Monday, August 9, 2010

விளம்பரங்களின் ஆதிக்கம்


இப்போது எந்த பொருள் சந்தைக்கு புதிதாக வருகிறதோ எல்லாவற்றுக்கும் விளம்பரம் செய்யாமல் அது சந்தையில் விற்பனை ஆகாது . ஒரு ரூபாய் டொபிக்கு கூட விளம்பரம் தான் . இன்றைய காலகட்டத்தில் எல்லா பொருட்களுக்கும் விளம்பரம் இல்லாமல் வியாபாரம்  செய்ய முடியாது . விளம்பரம் செய்யா விட்டால் பொருட்கள் விற்பனை ஆகாது .
http://johnlepinski.com/print_packaging/uploaded_images/MinuteMaid_Juice_1000-798312.jpg
விளம்பர உக்தி வேண்டும் . எந்த பொருட்களை எந்த கடையில் வாங்கலாம் , எந்த கடையில் நல்ல தரமான பொருட்கள் இருக்கின்றன , எந்த பொருட்கள் நல்லவை , எது சிறந்தது என நாம் ஆராய்ந்து அதாவது நுகர்வோர் ஆகிய நாம் சிந்தித்து பொருட்களை பார்த்து வாங்க வேண்டும் . கண்ணுக்கு முன்னாலே ஒரு பொருளை காட்டி விட்டு வீட்டில் போய் பார்த்தால் வேறு ஒரு பொருள் இருக்கும் . எங்களுடைய கண்ணுக்கு முன்னாலே ஏமாற்று வித்தை .
http://3.bp.blogspot.com/_58_qEOwiSDY/ShSf_abHSfI/AAAAAAAAAr4/t7giddGE7fM/s400/Designer-Bridal-Saree-2009.jpg
எல்லா விளம்பரங்களையும் நம்ப கூடாது . சில விளம்பரங்களை விட . நாம் பணத்தை கொடுத்து நல்ல பொருட்களை வாங்க வேண்டும் . அசின் போடும் கிரீம் நானும் போட்டால் அசினை போல நானும் வெள்ளையாக வந்து விடுவேன் என்று எத்தனை பேர் நம்புகிறார்கள் . பழ ஜூஸ் எல்லாவற்றுக்கும் எத்தனை விளம்பரம் . கிரீம்களுக்கு எத்தனை விளம்பரம் , உடுப்பு வாங்க இங்க போவம் , அங்க போவம் என்று யோசித்து  விட்டு அந்த குஷ்பு அணிந்து வரும் சாறி அந்த கடையில் தான் இருக்காம் . வாங்கோ அந்த கடைக்கு போவம் . இது தான் நடக்குது . அங்கெ போய் அந்த சாரியை எவ்வளவு விலை கொடுத்தோ வாங்கி வருவார்கள் . அக்கம், பக்கத்து கடைகளில் அதே போல சாறி இந்த வேலையை காட்டிலும் விலை குறைவாக இருக்கும் . பக்கத்து கடைகளில் விசாரித்தால் தானே இதை பற்றி தெரிவதற்க்கு .
http://colanmc.siu.edu/martin/tropicana1_600.jpg
கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை உடுப்பு கடைகளுக்கு கொண்டு போய் கேட்ட பணத்தை கொடுத்து வாங்கி வருகிறார்கள் . இதில் சிலர் விதி விலக்கு. ஒரு பொருள் வாங்க நான்கு, ஐந்து கடைகளில் விசாரித்து நல்ல , விலை குறைவான கடைக்கு சென்று வாங்குவார்கள் . ஒரு பொருள் வாங்கும் போது நான்கு, ஐந்து கடைகளில் விசாரித்து வாங்குவது மிகவும் சிறந்தது .

பத்திரிகைகளில், தொலைகாட்சிகளில் காட்டும் விளம்பரங்கள் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதட்காகவும் , மக்களை வரவளைப்பதட்க்குமான உக்தி மட்டுமே. எல்லா  வகையான பொருட்களுக்கும் விளம்பரம் தான் . வியாபாரத்துக்கு விளம்பரம் இல்லை என்றால் அவ்வளவு தான் என்ற நிலைமை உருவாகி விட்டது .

4 comments:

'பரிவை' சே.குமார் said...

ithu vilambara ulagam thaaney pavi.
nalla pakirvu.

Anonymous said...

vilamparam illamal onrume illai.


mano

Pavi said...

அது உண்மைதான் . எல்லாவகை பொருட்களுக்கும் விளம்பரம் தான் . நன்றி குமார்

Pavi said...

நன்றி மனோ