Saturday, July 3, 2010

பலம் வாய்ந்த பிரேசில் அணியை தோற்கடித்து, வெற்றி வாகை சூடியது நெதர்லாந்து அணி

http://2.bp.blogspot.com/_I66TKjh_WlU/SxpPz3w2pvI/AAAAAAAAAPc/j5Bk-yt2BAU/s400/FIFA-World-Cup.jpg
கால்ப்பந்தாட்ட ரசிகர்கள் இப்போது பரபரப்பான போட்டிகளை கண்டு கொண்டு இருக்கிறார்கள் . பல முன்னணி அணிகள் எல்லாம் ரசிகர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றன . அந்த வரிசையில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பிரேசில் அணியும் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது . நெதர்லாந்து அணி காலிறுதிக்குள் நுழைந்தது .
http://www.ukprogressive.co.uk/wp-content/themes/mimbo2.2/images/holland-fans-full.JPG
பரபரப்பின் உச்சத்தை அடைந்துள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டம் போர்ட் எலிசபெத்தில் நேற்று  தொடங்கியது. இதில் 5 முறை சாம்பியனும், இந்த உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணியான பிரேசிலும், நெதர்லாந்தும் மோதின.
http://www.football-wallpapers.com/wallpapers3/netherlands_3_1024x768.jpg
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் போட்டியில் பிரேசில் வெல்ல முடியும் என்ற பொதுவான நம்பிக்கை இருந்தது. அதற்கேற்ப ஆட்டத்தின் தொடக்கமும் இருந்தது. ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்திலேயே ராபின்ஹோ அபாரமான ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார்.
http://www.seethecup.com/wp-content/uploads/2009/10/brasil_venezuela.jpg
ஆனால்  சுதாரித்த நெதர்லாந்து பிரேசிலை முடக்கிப் போட்டு விட்டது. நெதர்லாந்தின் போராட்ட ஆட்டத்தால் பிரேசில் தடுமாறியது. இதனால் தொடர்ந்து அந்த அணியால்கோல் போட முடியவில்லை. அதேசமயம், நெதர்லாந்தும் கோல் போட முடியாமல் திணறியது. இப்படியாக முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கணக்கில் பிரேசிலுக்கு சாதகமாக முடிந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் துடிப்பான ஆட்டம் பிரமாதமாக இருந்தது. இந்த சமயத்தில் பிரேசிலுக்கு பேரதிர்ச்சி தந்தார் பெலிப்பி மெலோ. 58வது நிமிடத்தில் சேம் சைடு கோல் போட்டு விட்டார் மெலோ. இதனால் ஆட்டம் சம நிலையை எட்டியது.

இதனால் உற்சாகமடைந்த நெதர்லாந்து வீரர்கள் எப்படியாவது ஒரு கோலடித்து விட வேண்டும் என தீவிரமாக ஆடினர். இதற்கு 68வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஸ்னீடர் தன்னை நோக்கி வந்த பந்தை அழகாக முட்டி கோலாக்கி நெதர்லாந்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தார்.

யாரும் எதிர்பார்க்கவில்லை பிரேசில் இப்படித் தோல்வியுறும் என்று. நெதர்லாந்து வீரர்கள் சிறப்பாக, போராட்ட குணத்துடன் ஆடியது ஒருபக்கம் என்றால் சேம் சைடு கோல் போட்டு பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது பிரேசில்.

இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் அரை இறுதிக்குள் நுழைந்து புதிய சாதனை படைத்துள்ளது.  இந்தத் தொடரில் நெதர்லாந்து தொடர்ச்சியாக பெறும் 5வது வெற்றி இது. கடந்த 70களில் இரண்டு முறை ரன்னர் அப் ஆன அணி நெதர்லாந்து. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு வந்து விட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது நெதர்லாந்து. மெலோவின் சேம் சைடு கோல், நெதர்லாந்தின் திடீர் எழுச்சி உள்ளிட்ட காரணத்தால் பிரேசில் வீழ்ந்து விட்டது.
http://static1.buenosairesherald.com/media/news/images/destacada/4237_Brasil_-_Argentina.jpg
பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பிரேசில் காலிறுதியில் தோற்றது அந்நாட்டு ரசிகர்களை மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள பிரேசில் அணியின் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . எந்த அணியையும் குறைத்து மதிப்பிட கூடாது  என்று பாடம் புகட்டியுள்ளது நெதர்லாந்து அணி .
http://estb.msn.com/i/D7/674589C1DEF7266EC81D4214C934E.jpg
நெதர்லாந்து அணி கடைசியாக பங்கேற்ற 23 போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்து வந்தது. இதில் கடைசி 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்த இந்த அணி, நேற்று பிரேசிலை வெளியேற்றி, தனது 13வது வெற்றியை பதிவு செய்தது. 
 http://i.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01535/brazil1_ap_1535394i.jpg
கடந்த உலகக் கோப்பைப் போட்டித்தொடரிலும் பிரேசில் காலிறுதியோடு வெளியேறியது. அப்போட்டியில் பிரான்ஸிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வியுற்றது பிரேசில். கடந்த உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் 5வது இடத்தைப் பிடித்த பிரேசிலுக்கு இந்த முறை 6வது இடமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுத்திருந்து பார்ப்போம் எந்தெந்த அணி காலிறுதிக்கு செல்கின்றன , எந்தெந்த  அணி வெளியேறுகிறது என்று................












4 comments:

Anonymous said...

nedarland anikku enathu vaalththukkal


sekar

Anonymous said...

thodarka vetri payanam nedarland.......




ammu

Pavi said...

நன்றி சேகர்

Pavi said...

நன்றி அம்மு