Friday, July 2, 2010

அஜித்தின் 50 ஆவது படம்

 http://www.kolly365.com/wp-content/uploads/2009/04/ajith-happy-birthday.jpg
அஜித் கார் ரேசில் பங்குபற்றியதால் படங்களில் நடிக்கவில்லை . அசல் படத்திற்க்கு பின் அஜித் நடிக்கும் 50 ஆவது படம் தான் பெரும் சிக்கலாக உள்ளது . படத்தின் பெயர் மாற்றம் , இயக்குனர் மாற்றம் என பெரும் சில்லெடுப்புக்கு மத்தியில் சரியான விடை கிடைத்துள்ளது  அஜித் ரசிகர்களுக்கு .
http://3.bp.blogspot.com/_sb9yp2CsJVU/S5WNcWVy47I/AAAAAAAAR6U/Ail96ZF3_PE/s1600/Anushka-Lawrence-Muni-Part-2-movie.jpg
கெளதம் மேனன் அஜித்தின் படத்தில் இருந்து விலக தற்போது அந்த இடத்தை இயக்குனராக கெட்டியாக பிடித்துள்ளார் வெங்கட்பிரபு . அஜித்தின் 50 ஆவது படத்தின் இயக்குனர் வெங்கட்பிரவு என்று உறுதியாகி விட்டது . நாயகி விடயத்திலும் இருந்த சிக்கல் நீங்கி விட்டது .
http://hindia.in/tamilcinema/wp-content/uploads/2010/01/anushka-2.jpg
நாயகியாக அனுஷ்கா அஜித்துடன் ஜோடி சேரவுள்ளார். விஜய், சூர்யாவைத் தொடர்ந்து அடுத்து அஜித்துடன் இணைகிறார் . ஏற்கனவே விஜயின் வேட்டைக்காரன் படத்திலும் , சூர்யாவின் சிங்கம் படத்திலும் நடித்து உள்ளார் . சிங்கம் அனுஷ்காவுக்கு ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது .
http://3.bp.blogspot.com/_UDo-63xZh_k/SMIuXkmchWI/AAAAAAAAA_g/quWI5tmFYGA/s400/normal_ajith_F2_Tamil_Actor_Photo_Gallery_Ajith__.jpg
தற்போது அஜித்தின் 50 ஆவது படத்துக்கு "மங்காத்தா "என்று பெயர் இட்டுள்ளனர் . அஜீத் நடிக்க வெங்கட்பிரபு இயக்க, தயாநிதி அழகிரி  தயாரிக்கவுள்ள மங்காத்தா படத்தில் அஜீத்துக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா.  இயக்குனர் வெங்கட்பிரபு ஏற்கனவே சரோஜா , சென்னை08 போன்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பது தெரிந்ததே .
http://happyhyderabad.files.wordpress.com/2009/04/anushka4.jpg
அஜித்தின் படம் எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள் . எப்போது மங்காத்தா படம் வெளிவரும் என்பது இன்னும் தெரியாது . அஜித் முழுக்கவனமும் படத்தில் செலுத்தி தனது 50 படத்தில் சிறப்பாக நடித்து ,  நல்ல கதையம்சமுள்ள படமாக , எல்லோரும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய குடும்ப பாங்கான படமாக  அமைய வேண்டும் மங்காத்தா .

4 comments:

'பரிவை' சே.குமார் said...

மங்காத்தைவை அஜீத் ரசிகர்கள் எங்காத்தா என்று கொண்ட்டாடட்டும். தல மறுபடியும் தலை தூக்கட்டும்.

Anonymous said...

mmm nalla pathivu pavi


suba

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி சுபா