Tuesday, April 6, 2010

ர‌ஜினி பார்க்க விரும்பும் படம்



ரஜனி இப்போது வந்து ஓடிக்கொண்டு இருக்கும் படங்களில் பார்க்க ஆசைப்படும் படம் அங்காடித்தெரு என்ற படம் . அதை அவரே பார்க்க முன்வர காரணம் அந்த படத்தின் ஜதார்த்தம் தான் .



ர‌ஜினி அவராகவே ஒரு படத்தை பார்க்க விரும்புவது என்பது எப்போதாவதுதான். ஒரு படத்தைப் பற்றி அபரி‌மிதமான விமர்சனங்கள் வரும்போது மட்டுமே ர‌ஜினியிடமிருந்து அப்படியொரு ஆசை வெளிப்படும்.இப்போது கொஞ்சம் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் ரஜனி இந்த படத்தை பார்க்க ஆசை படுகின்றார் .

ஒரு படத்தின் வெற்றியை பாடல்களும் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் பார்த்தால் அங்காடித்தெரு படத்தில் வரும் பாடல்கள் எல்லாம் அருமை . எல்லாம் கேட்க கூடியதாக இருக்கிறது . நல்ல பாடல்கள் . சூப்பர் ஹிட் பாடல்கள். அவள் அப்படி ஒன்றும் அழகில்லை சூப்பர் பாடல் . எல்லோருக்கும் பிடித்த பாடல் . காட்சியமைப்பும் அருமை .



வசந்தபாலன் ஏற்கனவே நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் . அவரின் படங்களில் ஜதார்த்தமும் , எம் கண்முன் நடக்கும் அசம்பாவிதங்கள்  , சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள்  என்பனவற்றை எம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவார் . அது அவரின் தனி பாங்கு என்று தான் சொல்ல வேண்டும் .


வழக்கமான சினிமா விமர்சகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவை எப்போதும் சந்தேகத்தோடு பார்க்கும் எல்லோரும்  வசந்தபாலன் எடுத்துக் கொண்ட கதைக்களத்தையும், அது பேசும் பிரச்சனைகளையும் மனம் திறந்து பாராட்டுகிறார்கள். அந்த பாராட்டுகள் தான் இன்னும் அவரை பல கோணங்களில் யோசிக்க  வைத்து  இன்னும் ஜதார்த்த படங்கள் வெளிவர வழிசமைக்கும் . இப்படியான படங்கள் வரும்போது நாமும் அவற்றை பார்த்து அந்த படங்களை வெற்றி படமாக்க வேண்டும் . ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் .


நச்சத்திர நடிகர்களான விஜய், அஜித் , சூர்யா , விக்ரம் போன்றவர்களின் படங்கள் தான் பாப்போம் என்றில்லாமல் இப்படியான நல்ல படங்கள் வரும் போது அவற்றையும் பார்த்து அவற்றுக்கும் வரவேற்பு கொடுக்கும் போது தான் தமிழ் சினிமாவில் வித்தியாசமான , ஜதார்த்தமான படங்கள்  இன்னும் வரும் . இப்படியான படங்கள் வெளிவரும் . 

ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒன்றிணைக்கும் அங்காடித்தெரு போன்ற இப்படியான படங்கள் எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் உருவாகும். அப்படியான படங்களை எல்லோரும் பார்க்க வேண்டும் . பெரிய நச்சத்திர நடிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் .  ரஜனியும் இந்த படத்தை பார்க்க விரும்புவது வரவேற்க தக்கது தான் .
http://1.bp.blogspot.com/_zxFZ5P8Mv-E/SHDdcInmJ-I/AAAAAAAABlc/bjy5yfs7nik/s400/vasantha%2Bbalan%2Bveyil%2Bfilm%2Bdirector.jpg
வசந்தபாலனும் , கே. எஸ் .ரவிக்குமாரும்

ரசிகர்களை கேளிக்கைப்படுத்தும் படங்களுக்கு மத்தியில் கேள்வி கேட்பது மாதி‌ரி எப்போதாவதுதான் ஒரு படம்  வரும் . வசந்தபாலனின் அங்காடித்தெரு படமும் அவ்வாறே .  யல்பான படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் வரிசையில் வசந்தபாலனும் முக்கிய இடத்தை பிடிக்கின்றார்.
http://i41.tinypic.com/111jtc2.jpg
இந்த படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் சிறப்பான, ஜதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். ஒப்பனை இல்லை. இயல்பாக இருக்கிறது. இயல்பாக நடித்தும் இருக்கிறார்கள் . எல்லோரும் பார்க்க வேண்டிய படம் அங்காடித்தெரு .






10 comments:

Karthik Vasudevan said...

உங்கள் பதிவில் இருக்கும் புகைப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமாருடன் இருப்பது வசந்தபாலன் இல்லை என்று நினைக்கிறேன்.

S Maharajan said...

//kaartz said...
உங்கள் பதிவில் இருக்கும் புகைப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமாருடன் இருப்பது வசந்தபாலன் இல்லை என்று நினைக்கிறேன்//
ஆம் பவி அவர் இல்லை வசந்தபாலன்
தலைவர் பார்க்க விரும்பிய படம் என்றால் உடனே
பார்த்து விட வேண்டியதுதான்.

நாடோடித்தோழன் said...

நிச்சயம் அது வசந்தபாலன் இல்லை.. என்னுடைய மாறுபட்ட விமர்சனத்தை காண உங்களை அழைக்கின்றேன்...
http://karuthuchidharal.blogspot.com/2010/04/blog-post_06.html

நித்தி said...

தரமான படம் பவி...ரஜினிகாந்த்திற்கு மட்டுமில்லை எல்லா தரப்பினருக்கும் பிடித்த ஒரு படம் தான் அங்காடி தெரு. என்னதான் பிரம்மாண்டமான படங்கள் தமிழில் வந்தாலும் மக்களை வெகுவாக கவர்வது யதார்த்தமாக எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் தான்... உதாரணமாக சுப்ரமணியபுரம்,நாடோடிகள் படத்தையும் சொல்லலாம்....

Pavi said...

நன்றி .
எனக்கு தெரியாது வசந்தபாலனை .
உங்கள் தகவலுக்கு நன்றி .

Pavi said...

நன்றி மகாராஜன் .
என் மீது தான் தவறு உள்ளது என நினைக்கிறேன் .
எனக்கு கே. எஸ் .ரவிக்குமாரை தெரியும் . வசந்தபாலனை தெரியாது . வசந்தபாலன் என்று சேர்ச் பண்ணினேன். இந்த படம் கிடைத்தது . அதுதான் போட்டேன் . தவறுக்கு வருந்துகிறேன் .

Pavi said...

நன்றி நாடோடித்தோழன்.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் நீங்கள் சொல்வது சரி தான் .நன்றி நித்தியானந்தம்

Pavi said...

நன்றி ஜெய்லானி
எனக்கும் இந்த வைர விருது கொடுத்தமைக்கு .
நான் வாங்கும் முதலாவது விருது என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசம்

Unknown said...

ஹாய் பவி, நல்ல படத்தை விமர்சித்தமைக்கு நன்றி.
அங்காடி தெரு இயக்குனர் வசந்தபாலனின் படம்
வேண்டுமா?
கீழே கொடுத்துள்ள
இப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகனின் தளத்தில் கிடைப்பார்.
(கண்ணடி போட்டு ஒயிலாக இருப்பார்)
சங்கர்
http://www.jeyamohan.in/?p=6976