Tuesday, February 23, 2010

சுவையான மாதுளம்பழம்

http://www.life123.com/bm.pix/how-to-eat-a-pomegranate.s600x600.jpg

எனக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று மாதுளம்பழம் . இரத்த கலரில் இருக்கும் மாதுளம் முத்துக்கள் பார்க்கவே அழகாக இருக்கும் . மாதுளம் முத்துக்கள் சிகப்பு , வெள்ளை முத்துகளாகவே இருக்கும் . 
http://israeliwinedirect.terapad.com/resources/5093/assets/pomegranate.jpgமாதுளம்பழம் எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள் . அதில் நீர்ச்சத்தும் உண்டு . மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

http://blog.healthcare-guide.info/wp-content/uploads/2009/12/pomegranate-open.jpgஉங்களுக்கு விக்கல் வந்தவுடன் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிகமாக தாகம் எடுக்கிறது குடிப்பதற்க்கு ஒன்றும் இல்லையே என்று பார்த்தால் மாதுளம் பழத்தை கண்டால் உடனே வாங்கி சாப்பிடுங்கள் . தாகத்தை தீர்க்கும் தன்மையும் இந்த பழத்துக்கு உண்டு . 
http://www.californiagardens.com/images/Pomegranate-wonderful.jpgஅண்மைக் காலமாக, மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்று நோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
http://gigabiting.com/wp-content/uploads/2009/12/pomegranate_seeds.jpgஇன்னுமொரு ஆராச்சி உண்டு . மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வளவு சக்தி இந்த மாதுளம் பழத்துக்கு உண்டு என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது . நாம் நம்பித்தான் ஆக வேண்டும் . 
http://www.freshplaza.com/2007/0717/pomegranate.jpgசிலர் வீட்டில் மாதுளம் பழம் இருந்தும் அதில் என்ன இருக்கிறது என்று சப்பிடாதவர்களும் உண்டு . அவர்களுக்கு மாதுளம் பழத்தின் தன்மை , விசேசம் அறியாதவர்களாய் இருப்பார்கள் . மாதுளையின் மகிமை தெரியாதவர்கள் . 
http://inlinethumb29.webshots.com/2140/2275231670077355298S425x425Q85.jpgபழங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் உண்டு . பல நோய் தீர்க்கும் நிவாரணியாக இருக்கிறது . அதில் மாதுளம் பழமும் ஒன்று . அதை தவிர்க்காதீர்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள் .
http://farm1.static.flickr.com/60/207934146_cd0a17aef6.jpgஉடலில் சூடு உள்ளவர்கள் மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். இரத்தம் உற்பத்தியாக மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.
 
மலச்சிக்கல் உள்ளவர்கள்  தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டார்கள் என்றால் அவர்களுக்கு மலச்சிக்கல் நீங்கும் .
 
http://www.mybeautymatch.com/images/pomegranate_11.jpg 
பழ கடைகளில் ஒரு பழம்  200 ரூபாய் , 150  ரூபாய் என்று கிடைக்கிறது . மிகவும் நல்ல பழங்களாக பார்த்து வாங்கி சாப்பிடுங்கள் . அழுகல் பழங்களை வாங்காதீர்கள் . பழ சத்துகள் நிறைந்த மாதுளம் பழத்தை வாங்கி உண்ணுங்கள் . நோய் தீர்க்கும் நிவாரணி மாதுளையை அதிகம் வாங்கி சாப்பிடுங்கள் .   
  

6 comments:

Praveenkumar said...

பயனுள்ள தகவல்கள்.. படங்களும் மிக அருமையாக போட்டு விளக்கி இருக்கீங்க.. பகிர்வுக்கு நன்றி!. வாழ்த்துகளுடன் பாரட்டுகள்!.

அண்ணாமலையான் said...

நல்ல பகிர்வு... நன்றி

Pavi said...

நன்றி பிரவின்குமார் உங்கள் கருத்துக்கு .

Pavi said...

நன்றி அண்ணாமலையான் . உங்கள் கருத்துக்கு .

nelpandiyar said...

முதன் முறை உங்கள் பதிவை பார்த்தவுடன் உங்கள் வலைப்பதிவை bookmark செய்தேன் அருமையான படங்கள் உப யோகமான விளக்கங்கள்

manivelu said...

பயனுள்ள அருமையான தேன்
velumani.t
9361228299