Monday, June 7, 2010
சுறாவை விட சிங்கம் நன்றாக இருக்குது
நான் இந்தியாவுக்கு போய் பார்த்த படம் இரண்டு . ஒன்று சுறா , மற்றது சிங்கம் . விஜயின் ஐம்பதாவது படமாக வெளிவந்தது சுறா . பல எதிர்பார்ப்புகளுடன் போன ரசிகர்களுக்கு இம்முறையும் ஏமாற்றம் தான் மிஞ்சியது .
தமன்னாவுக்காக ஒரு கூட்டம் படம் பார்க்க வருகிறது . இப்போது வெளிவரும் விஜயின் படங்கள் எல்லாம் நல்ல சிறந்த கதைகளே இல்லை . நல்ல கதைகளை தேர்ந்து எடுத்தால் படமும் நன்றாக ஓடும் . ரசிகர்களும் படம் பார்க்க வருவார்கள் . விஜயின் இப்போது வரும் படங்கள் எல்லாம் விஜயின் நடனத்தில் முன்னேற்றம் இருக்கிறதே தவிர வேறு விடயங்களில் அவர் முன்னேறுவதாக தெரியவில்லை .
பாடல்கள் அருமை . காட்ச்சிகள் அருமை . உடை அலங்காரங்கள் எல்லாம் அழகாக இருக்கிறது . அதைவிட விஜயின் நடன அசைவுகள் எல்லாம் பிரமாதம் . படத்தில் வரும் பாடகள் எல்லாம் சூப்பர் ஹிட் தான் . அதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
கதையில் கோட்டை விடுகிறாரே அதுதான் பிரச்சனை . விஜய் என்றும் இளமையாக இருக்கிறார் . உடம்பை சிலிமாக வைத்திருக்கிறார் . தமன்னா அழகோ அழகு . தன்பங்கை சரிவர செய்கிறார் .
சூர்யாவின் சிங்கம் கர்ஜிக்கிறது . நல்ல கதை , பாடல்கள் , சிறந்த நடிப்பு , ஒரு மசாலா படம் . சூர்யாவின் இருபத்து ஐந்தாவது படம் சிங்கம் . ஹரியின் படம் . அனுஷ்கா அழகாக வந்து போகிறார் . சூர்யாவின் உடம்பு கட்டும் , நடிப்பும் , பொலிஸ் வேடமும் சிறப்பாகவும் , பிரம்மாதமாகவும் உள்ளது . காக்க காக்க படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் பொலிஸ் வேடம் தான் இந்த சிங்கம் .
பாடல்கள் அருமை . இந்த படத்தில் சூர்யா நடனத்திலும் தேறி இருக்கிறார் . பாடல்கள் அருமை . சூர்யா நல்ல கதைகளை தேர்ந்து எடுக்கிறார் .
அதில் அவர் முழு கவனம் செலுத்துகிறார் . அனுஷ்காவும் தனக்குரிய பாத்திரத்தை சிறப்பாக செய்கிறார் . அனுஷ்கா வரும் நேரங்களில் விசில் பறக்கிறது . எனக்கு சுறாவை விட சிங்கம் பிடிச்சு இருக்கு .
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நான் தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. விஜய் படம்னு எடுத்துகிட்டா கில்லிதான் கடைசி. நான் படிக்கும்போது தியேட்டர்ல ஆபரேட்டரா வேலை செய்த காலத்துல அங்க வர்ற படத்துல பத்துக்கு ஆறு படம் கொடுத்த காசு வீண் போகலைன்னு சொல்ல வைக்கும். ஆனா இப்ப?
இந்தியாவுக்கு வந்ததுக்கு
இப்படியா?
welcome again
:)))
நன்றி சரவணன்
இல்லை மதுமிதா
படமும் பார்த்தேன் , கோவில்களுக்கும் சென்றேன்
நன்றி பாலா
நன்றி
Post a Comment