Monday, March 1, 2010

சமையலில் தினமும் வெந்தயம்

படிமம்:Fenugeek.JPG
நமது சமையலில் அன்றாடம் வெந்தயம் பாவிக்க வேண்டும் . அது உடம்புக்கு மிகவும் நல்லது. சமையலில் சேர்த்தால் கறிகளும் சுவையாக இருக்கும் .  



நாம் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும்  இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.

http://4.bp.blogspot.com/_JEd3jYVLcYY/SQclnGcuw1I/AAAAAAAAAQI/LDn_NiD9Ejw/s320/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.jpgஉணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.அது உங்களுக்கு மிகுந்த பயனை தரும் .வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும்  உங்களுக்கு வராது .


http://2.bp.blogspot.com/_wJZCYJ4L9w8/SrCODz7scJI/AAAAAAAAD6E/AoJRS7BFTPg/s320/v139Venthayam.gif 
நிறைய முடி உதிர்ந்து  கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். அரைத்து தூள் ஆக்கி பயன்படுத்த வேண்டும் . வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். 

http://www.thedailygreen.com/cm/thedailygreen/images/use-ketchup-lush-hair-lg.jpg 
முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வந்தால் மிகவும் நல்லது . வாரம் ஒருமுறை இப்படி பயன்படுத்தி தலைக்கு குளித்து வாருங்கள் . அப்புறம் என்ன ? முடி கொட்டாமல் பார்த்து கொள்ளலாம் . 

தினமும் இரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை பொடித்தோ, முழுசாகவோ கொடுத்து வந்தால் ரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை  வடிகட்டிக் குடிக்கலாம்.

http://www.dinakaran.com/Healthnew/H_image/ht168.jpg 
 இது மிகவும் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது . கணையம், கல்லீரல் வீக்கம், வயிற்றுப் போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து. வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது, வெந்தயநீர் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். சிறுநீர்ப்போக்கை சீராக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கூட கொடுப்பார்கள் .
http://farm1.static.flickr.com/204/462387741_4f63d9c254.jpg
வெந்தய குழம்பு                                                                   
வெந்தயத்தின் குண நலன்களை அறிந்து வெந்தயத்தை பாவியுங்கள் . சிறந்த பலனை அடைவீர்கள் .
  




 

10 comments:

நித்தி said...

வெந்தயத்தை பற்றியும் அதன் மருத்துவ பலனையும் தாங்கள் படைத்துள்ள இப்பதிவிற்க்கு நன்றிகள் பல.....தொடர்ந்து எழுதவும்...

Anonymous said...

pavi ippadiyana akkankal varavetkkappadukinrana..........


anpudan
anpu

Anonymous said...

ippadiyana aakkankal varavetkappadukinrana.
thodarnthu eluthunkal pavi.


anpudan
anpu

Anonymous said...

nalla pathivu............


abarna

akila said...

அருமையான பதிவு.
வெந்தயத்துக்கு இவ்வளவு மகிமை என்று இப்பதான் நான் அறிந்து கொண்டேன் பவி.

Pavi said...

நன்றி உங்கள் வருகைக்கு நித்தியானந்தம்.
தொடர்ந்தும் என்னிடமிருந்து நல்ல பதிவுகளை எதிர்பாருங்கள் .

Pavi said...

நன்றி அன்பு

Pavi said...

நன்றி உங்கள் வருகைக்கு அபர்ணா

Pavi said...

நன்றி உங்கள் வருகைக்கு அகிலா.
ம்ம்ம்ம் இப்பயாவது அறிந்து கொண்டீர்களே ............

Anonymous said...

miga nandri idan sirappu ippodhu engaluku migavum udhaviyaka irundhadhu nandri nandri nandri...