Wednesday, December 8, 2010

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அபார வெற்றி



Graeme Swann takes the final wicket against Australia
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி ஓர் இன்னிங்ஸ், 71 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் அவுஸ்டேலிய அணியை தோற்கடித்துள்ளது . இங்கிலாந்து அணி இப்போது மிகவும் சிறப்பான நிலையில் உள்ளது . அனுபவம் வாய்ந்த வீரர்கள் , சிறந்த துடுப்பாட்ட வரிசை , சிறந்த பந்து வீச்சாளர்கள் , சிறந்த களத்தடுப்பு என எல்லா வகையிலும் சிறந்த நிலையில் உள்ளது . அவுஸ்டேலிய அணியின் துடுப்பாட்டம் , பந்துவீச்சு என்பன மிகவும் மோசமான நிலையில் உள்ளது .

அவுஸ்டேலிய அணி முதல் இன்னிங்ஸில் 245 ஓடங்களுக்கு  ஆட்டமிழந்தது. அடுத்து துடுபெடுத்து ஆடிய  இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 620 ஓட்டங்களை  குவித்து டிக்ளேர் செய்தது. கெவின் பீட்டர்சன் 227 ஓட்டங்களை குவித்தார்.அவுஸ்டேலிய அணி வீரர்களின் பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு ஆக்ரோசமாக ஆடினார் . இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்டேலிய அணியின் தொடக்க வீரர்கள் வோர்சனும் , கடிச்சும் கொஞ்சம் நின்று பிடித்து ஆடினார் .  வாட்சன் 57 ஓட்டங்களும் , காடிச் 43 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர் . 


Kevin Pietersen was in imperious form for his unbeaten double century
 
பின்னர் வந்த மைக்கேல் கிளார்க், மைக் ஹசி ஆகியோரும் நிலைத்துநின்று விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.  கிளார்க் 80 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார் . ஹசியாவது நின்று நிலைப்பார் என்று பார்த்தால் அவரும் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் .  

ஆண்டர்சனும், ஸ்வானும் நான்கு பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்டேலிய அணி வீரர்களை அரங்கு திருப்பினர் . மிகவும் சிறப்பாக பந்து வீசினர் . ஹேடின் (12), ஹாரிஸ் (0) ஆகியோரை அடுத்தடுத்தப் பந்துகளில் ஆண்டர்சன் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்வான் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ.வாகி ஆட்டமிழந்தார் நார்த் (22). அதன் பின்பு வந்த வீரர்களையும் ஸ்வான் விட்டு வைக்கவில்லை . 304 ஓட்டங்களை மட்டுமே பெற்று அனைத்து விக்கட்டுகளையும் பறிகொடுத்து அவுஸ்டேலிய அணி ஓர் இன்னிங்ஸ், 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது . 

போட்டியின் ஆட்ட நாயகனாக அபாரமாக விளையாடி ஓட்டங்களை குவித்த கெவின் பீட்டர்சனுக்கு கிடைத்தது . முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்தது . இரண்டாவது போட்டியை இங்கிலாந்து வென்றுள்ளது . இன்னும் 3 போட்டிகள் எஞ்சி உள்ள நிலையில் இந்த தொடரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது . அடுத்து வரும் மூன்று போட்டிகளும் மிகவும் சவாலாக அமையும் இரு அணிகளுக்குமே. ஸ்டிராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி மிகவும் அபாரமாக விளையாடுகிறது . வெற்றி வாய்ப்புகள் இங்கிலாந்து அணிக்கே பிரகாசமாக உள்ளது . பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று . 

 

2 comments:

'பரிவை' சே.குமார் said...

//ஸ்டிராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி மிகவும் அபாரமாக விளையாடுகிறது . வெற்றி வாய்ப்புகள் இங்கிலாந்து அணிக்கே பிரகாசமாக உள்ளது //

Correct. this time Eng. win Ashes Cup.

Pavi said...

நன்றி குமார்