Wednesday, June 23, 2010

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது

 http://image55.webshots.com/55/1/46/59/537014659mCBbHR_ph.jpg
நாம் எல்லோரும் முகத்தை சுத்தமாக்குவது , குளிப்பது என்று மட்டுமே இருப்பதுண்டு . முக அழகுக்கு கொடுக்கும் முக்கியம் வேறொரு அங்கங்களுக்கும் கொடுப்பதில்லை . அது தான் உண்மை . ஒருவருடன் பேசும்போது நாம் எமது வாயை திறந்து தானே பேசுகிறோம் . இப்போது அந்த வாய் சுத்தமாக இருக்க வேண்டும் . அது எமக்கும் நல்லது, மற்றையவர்களுக்கும் நல்லது .
http://onlyhealth.files.wordpress.com/2009/12/teeth-main_full22.jpg
வாய்துர்நாற்றம் வீசும் போது நாம் பேசுவதை அருகில் நின்று கேட்பவருக்கு அசொவ்கரியமாக இருக்கும் அல்லவா ? எத்தனை வகை உணவுகளை உண்ணுகிறோம் . வாய்க்குள் எவ்வளவு மாப்பொருட்கள் தங்கி நிக்கும் . சரி இந்தா வாய் துர்நாற்றம் வீசுவதட்க்கான காரணம் நாம் உண்ணும் சில உணவு பொருட்கள் காரணமாகவும் , மதுபானம் , புகை பிடித்தல் போன்றவற்றாலும் , சிலவகை மருந்து பொருட்கள் காரணமாகவும் , நாக்கின் மீது காணப்படும் நுண்ணுயிர் படிவுகளாலும், முரசு நோய்களாலும் , உமிழ்நீர் சுரப்பு நோய்களாலும் , பல், முரசு , நாக்கிட்கிடையில் உணவுத்துணிக்கைகள் படிவதாலும் இந்த வாய் துர்நாற்றம் வீசுகிறது .
http://www.mcgill.ca/files/news/0609-insights-open.jpg
அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் , என எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய எல்லாம் என்னவெனில் வாய்துர்நாற்றம் வீசாமல் பார்த்து கொள்ள வேண்டும் . அன்றாடம் முக்கிய நபர்களுடன் பேசும் போது உங்கள் முக அழகு மட்டும் அழகல்ல , நீங்கள் பேசும் சொற்களும் , உங்களது வாயில் இருந்து வரும் தோணி பேச்சும் தான் . அந்த வாயை திறந்து பேசும் போது சுத்தமான காற்று வருவது போல இருக்க வேண்டுமே தவிர துர் நாற்றம் வீசும்படி இருத்தல் கூடாது .
http://rutgersday.files.wordpress.com/2010/03/mouth_open.jpg
இந்த வாய் துர்நாற்றத்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று பார்த்தோமானால் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் புளோரைட் கொண்ட பற்பசையினால் பல் துலக்க வேண்டும் . சாப்பிட்டவுடன் வாயை நன்கு துப்பரவாக்கி வாய் கொப்பிளிக்க வேண்டும் . நாக்கை இடைக்கிடை துப்பரவு செய்ய வேண்டும் .
http://business.nikkeibp.co.jp/article/eng/20091221/211811/ph01.jpg
பல் கட்டி இருப்பவர்கள் ஆயின் இரவு அந்த பற்களை கழற்றி தண்ணீருக்குள் போட்டு மறுநாள் காலை அதனை துப்பரவு செய்து  உபயோகிக்க  வேண்டும் . தொடர்ச்சியாக இனிப்புகளை பாவிப்பதை குறைக்க வேண்டும் . பற்சூத்தை இனிப்புகள் கூடுதலாக உண்பதால் தான் ஏற்படுகிறது .  இவ்வாறு இவற்றை பயன்படுத்துவதன் மூலம் வாய்துர்நாற்றத்தினை கட்டுப்படுத்தலாம் . வாய்துர்நாற்றம் இருப்பவர்கள் இந்த விடயங்களை கடைப்பிடித்து வந்தால் நீங்கள் இந்த வாய்துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் .
http://www.pickfords.co.uk/getimage.aspx.ID-144553.gif
நாம் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது . மற்றையவர்களும் சுத்தமாகவும் , சுகமாகவும் , ஆரோக்கியமாகவும் இருப்பது தான் முக்கியம் .

7 comments:

Praveenkumar said...

சுத்தத்தைபற்றி தெளிவாக நிறைய தகவல்கள் தொடுத்து கூறியிருக்கீங்க..! அருமை..!

Thamizhan said...

இரவில் படுக்குமுன் பல் துலக்குவதும்,தினமும் Floss எனும் நூல் போன்ற சிரு கயிற்றை பற்களுக்கு நடுவிலே விட்டு இழுத்துச் சுத்தம் செய்வதும் முக்கியம்.பற்களுக்கு நடுவில் மாட்டிக் கொள்ள்பவை புழுங்கி அழுகி,ஈற்றைக் கெடுத்து ஈறு நோய் வாய்ப் படுவதே நாற்றத்தின் முக்கிய காரணம்.பல கோடிக் கிருமிகள் அங்கே உறைகின்றன.
உடலிலேயே மிகவும் அசுத்தமானக் கிருமிகள் வளர்வது பற்களுக்கிடையே தான்.
இரவில் பிளாசு செய்வது தான் சிறந்த வழி.பல் துலக்கினால் மட்டும் போதாது.பற்களுக்கு இடையே பிளாசு செய்ய வேண்டும்.

Karthick Chidambaram said...

அருமை..! சுத்தத்தை பற்றி நிறைய தகவல்கள்!

Pavi said...

நன்றி குமார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

"இரவில் படுக்குமுன் பல் துலக்குவதும்,தினமும் Floss எனும் நூல் போன்ற சிரு கயிற்றை பற்களுக்கு நடுவிலே விட்டு இழுத்துச் சுத்தம் செய்வதும் முக்கியம்".
எனக்கு தெரிந்ததை நான் கூறினேன் . இன்னும் எனக்கு தெரியாத விடயங்களும் உள்ளன . உங்களுக்கு தெரிந்தவற்றையும் பகிந்து கொள்ளுங்கள் . எல்லோருக்கும் உதவும் . நன்றி தமிழன் . பயனுள்ள தகவல் தந்தமைக்கும் , உங்கள் வருகைக்கும்

Pavi said...

நன்றி கார்த்திக்

Riyas said...

GOOD POST..