இல்லையே . பணக்காரனிடம் தினம் தினம் இன்னும் பணம் கூடி கொண்டு போகிறது . ஏழைகள் இன்னும் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எல்லோருக்கும் சொந்த காலில் நின்று உழைத்து முன்னேற ஆசைதான் . அதற்க்கு போதிய பணம் இருந்தால் தானே முன்னேற முடியும் . அதற்க்கு உதவி செய்ய ஒருவரும் இருக்க மாட்டார்கள் .
பணம் பொருள் என்று இருந்தால் எல்லோரும் மதிப்பார்கள் . இல்லையேல் ஏனையோரை ஒரு தூசாக தான் மிதிப்பார்கள் . பணம் இருந்தால் எல்லாம் உண்டு. பணம் இல்லாவிட்டால் ஏதும் இல்லை. செல்வந்தருக்கு பெரிய சுற்றம் இருக்கும். செல்வம் இல்லையேல் எவரும் இல்லை. இதுதான் உலகம் .
பாதாளம் வரை பாய வல்ல இந்தப் பணம் கொடிய பகைவரை அழிக்கும் தன்மை கொண்டது .பணம் கொடுத்தால் எதையும் செய்ய துணிகிறார்கள் . செல்வம் உள்ளவர்களின் வாக்கே செல்வாக்கு என்று அழைக்கப்படும். செல்வம் இல்லாதவர்களின் வாக்கு ஒரு பைசாக்கு கூட உதவாது .
ஏழைகள் , கஷ்டப்படுவோருக்கு கொடுத்து உதவும் புண்ணியவான்கள் எனப்படுகின்றனர். அதே பணத்தை வைத்து பெட்டிக்குள் பூட்டி பூட்டி வைத்திருப்பவனின் பணம் பிணத்துக்கு சமம் . அவன் இறந்து விட்டால் அவனை அவனது பிணத்தை எரிக்க ஒருவரும் வரார் . அவனின் பணம் மட்டும் இருந்தால் பணம் அவனை எரிக்குமா . இல்லையே . எல்லோருக்கும் கொடுத்து உதவி செய்து ஒரு மனிதன் இறந்தால் அவருக்கு அஞ்சலி செலுத்த ஒரு மக்கள் படையே மாமனிதருக்காக திரண்டு வரும் . அப்படித்தான் இருக்க வேண்டும் .
எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் . ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு குறைந்து எல்லோரும் சந்தோசமாக வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பம் .
11 comments:
//ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு குறைந்து எல்லோரும் சந்தோசமாக வாழ்க்கையில் இருக்க வேண்டும் //
Nadanthaal nallaththaaney irukkum. nadakkuma?
நீங்க சொல்லுற கருத்தும் உங்க ஆசையும் மிக சரிதான்.
ஆனா நீங்க கூட படத்துல பணக்கார நேட்டாதான் காட்டுறிங்க!?
பணம் தான் இன்று எல்லாம்... பிறப்பு முதல் இறப்பு வரை..
ஆகாயம் முதல் பாதாளம் வரை.. எல்லாம் பணம் தான்..
100 % உண்மை
அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை
தாய் தகப்பனாக இருந்தாலும் பணம் உள்ளவர்களிடம் தான் தாயும், தந்தையும் இருப்பார்கள் .இது என் அனுபவத்தில் சொல்லுகிறேன்
Your views are great and your letters have deep meaning...but U can still present it better
ம்ம்ம்ம்ம்ம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . நன்றி குமார்
என்ன செய்வது . பணம் பணம் பணம் .
எதற்க்கு எடுத்தாலும் பணம் தானே .
நானும் பணத்தை பற்றி பதிவு போட்டு இருந்தால் படம் போடத்தானே வேண்டும். என்ன செய்வது ?
நன்றி கருணாகரசு
மிகவும் சரி .
அது உண்மை தான் .
நன்றி வெறும்பய
ம்ம்ம்ம் இப்படி தான் நடக்கின்றது இந்த உலகத்தில் .
நன்றி உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு ஹரிணி
நன்றி முரளி
//எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் . ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு குறைந்து எல்லோரும் சந்தோசமாக வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பம் .//
நல்ல கருத்துங்க
Post a Comment