திறமை, உழைப்பு , வைராக்கியம் , விடாமுயற்சி , தன்னம்பிக்கை , பொறுமை , தலைமை போன்ற பண்புகள் உடையவர்களுக்கே வெற்றி கிடைக்கும் . இதுதான் உண்மை . எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது மடத்தனம் . பல தோல்விகள் தான் வெற்றியின் ரகசியங்களை புரிய வைக்கிறது நமக்கு . வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பல தோல்விகளை கண்டுதான் வெற்றி எனும் சுவையை ரசித்திருப்பர்.
நாம் எல்லோரும் ஒவ்வொரு விடயங்களில் திறமைசாலிகளாக இருப்போம் . சிலர் விளையாட்டில் , சிலர் பாடுவதில் , நடிப்பதில் என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும் . அந்த திறமையை கொண்டு நாம் முன்னேற வேண்டும் .
கடுமையான உழைப்பு மிகவும் அவசியம் . சோம்பேறித்தனம் கூடவே கூடாது . நமது முன்னேற்றத்துக்கு , வெற்றிக்கு கடின உழைப்பு மிகவும் முக்கியம் .நாம் உழைத்து வாழ வேண்டும் . பிறர் உழைப்பில் வாழ்தல் ஆகாது . எல்லோருடைய வெற்றிக்கு பின்பும் பல துன்பங்கள் , வேதனைகள் இருக்கும் . கடினமாக கஷ்டப்பட்டு தான் அவர் ஒரு நல்ல நிலையை அடைந்திருப்பார் . தனது திறமையை கொண்டு , கடின உழைப்பால் முன்னுக்கு வந்திருப்பார் .
நான் இந்த காரியத்தை செய்ய வேண்டும் , இந்த பாடத்தை நன்றாக படித்து நல்ல புள்ளிகளை பெற வேண்டும் என்று விடாமுயர்ச்சியுடன் செயல்பட்டால் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும் . வெற்றிக்கு விடமுயர்ச்சியும் முக்கியமானது தான் .நாம் வெற்றியில் இருந்து கற்றுக்கொள்வதை விட தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது . நாம் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால் அதில் சுவாரஸ்யம் இருக்காது . வெற்றியின் உச்ச நிலை தெரியாது . அதுவே பல தடவை தோல்வி உற்று வெற்றி பெற்றோரை பாருங்கள் . அவர்களிடம் இருக்கும் சந்தோசத்தை . இலங்கை அணி கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியும் , தோல்வியும் அடையும் . அதுவே அவுஸ்டேலியா அணியுடன் தோல்வி அடைவது வழமை . இம்முறை அவுஸ்டேலியா அணியுடன் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று அதிசயிக்க வைத்தது இலங்கை அணி . அப்போது வீரர்கள் எல்லோருடைய முகத்திலும் எவ்வளவு உற்ச்சாகம் தெரிந்தது . நமக்கும் உற்சாகமாக தானே இருந்தது . கடின உழைப்பு, தன்னம்பிக்கை , விடமுயட்ச்சி என்பன இருந்தால் நாம் வெற்றி பெற முடியும் .
எனவே வெற்றிகளை பெறுவதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் . எப்படி செய்தால் நாம் வெற்றி பெற முடியும் என்று சிந்தியுங்கள் . உங்களுக்கு வெற்றி நிச்சயம் .
10 comments:
Vettriyey thannambikkaiyin arikuri...
nalla pakirvu pavi... neenda vidumurai polum.
நல்ல பகிர்வு சகோதரி..
ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க
நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..
விடுமுறைதான் .
நன்றி குமார்
நன்றி வெறும்பய
நன்றி சதீஷ்
நன்றி ஹரிஸ்
நல்ல பதிவு.
நன்றி சரவணன்
Post a Comment