Wednesday, June 16, 2010

விதவைகளுக்கு மறுவாழ்வு அவசியம்

எல்லோரும் இந்த உலகத்தில் பிறக்கின்றோம் . வாழ்கின்றோம் . மடிகின்றோம் . இது உலக நியதி . எல்லோரும் சந்தோசமாகவும் , சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று தான் எல்லோரும் நினைக்கின்றோம் , வாழ்த்துகின்றோம் . அப்படி எல்லோருக்கும் சந்தோசம் நிலைக்குதா? இல்லவே இல்லை .......
http://images.allmoviephoto.com/2007_In_the_Land_of_Women/2007_in_the_land_of_women_032.jpg
ஒரு பெண்ணை கஷ்டப்பட்டு சீதனம் எல்லாம் கொடுத்து ஒரு ஆண்மகனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறோம் . கொஞ்ச நாட்களுக்கு வாழ்கிறார்கள் சந்தோசமாக . அவன் வாகன விபத்து ஒன்று நடந்து அதில் இறந்து விடுகிறான் . அப்போ அந்த பெண்ணின் நிலைதான் என்ன ? பொட்டை இழக்கிறாள் , பூவை இழக்கிறாள் ? ஆனால் அவளுக்கு வயது இருபத்தைந்து . அவளின் எதிர்காலம் ?????
http://geenageorge9.files.wordpress.com/2009/03/sreedev61.jpg
இன்னொரு சம்பவம் ஒன்று . கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைகள் பிறந்து விட்ட நிலையில் கணவன் நோய்வாய் பட்டு இறந்து விட்டான் . அந்த பெண்ணினதும் , இரு பிள்ளைகளின் நிலை என்ன ? அவளுக்கு கணவன் இல்லை , பிள்ளைகளுக்கு அப்பா இல்லை . என்ன செய்வது ???
http://homemakerbarbi.com/wp-content/uploads/2009/02/womanspaceodissey.jpg
இப்படி ஏராளமான சம்பவங்கள் இந்த உலகத்தில் நடக்கின்றன . நடந்து கொண்டு இருக்கின்றன . எழுபது , எண்பது, அறுபது வயதில் கணவன் இறந்து விட்டால் பறுவாயில்லை. இவ்வளவு காலம் அந்த மனுஷன் எல்லா சந்தோசத்தையும் அனுபவித்து விட்டு இறுதி காலத்தில் கிடந்தது இழுவின்ணாமல் போய் விட்டுது என்று சொல்வார்கள் . இதே   முப்பது , நாப்பது வயதில் கணவன் இறந்து விட்டால் ஐயோ அவள் வந்த நேரம் அவன் பொய் விட்டான் , ஐயோ அவன் ஒரு பிள்ளை குட்டியையாவது பார்க்காமல் போய் விட்டான் , ஐயோ ஒரு சந்தோசத்தையும் காணாமல் போய் விட்டான் என்று சொல்வார்கள் .
http://www.slim4good.ltd.uk/DSC01057.JPG
இளம் வயதில் கணவனை இழக்கும் பெண்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறார்கள் . வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லாமலும் , மற்றையவர்களுக்கு எல்லாம் ஒரு பாரமாகவும் , சபைகளில் ஒரு அபசகுனமாகவும் பார்க்கும் நிலைமை அவளுக்கு ஏற்படுகிறது . எமது கலாச்சாரத்தில் அது இன்னமும் இருக்கிறது .
http://assets.nydailynews.com/img/2010/01/31/alg_911_mcnamara.jpg
ஒரு சுப காரியங்களுக்கு போகும் போது முன்னால் நிக்க கூடாது ,   சுப காரியங்களுக்கு நல்ல புடவை கட்ட கூடாது . பூ , மாலை தலையில் வைக்க கூடாது . ஒரு நடை பிணமாக அவளை மாற்றி விடுவார்கள் . அவள் தான் என்ன செய்வது . மற்றையவர்களுக்கு பயந்து வாழும் சூழ்நிலை அவளுக்கு . இந்த நிலைமை அவளுக்கு கணவன் உயிருடன் இருந்தால் வருமா ? அவள் மனம் எப்படி இருக்கும் ? வெம்பி வெம்பி அழுவாள் .......எவ்வளவு புண் படும் அவளுடைய  மனம். இவற்றை எல்லாம் இந்த சமூகம் யோசிக்கிறதா ?
http://i.dailymail.co.uk/i/pix/2008/11/03/article-0-02586B20000005DC-691_468x478.jpg
பெண்ணியம் பற்றி பேசுகிறார்கள் , பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி பேசுகிறார்கள் . இவற்றை பேச யாரும் இல்லை . முதலில் பெண்களுக்கு எதிரி பெண்கள் தான் . பெண்கள் முதலில் தாங்கள் எவ்வளவு முன்னுக்கு வந்தாலும் பெண்கள் பெண்களாக இருங்கள் . பெண்களுக்கு பெண்கள் ஒற்றுமையாக இருங்கள் . மாமி , மருமகள் சண்டை . இது தானே நடக்கிறது . மாமியும் ஒருநாள் மருமகளாக இருந்து வந்தவா தானே . அவற்றை எல்லாம் ஏன் யோசிக்கிறார்கள் இல்லை . எல்லா மாமி, மருமகளும் இல்லை . சில நல்ல மாமி, மருமகள் மாறும் உண்டு . மருமகளை தனது  மகளாக பார்க்கும் மாமிமாரும் நமது உலகில் உண்டு என்பதை மறுக்க முடியாது .
http://img.metro.co.uk/i/pix/2009/06/cryPA_450x300.jpg
ஆண்கள் திருமணம் ஆகி அவனது மனைவி இறந்து விட்டால் அவனுக்கு இன்னொரு பெண்ணை பார்த்து மறுமணம் செய்து வைக்கிறார்கள் . அதே ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் ஏன் பெண்களுக்கு இன்னொரு ஆணை பார்த்து அவளுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கலாம் தானே . ஏன் தயக்கம் ? ஏன் அதை இந்த சமூகம் விரும்புவதில்லை .


http://pictures.directnews.co.uk/liveimages/hospital+and+hands_1500_19455083_0_0_7037508_300.jpg
சில பெண்களும் இதை விரும்புவதில்லை . எப்படி நான் வாழ்ந்து முடித்து விட்டேன் , என் மனதில் அவரை தவிர இன்னொருவருக்கு இடம் இல்லை என்பவர்களும் உள்ளனர் . அதே ஒரு ஆண்மகன் சொல்வானா? ம்ம்ம் இல்லை . ஒருவர் , இருவரை தவிர .
http://filmjournal.net/dave1975/files/2006/09/lost-in-translation-3.jpg
இந்த உலகில் ஒரு ஆணின் துணை இல்லாமல் வாழ முடியாது பெண்களுக்கு . ஒருவனுக்கு ஒருத்தி இருக்க வேண்டும் . வாழ்வில் சந்தோசமாக வாழ்வதற்க்கு .  ஆண்களும் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க முன்வர வேண்டும் .  சில  ஆண்கள் கணவனை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்தும் இருக்கிறார்கள். இது வரவேற்க்க தக்க விடயம் .
http://www.indyapulse.com/indiaguide/images/IndianWedding.jpg
வாழும்வரைதான் வாழ்க்கை , சந்தோசம் எல்லாம் . சாகும்போது எமது நிலைபற்றி எமக்கே தெரியாது . இதுதான் இந்த வையகம் . எல்லோரும் எல்லா பேறும் பெற    வேண்டும் . துன்பங்களை இன்பமாக்கி வாழ்வில் வெற்றி நடை போட வேண்டும் .

6 comments:

ஸாதிகா said...

இடுகை அருமை.

M.Mani said...

உண்மை. இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட செங்கல்பட்டில்(நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரத்தின் அருகே வசிக்கின்றேன்) பதினைந்து நாட்களுக்குமுன் திருமணமான வாலிபர் விடுப்பு முடிந்து தான் நாளை பணியில் வந்து சேர்ந்துவிடுவேன் என்றுத் தான் பணிபுரியும் அலுவலகத்திற்கு வந்து சொல்லிவிட்டு வீட்டுக்திரும்பும்போது வாகன விபத்தில் பலியாகிவிட்டார் என்று செய்தித்தாளில் படித்ததிலிருந்து ஆண்டவன் மீதே வெறுப்புதான் வருகிறது.
இதற்கு நம் சமுதாயத்தில் நிறைய மாற்றங்கள் தேவை.
மா.மணி

Anonymous said...

good atricle

mano

Anonymous said...

mmmmm nalla irukku article. ellorukkum uthavum.


suba

Pavi said...

நன்றி ஸாதிகா

Pavi said...

மாற்றங்கள் அவசியம் .
நன்றி மாணிக்கம்