குழந்தைகளின் அழுகை , சிரிப்பு , நித்திரை என அவர்கள் செய்யும் செயல்கள் எல்லோரையும் ரசிக்கும்படியும் , சந்தோசமாகவும் இருக்கும் எமக்கு பார்க்கும்போது . அவர்கள் என்ன செய்தாலும் கோபம் வராது . அதனை ரசித்து கொண்டு இருப்போம் . அதுபோல் தான் குழந்தைகள் நித்திரை கொள்ளும் போது என்ன அழகாக நித்திரை செய்கிறார்கள் என்று பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது . நீங்களும் பார்த்து மகிழுங்கள் .
பால்மணம் மாறாத
பிஞ்சடா
ஏதடா கவலை ..........
சோகமில்லை , துன்பமில்லை,
தூங்க நேரமில்லை இந்த
வயதில் , பொழுதை விட்டால் .......
அழுகை இல்லை
சத்தம் இல்லை
குழப்படி இல்லை
தூங்கடா கண்ணா கண்ணா
மனம் தூய்மை
உடல் தூய்மை
பேச்சு தூய்மை
அது இந்த சிறிய
பருவத்தில் மட்டுமே
பொறாமை இல்லை
வஞ்சனை இல்லை
தீய பழக்கங்கள் இல்லை
கண்ணா தூங்கு
நாட்கள் கிழமைகள் ஆகி
கிழமைகள் மாதங்கள் ஆகி
மாதங்கள் வருடங்கள் ஆகி
உனது வயதும் கூடி கொண்டு போகும்
நீ இந்த உலகில் பெரியவன்
ஆவாய் அப்போது உனக்கு நித்திரை செய்ய
கூட நேரம் இருக்காது
இப்போது வடிவாக தூங்கு ....
உங்களது மழலை சிரிப்புக்காக
தவம் இருப்போர் எத்தனை பேர்
அந்த வரம் கிடைப்போர் எத்தனை பேர்
அதையும் தாண்டி தாய்
எவ்வளவு கஷ்டப்படுகிறாள்
அத்தனையும் தாண்டி
உங்களது மழலை சிரிப்பில்
ஆனந்தம் அடைகிறாள்
எல்லா துன்பங்களில் இருந்தும்
உங்களது தாய் ....
5 comments:
cute photos... super cmments.
நன்றி குமார்
cute photos pavi good
நன்றி சரவணன்
அருமையான படங்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
Post a Comment