Sunday, March 14, 2010
உன்னை அறிந்தால்
உங்கள் எல்லோருக்குள்ளும் ஒவ்வொரு திறமைகள் உண்டு . மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை . ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள் . நிறத்தில், குணத்தில் என்று வேறுபடுகிறார்கள் தானே . அதேபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு .
அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் பங்கு உண்டு . பெற்றோர்களும் தமது பிள்ளை எதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதையும் அவதானிக்க வேண்டும் . அவனுக்கு அதிக ஈடுபாடு எதில் உண்டோ அதன்படி அவனை படிக்க வைத்தால் அவன் இன்னும் முன்னேறுவான் .
இப்போதைய பெற்றோர்கள் எல்லோரும் அயல் வீட்டு பொடியன் அதை படிக்கிறான் , அந்த படிப்பு படிக்கிறான் . நீ என்ன விளையாடி கொண்டு திரிகிறாய் என தம் பிள்ளைகளை பேசுவார்கள் . நீங்கள் மற்றையவர்களை உதாரணம் காட்டாமல் அவனால் எது முடியும் ? எந்த பாடத்தில் அவன் கூடுதலான புள்ளிகள் பெறுகிறான் ? அதனை அவதானித்து அந்த படிப்பை படிக்க வையுங்கள் .
படித்து தேர்வில் பாஸ் பண்ணாவிட்டால் எல்லாம் முடிந்து போய் விட்டதே என கவலை கொள்ளாதீர்கள் . தோல்விகள் தான் வெற்றியின் முதல் படி . ஏணியில் ஏறும்போது ஒவ்வொரு படிகளாக காலை வைத்து தான் ஏற முடியும் . உடனே உச்சியில் ஏற வேண்டும் என்றால் கீழே விழ வேண்டியது தான் . அதுபோலதான் எந்த வேலை ஆயினும் உடனே முன்னேற முடியாது . மெல்ல மெல்லத்தான் முன்னேற முடியும் .
எல்லோருக்குள்ளும் ஒவ்வொரு சக்தி இருக்கு . அதனை வெளிக்கொண்டு வரும்போது தான் அவனுக்கு தான் யார் என்பதே விளங்குகிறது . சமூகம் உணருகின்றது .
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் என்ற பாடலில் எவ்வளவு அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன .
"மானம் பெரியதென வாழும் மனிதர்களை மான் என்று சொல்வது இல்லையா, தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவது இல்லையா? "என்ன அருமையான பாடல் வரிகள் .
எல்லோரும் சாதிக்க
பிறந்தவர்கள் - என்பதை
உணர்ந்தால் உங்களுக்குள்
இருக்கும் சிங்கத்தை
தட்டி எழுப்புங்கள்
உங்களின் புகழை
நாளை ஊர்
அறியும் ..............
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
super pavi
kpoi
thodaraddum unkal pathivukal
siva
Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)
நன்றி கோபி
நன்றி சிவா
Post a Comment