இலங்கை, இந்தியா ,நியூசிலாந்து அணிகள் பங்கு பற்றிய முத்தரப்பு போட்டி இலங்கை மண்ணில் நடந்தது . இலங்கை அணியும் , இந்திய அணியும் இறுதி போட்டிக்கு விளையாட தகுதி பெற்றன . நியூசிலாந்து அணி வெளியேறியது . நேற்று நடந்த இறுதி போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது .
டில்ஷானின் சதம் கைகொடுக்க அபாரமாக ஆடிய இலங்கை அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது . முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 299 ஓட்டங்களை பெற்றது .
டில்ஷானும், மஹேலவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . டில்ஷான் அதிரடியாக ஆடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார் . இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரினதும் பந்துகளை அடித்து நொரிக்கினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டில்ஷான் 8 வது சதம் பெற்றார் . 11 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 110 குவித்த டில்ஷான் பிரவீண் பந்து வீச்சில் வெளியேறினார்.
மஹேல, டில்ஷான் ஆட்டம் இழப்புக்கு பின் சங்க தனது பங்குக்கு அணியை வழிநடத்தி அபாரமாக, பொறுப்புடன் ஆடினார் . ஒரு நாள் அரங்கில் 58 வது அரை சதம் கடந்தார். இஷாந்த சர்மா வீசிய ஆட்டத்தின் 44 வது ஓவரில் "ஹாட்ரிக் பவுண்டரி' அடித்து மிரட்டினார். 71 ஓட்டங்கள் பெற்ற வேளையில் இவரின் வெளியேறிய பின்பு வந்த வீரர்கள் எல்லோரும் வருவதும் போவதுமாக சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர் .
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து , 299 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணிக்கு 300 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது . சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி தினேஷ் கார்த்திக் , சேவாக் ஜோடி களத்தில் களமிறங்கினர் . தினேஷ் வந்த வேகத்தில் வெளியேறினார் . சேவாக் 28 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் .
பின்னர் வந்த யுவராஜ் , விராத் கோஹ்லி ஆகியோர் அணியை மீட்க போராடினர் . யுவராஜ் 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க கோஹ்லி 37 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர் . தோனிக்கு பெரிய சவாலாக அமைந்தது . தனி ஆளாகப் போராட ஆரம்பித்தார். இவருடன் இணைந்த ரெய்னா, வந்த வேகத்தில் 2 சிக்சர்களை விளாசினார். ஆனால் இவரது விளாசல் நீண்ட நேரம் நிலைக்க வில்லை. ரந்திவ் பந்தை சிக்சருக்கு விரட்ட நினைத்த இவர், 29 ஓட்டங்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த வீரர்கள் நின்று நிலைத்து ஆடமுடியவில்லை . இலங்கை அணியின் சிறந்த பந்து வீச்சு மற்றும் சிறந்த களத்தடுப்பு ஆகியவற்றுக்கு ஓட்டங்களை பெற தடுமாறிய இந்திய அணி 225 ஓட்டங்களை மட்டும் பெற்றது . சகல விக்கட்டுகளையும் இழந்தது .
பெரேரா, ரந்திவ் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர் . போட்டியின் ஆட்டநாயகனாக சதம் பெற்ற டில்ஷான் தெரிவானார் . போட்டியின் தொடர் நாயகனாக சேவாக் தெரிவானார் .
கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
4 comments:
enathu vaalththukkalum.
srilankan ceicket team is my favourite. thanks pavi.
mano
Thiramaisalikalukku vazhththukkal.
oruvelai newzeland poyirukkalamo finalukku?
நன்றி மனோ
நன்றி குமார்
Post a Comment