Saturday, September 18, 2010

பெரியோர்களின் வாயில் இருந்து உதிர்ந்தவை

http://www.quotesandsayings.com/quotes/dream/dream-quotes.jpg

நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உண்மையாய் , உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.

ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

உண்மையைச் சோதிக்கிறவன் அதைப் பொய்யாக்கும்வரை திருப்தியடையமாட்டான்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_3NZ8laV_tZDFzoX35-3l1dZgL5-TRDHDNaVLzm0Y-FVN9JxXFAroeDIPUfjlT9Xgqo1sFFFwoFMzTP79TzIbRT-Nz5RJZdhVw5NVsOAPLJecQSJJxZQZu0RuIacF8Ioyxkfy-Q75_3M/s400/dreams_default.jpg
வெற்றி  என்பதை  மட்டும்  குறிக்கோளாக  வைத்திராதே அதில் சில தோல்விகளும் இருக்கட்டும் .

கல்வி பயில்கிறவனின் நோக்கம் அறிவுதானே ஒழிய மொழியல்ல.

வாய் பேச்சில் வீரம் காட்டாதே , அதை செயலில் காட்டு . அப்போதுதான் உன் திறமை உனக்கு தெரியும் . மற்றவர்களுக்கும் புரியும் .

மாற்றான் சொத்துக்கு ஆசைப்பட்டு உன் சொத்துகளை இழந்து விடாதே .

தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

3 comments:

Anonymous said...

nanru pavi


mano

r.v.saravanan said...

தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

good good

Pavi said...

உண்மைதான் . முயற்சி திருவினை ஆக்கும்
நன்றி சரவணன்