Thursday, July 14, 2011

தோல்வியை தவிர்ப்பது எப்படி ?


எந்த விடயத்திலும் நாம் உடனே வெற்றி பெற முடியாது . பல தோல்விகளை கண்டுதான் வெற்றியை அடைகின்றோம் . இது எல்லோருக்கும் பொதுவானது . நாம் எப்போதுமே வெற்றி பெற வேண்டும் , உடனே இந்த விடயத்தில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பது தவறு . ஆறு அடி ஏறி நான்கு அடி சறுக்கி கஷ்டப்பட்டு பெறும் வெற்றி தான் மகத்தானது . நிலைத்து நிற்கக்கூடியது . 
http://3.bp.blogspot.com/-gfXLVPr8odw/TdJTzlCJoAI/AAAAAAAACUo/_ujlu6Ign1s/s1600/4.jpg
நாம் எல்லோரும் பொதுவாக பரீட்சையில் தோல்வி அடைகிறோம் . சிலர் காதலில் தோல்வி அடைகிறார்கள் , பலர் விளையாட்டில் தோல்வி அடைகிறார்கள் , வாழ்க்கையில் தோல்வி என பலவற்றை சொல்லிக் கொண்டு போகலாம் . வெற்றி, தோல்வி, ஏமாற்றம், கோபம், துரோகம், காதல்,கண்ணீர், வலி, அவமானம் என்று தவிர்க்கவே முடியாதவைகளாக நிறைய உள்ளன. வலி, அவமானம், தோல்வி, ஏமாற்றம் என்று மேற் கண்டவைகளை தவிர்த்து விட அல்லது அதிலிருந்து மீண்டு ஓடி விட நினைப்போம். ஆனால் தவிர்க்கவே முடியாமலே போகிறது .ஏதாவது சந்தர்ப்பத்தில் நாம் இவற்றை எல்லாம் அனுபவிக்கின்றோம் .
http://images.mylot.com/userImages/images/postphotos/1897134.jpg
விளையாட்டில் பதினைந்து பேர் கலந்து கொள்ளும்போது அதில் ஒருவருக்கு மட்டுமே முதல் இடம் கிடைக்கும் . மற்றவர்கள் உடனே நாம் தோல்வி அடைந்து விட்டோமே என சோர்ந்து விடக்கூடாது . ஏன் நாம் தோற்றோம் . பயிற்சி போதவில்லை . எனவே அதன் காரணத்தை கண்டறிந்து போதிய அளவு பயிற்சி பெற்று இன்னுமொருமுறை விளையாடும் போது வெற்றி அடைகிறோம் . வெற்றி என்பது மாறி மாறி வரும் . ஒருவர் எல்லா தடைவைகளும் வெற்றி பெற முடியாது . ஒருவர் எல்லதடைவைகளும் தொற்றுக் கொண்டும் இருப்பதில்லை . 
http://uyirvani.com/image/images/sad.jpg
வாழ்க்கை எனும் வட்டப் பாதையில் வெற்றி - தோல்வி , சந்தோசம் - துக்கம் , நன்மை- தீமை என ஒவ்வொன்று உள்ளது . இக்கரையில் இருந்து அக்கறைக்கு கடக்க வேண்டும் என்று நாம் முடிவு எடுத்து விட்டோமானால் சிரமங்கள் வரத்தான் செய்யும் . அவற்றை எல்லாம் தாண்டி வெற்றி பெற வேண்டும் . அப்படி பெற்ற வெற்றி எமக்கு எவ்வளவு சந்தோசத்தை தருகிறது . 

கிரிக்கட் விளையாட்டில் ஒவ்வொரு முறையும் எல்லா நாடுகளிடமும் தோல்வி அடைந்து விட்டு ஒருமுறை வெற்றி பெறுகிறது அந்த அணி அப்போது அவர்களின் உவகைக்கு அளவே இல்லை .இதே ஒருமுறையும் தோல்வி அடையாமல் வெற்றி பெற்ற அணி ஒருமுறை தோல்வி அடைகின்ற போது அந்த அணியால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை . ஜீரணித்து கொள்கிறார்கள் இல்லை . விளையாடும் போது ஒன்றில் வெற்றி வரும் அல்லது தோல்வி வரும் . நாம் நாணயத்தை சுண்டும் போது ஒன்றில் பூவிழும் அல்லது தலை விழும் . இதுதான் நியதி . 

http://www.challaram.com/images/4237.jpg
நமது தோல்வி, அடுத்தவரின் வெற்றி என்றாகும் போது -அந்த தோல்வியை எப்படி தவிர்க்க முடியும். ஒரு வேளை நாம் வெற்றியாளராக மாறினால், எதிராளி தோல்வியை தவிர்க்க முடியாதவராக ஆகிறார். தோல்வியை தவிர்க்க விரும்பினால் – நாம் வெற்றியையும் தவிர்த்தே ஆக வேண்டும். அதனால் நாம் தோல்வியை தவிர்க்கவே முடியாது

ஆசைப்பட்டதை அடைவதட்க்கும் , போட்டிகளில் ஜெயிக்கவும் , கனவை நனவாக்கவும் , எதிலும் முதன்மை பெறுவதற்க்கும் எமக்கு வெற்றி முக்கியம் என எண்ணுகின்றோம் . தோல்விதான் வெற்றியின் முதல் படி . தொவியை கண்டவுடன் துவண்டு விடாது இருக்க வேண்டும் . அடுத்தமுறை எப்படி வெற்றி பெறுவது எப்படி என சிந்தியுங்கள் . முக்கியமாக இளையர்கள் எல்லோரும் தோல்வியை கண்டு துவண்டு விடுகிறார்கள் . 

தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
http://1.bp.blogspot.com/_S9scUEWRGfQ/SqLrYvpivEI/AAAAAAAACCU/dnIwqbICfds/s400/i_m_too_sad_to_tell_you.jpg
"வெற்றி நமது  நோக்கம். அதற்குத் தேவை ஊக்கம். தோல்வியால் வரக்கூடாது ஏக்கம்" . 
“வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. புத்திசாலி மனிதரெல்லாம் வெற்ற காண்பதில்லை” என கண்ணதாசன் ஒரு பாடல் வரியில் குறிப்பிட்டுள்ளார் . 
ஒருவனுக்குத் தோல்வி வரலாம். தோல்வி மனப்பான்மை வந்துவிடக்கூடாது.வெற்றி என்பது முதலிடத்தைப் பிடிப்பதுதான் என்பது சரியே. ஆனால், எந் இடத்தைப் பிடித்தாலும், சென்ற ஆண்டைவிட ஒரு படியாது முன்னேற்றம் இருந்தால் அதுவும் வெற்றிதான் என்பது எப்படித் தவறாகும்? அடுக்கடுக்காக தோல்விகளை மட்டுமே கண்டுவந்த ஆபிரகாம் லிங்கனை, அமெரிக்க ஜனாதிபதி என்ற இறுதி வெற்றி, வெற்றியாளர் ஆக்க வில்லையா?  ஆரம்பத்தோல்விகளை மட்டும் வைத்து, ஒருவரைத் தோல்வியாளர் என்று சொல்லிவிடமுடியுமா?
http://michaelhyatt.com/wp-content/uploads/2009/02/goal-setting-the-90-day-challenge.jpg
நாம் தோல்விகளை எப்படி தவிர்த்துக் கொள்ளலாம் என்றால் ஆண்டுக்கு ஆண்டு நாம் எம்மை முன்னேற்றி கொள்வது , செய்ய நினைத்ததை செய்து முடிப்பது , 
ஒன்பது முறை தோற்றாலும் பத்தாவது முறையும் முயற்சிப்பது, 

அடைய முடியாத்தை எண்ணி ஆதங்கப்படாமல், அடைந்தவைகளை ஆனந்தமாய் அனுபவிப்பது, 

எதையும் சாதிக்காவிட்டாலும், எதிலும், யாரிடமும் ஏமாந்து விடாமல் இருப்பது, 

தோல்வியைக் கண்டால் துவண்டுவிடாமல், வெற்றிப்பாதையை விட்டு விலகாமல் இருப்பது, 

நினைத்த இலக்கை அடையும்வரை, முயற்சிகளை நிறுத்தாமல் தொடர்வது. இவைதான் நாம் தோல்விகளை தவிர்க்கும் வழிகள்.


கஷ்டம் எமக்கெல்லாம்  மகிழ்ச்சியின் அருமை, பெருமையை சொல்கிறது. வலியும் அவமானமும், எம்மை எல்லோரையும் நேசிக்க வைக்கிறது . தோல்விகள்,   தேக்கங்கள் – எமக்கெல்லாம்  வாழ்க்கையின ஏற்ற இறக்கங்களை சொல்கிறது.நாம் எல்லோரும் தோல்வியை கண்டு துவண்டு விடாது வெற்றிக்காக பாடுபட வேண்டும் . 
 
4 comments:

சே.குமார் said...

அருமையான பயனுள்ள பதிவு.

மாய உலகம் said...

வெற்றி, தோல்வி, ஏமாற்றம், கோபம், துரோகம், காதல்,கண்ணீர், வலி, அவமானம் என்று தவிர்க்கவே முடியாதவைகளாக நிறைய உள்ளன. வலி, அவமானம், தோல்வி, ஏமாற்றம் என்று மேற் கண்டவைகளை தவிர்த்து விட அல்லது அதிலிருந்து மீண்டு ஓடி விட நினைப்போம். ஆனால் தவிர்க்கவே முடியாமலே போகிறது .ஏதாவது சந்தர்ப்பத்தில் நாம் இவற்றை எல்லாம் அனுபவிக்கின்றோம் .......
-----------------
உண்மையில் அனுபவபூர்வமான விசயங்கள்.......
என் செய்வது இவை எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனம் வேண்டுமே.....
rajeshnedveera

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி மாயஉலகம்