
ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம் . எல்லோருக்கும் மிகவும் நல்லது . குறைந்த செலவில் நிறைந்த பயனை தருகிறது முட்டை . கூடுதலான முட்டை இருக்கிறது என்று நான்கு , ஐந்து என்று சாப்பிடாதீர்கள் . எதுவும் அளவோடு சாப்பிட்டால் பயன் உண்டு . ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள் முட்டையை .

அவித்தோ , பொரித்தோ சாப்பிடுங்கள் . அல்லது முட்டை குழம்பு வைத்து சாப்பிடுங்கள் . அதுவும் நன்றாக இருக்கும் . முட்டையை விரும்பாதவர்கள் இல்லை . ஒரு சிலர் தான் விரும்ப மாட்டார்கள்.
கிராமங்களில் எல்லாம் எல்லோர் வீட்டிலும் கோழி வளர்த்து முட்டை விற்கிறார்கள் . முட்டையை நாம் எந்த காலங்களிலும் கடைகளில் வாங்க முடியும் . அதற்க்கு தட்டுப்பாடு இருக்காது . ஏனெனில் கூடுதலானவர்கள் முட்டையை அதிகம் சாப்பிடுவதனால் எந்த கடைகளிலும் முட்டை இல்லை என்று சொல்ல மாட்டார்கள் .


தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுத்து சாப்பிடப் பழக்க வேண்டும். பின்னர் சிறிது சிறிதாக அவர்களுக்கு மஞ்சள் கருவை கொடுக்கலாம் .

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது . அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை . மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை .

முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் என ஒவ்வொருவர் ஒவ்வொரு கதைகளை சொல்வார்கள் . பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.அந்த பயத்தை நீக்கி தினம் ஒரு முட்டை உண்ணுங்கள் . பல ஆராய்ச்சியாளர்களும் இதை தான் சொல்கிறார்கள் .

முட்டையை கடையில் வாங்கி வந்தவுடன் அவை உடைந்து போய் இருந்தால் அன்றே பாவியுங்கள் . மற்றைய முட்டைகளை கழுவிய பின்பு ப்ரிஜில் வையுங்கள் . பழுதாகாமல் இருக்கும் .

“தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது . பிறகென்ன உங்கள் பாடு கொண்டாட்டம் தான் .
3 comments:
சந்தோஷம்
ம்ம்மம்மம்ம்ம்ம் ரொம்ப நன்றி .
முட்டை சாப்பிட்ட திருப்தி
Post a Comment