Tuesday, December 7, 2010

வெற்றி எப்படி கிடைக்கும்


திறமை, உழைப்பு , வைராக்கியம் , விடாமுயற்சி , தன்னம்பிக்கை , பொறுமை , தலைமை போன்ற பண்புகள் உடையவர்களுக்கே வெற்றி கிடைக்கும் . இதுதான் உண்மை . எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது மடத்தனம் . பல தோல்விகள் தான் வெற்றியின் ரகசியங்களை புரிய வைக்கிறது நமக்கு . வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பல தோல்விகளை கண்டுதான் வெற்றி எனும் சுவையை ரசித்திருப்பர். 

நாம் எல்லோரும் ஒவ்வொரு விடயங்களில் திறமைசாலிகளாக இருப்போம் . சிலர் விளையாட்டில் , சிலர் பாடுவதில் , நடிப்பதில் என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும் . அந்த திறமையை கொண்டு நாம் முன்னேற வேண்டும் . 

கடுமையான உழைப்பு மிகவும் அவசியம் . சோம்பேறித்தனம் கூடவே கூடாது . நமது முன்னேற்றத்துக்கு , வெற்றிக்கு கடின உழைப்பு மிகவும் முக்கியம் .நாம் உழைத்து வாழ வேண்டும் . பிறர் உழைப்பில் வாழ்தல் ஆகாது . எல்லோருடைய வெற்றிக்கு பின்பும் பல துன்பங்கள் , வேதனைகள் இருக்கும் . கடினமாக கஷ்டப்பட்டு தான் அவர் ஒரு நல்ல நிலையை அடைந்திருப்பார் . தனது திறமையை கொண்டு , கடின உழைப்பால் முன்னுக்கு வந்திருப்பார் .

நான் இந்த காரியத்தை செய்ய வேண்டும் , இந்த பாடத்தை நன்றாக படித்து நல்ல புள்ளிகளை பெற வேண்டும் என்று விடாமுயர்ச்சியுடன் செயல்பட்டால் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும் . வெற்றிக்கு விடமுயர்ச்சியும் முக்கியமானது தான் .நாம் வெற்றியில் இருந்து கற்றுக்கொள்வதை விட தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது . நாம் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால் அதில் சுவாரஸ்யம் இருக்காது . வெற்றியின் உச்ச நிலை தெரியாது . அதுவே பல தடவை தோல்வி உற்று வெற்றி பெற்றோரை பாருங்கள் . அவர்களிடம் இருக்கும் சந்தோசத்தை . இலங்கை அணி கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியும் , தோல்வியும் அடையும் . அதுவே அவுஸ்டேலியா அணியுடன் தோல்வி அடைவது வழமை . இம்முறை அவுஸ்டேலியா அணியுடன் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று அதிசயிக்க வைத்தது இலங்கை அணி . அப்போது வீரர்கள் எல்லோருடைய முகத்திலும் எவ்வளவு உற்ச்சாகம் தெரிந்தது . நமக்கும் உற்சாகமாக தானே இருந்தது . கடின உழைப்பு, தன்னம்பிக்கை , விடமுயட்ச்சி என்பன இருந்தால் நாம் வெற்றி பெற முடியும் .

எனவே வெற்றிகளை பெறுவதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் . எப்படி செய்தால் நாம் வெற்றி பெற முடியும் என்று சிந்தியுங்கள் . உங்களுக்கு வெற்றி நிச்சயம் . 





10 comments:

'பரிவை' சே.குமார் said...

Vettriyey thannambikkaiyin arikuri...
nalla pakirvu pavi... neenda vidumurai polum.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு சகோதரி..

Anonymous said...

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க

ஹரிஸ் Harish said...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..

Pavi said...

விடுமுறைதான் .

நன்றி குமார்

Pavi said...

நன்றி வெறும்பய

Pavi said...

நன்றி சதீஷ்

Pavi said...

நன்றி ஹரிஸ்

r.v.saravanan said...

நல்ல பதிவு.

Pavi said...

நன்றி சரவணன்