Tuesday, March 2, 2010

வாழ்க வளமுடன்

http://www.bbc.co.uk/comedy/content/images/2007/08/16/goodlife_1_396x222.jpg

இந்த பூமியில் பிறந்த அனைவரும் நல்லவர்களாக இருந்து , நல்லவர்களாக வாழ்ந்து வளமுடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பு . அதில் சிலர் நல்லவர்களாக இருந்து சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கெட்டவர்களாக மாறுபவர்களும் உண்டு . திருந்தி நல்லவர்களாக இருப்பவர்களும் உண்டு .

எல்லோருக்கும் நாம் எப்போது பிறந்தோம் என்று தெரியும் . எப்போது இறப்போம் என்று தெரியாது . நாம் செய்யும் நல்லது , கெட்டதை பொறுத்து தான் எமது ஆயுள் காலமும் இருக்கிறது .

எல்லோருக்கும் நாவடக்கம் மிகவும் முக்கியம் .தீயினால் சுட்ட புண் ஆறும் , நாவினால் சுட்ட புண் ஆறாது என்பார்கள் . நரம்பு இல்லாத நாக்கால் எதனையும் பேசலாம் . அது எப்பிடி பேசுகின்றோம் , என்ன பேசுகின்றோம் என்று காலம் , சூழ்நிலை பார்த்து பேச வேண்டும் . இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படி பேச்சாலே பேசி கெட்டவர்கள், வாயாடிகள் என்று பல கேட்ட பெயர் வாங்குவோரும் உண்டு .

வாழ்க்கையில் நல்லவர்களாக இருந்து நல்லதை செய்து பேரின்ப பெறு வாழ்வு  வாழுங்கள் . எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைவதில்லை . அப்படி அமையாதவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்பிடி சிறப்பாக வாழ முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும் .

எல்லோரும் வளமாக வாழ வாழ்த்துகின்றேன் நானும் . உங்களில் ஒருவராக ......................
 

1 comment:

akila said...

vallka valamudan pavi.