சாதனைகள் என்பது
உனக்கு பெரிதில்லை
எல்லோரினதும் பேச்சுக்கும்
வாயால் பேசாது
உன் துடுப்பால்
பேச வைப்பாய்
உனக்கென்றே , உனது
சாதனைக்கென்றே ஒரு
புத்தகமே உருவாக்கலாம்
சாதனை மன்னா
சச்சின் எனும் பெயரை
தெரியாதவர்கள் யாரும்
இல்லை - இந்த காலம்
அல்ல இனி வரும்
காலம்களிலும் உனது
பெயர் உச்சரிக்கப்படும்
நீ வாங்காத விருதுகள்
ஒன்றும் இல்லை
வாங்காத பட்டங்களில்லை
எல்லாமே வாங்கி விட்டாயே
எப்போதும் உனக்கு
நிகர் நீ தான்
உனக்கு நீயே
சாதனைகளை உண்டாக்கி
சாதனை ஏடுகளில் உனது
பெயரை பொறித்து வைத்திருக்கிறாய்
அன்று போல் இன்றும்
உனது துடுப்பெடுத்தாடலும்
உனது ஓட்ட வேட்கையும்
தணியவில்லை - இன்றும்
இளையவர்களுடன் இளையர்களாக
சேர்ந்து ஆடுகிறாய்
ரன் வேட்டை நிகழ்த்துகிறாய்
சச்சின் எனும் சிங்கம்
அன்று போல் இன்றும்
சிங்கம் தான் என்று
உணர வைக்கின்றாய்
உனது புகழ் என்றும்
நிலைத்து நிக்க வேண்டும்
உனது சாதனைகள்
சாதனை பயணம்
தொடரட்டும் ...........
4 comments:
Sathanai nayagan sachin kuriththa ungal pakirvu arumai.
சச்சினுக்க எனது பாராட்டுகளும் உரித்தாகட்டும்... என்ன இப்போது தங்களின் உட்டங்களை காணக்கிடைப்பதில்லை....
நன்றி நன்றி
நண்பர்களின் ஆக்கபூர்வமான கருத்துகள் ஏற்று கொள்ளப்படும் .
நன்றி குமார்
நன்றி சுதா
Post a Comment