Friday, March 12, 2010

லாரஸ் விருது உசைன் போல்ட் வசம்

http://humankinetics.files.wordpress.com/2008/12/usain-bolt-olympics-200m.jpg 


உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதாக கருதப்படுகின்றது லாரஸ் விருது . இந்த விருதை உசேன் போல்ட் பெற்று இருக்கிறார். சிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் லாரஸ் விருதை, ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் கைப்பற்றி உள்ளார் . 

சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்க டெனிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் வென்றுள்ளார் .
http://english.people.com.cn/200505/17/images/roger2.jpg  
ஜேர்மனியின் டைம்லர், சுவிட்சர்லாந்தின் ரிச்மண்ட் ஆகிய பிரபல நிறுவனங்கள் இணைந்து கடந்த 1999ம் ஆண்டு லாரஸ் விருதுகளை அறிமுகப்படுத்தின. கடந்த 2000ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லாரஸ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது உட்பட 10 பிரிவுகளின் கீழ், விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது .

சிறந்த வீரருக்கான விருதை கடந்த 2005 ம் ஆண்டு முதல் 2008 வரை 4 முறை பெற்று அசத்தியுள்ளார் டெனிசில் முடிசூடா மன்னனான  சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, அபுதாபியில் நடைபெற்றது . 


ஒலிம்பிக் சம்பியனான போல்ட் 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ளார். அதற்காக இவருக்கு இந்த விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது .  

2 comments:

Anonymous said...

nalla pathivu.......


kajini.

Pavi said...

நன்றி கஜினி. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்