Friday, April 16, 2010

வென்றது டெல்லி அணி , தோற்றது சென்னை அணி

ஐபி​எல் கிரிக்​கெட் போட்​டி​யில் டெல்லி டேர்​டே​வில்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் 6 விக்​கெட்​டு​கள் வித்​தி​யா​சத்​தில் தோல்​வி​ய​டைந்​தது.​ இனிவரும் போட்டிகள் எல்லாம் மிகவும் முக்கியமான போட்டிகள் . அதி எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய சென்னை அணி நேற்றைய போட்டியிலும் தோல்வியை தழுவியது .
Gautham Gambhir of Delhi Daredevils drives 
against Chennai Super Kings at MAC Stadium on Thurday. Photo: K. 
Pichumani

  நாணய சுழற்ச்சியில் வென்று முத​லில் துடுப்பெடுத்து ஆடிய   சென்னை 9 விக்​கெட்​டு​களை இழந்து 112 ஓட்டங்களை மட்டுமே பெற்றது .  முன்னணி வீரர்கள் அனைவரினதும் பொறுப்பற்ற ஆட்டமே இதற்க்கு காரணம் . அடுத்து களம் இறங்​கிய டெல்லி அணி 4 விக்​கெட்​டு​களை இழந்து வெற்றி இலக்கை எட்​டி​யது.. டெல்லி அணியும் முக்கிய விக்கட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும் கம்பீரின் அதிரடியினால் டெல்லி அணி வெற்றி பெற்றது .
http://www.iplcricketlive.com/wp-content/uploads/2008/04/ipl_delhi_daredevils_launch_party.jpg
நெஹ்ராவின் 3 விக்கட்டுகளையும் , சேவாக் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர் .  அ​டுத்து களம் இறங்​கிய டெல்லி அணி தொடக்​கத்​தில் தடு​மா​றி​யது.​ 3-வது பந்​தில் வார்​னர் ஓட்டம்  ஏதும் எடுக்​கா​மல் ஆட்​டமி​ழந்​தார்.​ 2-வது ஓவ​ரில் சேவாக் 4 ஓட்டங்களுடன்  ஆட்​டம் இழந்​தார்.​ அதே ஓவ​ரில் தில்ஷானும்  பெவி​லி​யன் திரும்​பி​னார்.​ அ​டுத்து ஜோடி சேர்ந்த கேப்​டன் கம்​பீர்,​​ தினேஷ் கார்த்​திக் ஆகி​யோர் பொறு​மை​யாக விளை​யாடி ஓட்டங்களை  சேர்த்​த​னர்.​
http://www.contactmusic.com/pics/l/sport_ipl_090508/manpreet_gony_player_of_chennai_super_kings_plays_a_shot_during_the_ipl_t-20_match_between_delhi_daredevils_vs_chennai_super_kings_at_feroz_shah_kotla_1857597.jpg
18.4 ஓவர்​க​ளில் டெல்லி அணி 113 ஓட்டங்கள்  எடுத்து 6 விக்​கெட்​டு​கள் வித்​தி​யா​சத்​தில் வென்​றது.​ கம்​பீர் 57 ஓட்டங்களுடனும் ,  மன்​ஹாஸ் 25 ஓட்டங்களுடன்  கடைசி வரை ஆட்​டம் இழக்​கா​மல் இருந்​த​னர்.​

12 comments:

S Maharajan said...

Ithu Highlights Effect
Thanks pavi

Anonymous said...

chennai ani arai iruthikku pokumo theriyavillai.


mano

Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

பொறுத்திருந்து பாப்போம்
நன்றி மனோ

பாலா said...

இப்போதுதான் இத்தொடரில் வேகம் பிடித்துள்ளது. என்னை பொறுத்தவரை சுவாரசியம் மட்டுமே முக்கியம். யார் ஜெயித்தாலும் கவலை இல்லை.

ஞானப்பழம் said...

நான் எனது ஆதரவை டெக்கான் சார்செர்ஸ் அணிக்கு அளிப்பதாகவுள்ளேன்.. இதுக்கும் என்னை 'தமிழினத் துரோகி' என்று யாராச்சும் சொன்ன கடுப்பாயிடுவேன்! :P

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் அதுவும் சரிதான்
நன்றி பாலா

Pavi said...

உங்க கருத்த, விருப்பத்த நீங்க சொல்லுறீங்க .
நாங்க அப்பிடி ஒன்றும் சொல்ல மாட்டோம் .
நன்றி ஞானப்பழம்

ஞானப்பழம் said...

ஆனா நேத்து நடந்த போட்டி செம.. யாருமே எதிர்பார்க்கல கடைசி இரண்டு ஓவர்ல இருபத்தைந்து ரன்கள் தோனி அடிப்பார்னு!
நா ஆதரவு தராட்டிதான் அவங்க வெற்றி அடையறாங்க :P

Bala said...

இது பிக்சிங் ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன். அரையிறுதி போட்டிகள் பெங்களூருவில் நடப்பதால் பெங்களூரு, சென்னை அணிகள் கண்டிப்பாக அரையிறுதி வரும் என்று என் நண்பர் ஒருவர் அடித்து கூறினார். அது போலவே நடந்தது. ஆனால் இப்போது குண்டு வெடிப்பு காரணமாக இடம் மாற்ற பட்டு விட்டது. இது பற்றி நான் ஏற்கனவே வெளியிட்ட பதிவு
http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post.html

Pavi said...

நன்றி ஞானப்பழம்

Pavi said...

நன்றி பாலா