருவரும் உதவ
முன்வர மாட்டார்கள்
இது தான் நியதி .
   

4 comments:

அண்ணாமலையான் said...

ஆமாங்க எல்லாருக்கும் உதவுங்கள்..

Anonymous said...

uthavi seiyunka . upaththiram theedatheenka . nalla josanaikalai munvaiththu irukkireenka pavi. vaalththukkal.

enrum anpudan
anpu.

Pavi said...

நன்றி அண்ணாமலையான்.

Pavi said...

நன்றி அன்பு