Friday, December 31, 2010

புதிய ஆண்டே வருக



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdB1NZrGCWfExT6_9Qovpy6UaP3K78ETWNOSqcQ_HIbWw4m3W4gUh7hFMVd_m_cOOcRlr7vN4YJfTGYBrT47dKc7BcvXg-zPujNY3hCiDpcn0E91nMrkdEJThA24G18SKzm2RPlLcgI-0/s1600/happy-new-year-2011-2.jpg
துன்பங்கள் நீங்கி 
இன்பங்கள் அடைந்து 
இந்த ஆண்டை வழியனுப்பி 
புதிய ஆண்டை வரவேற்போம் 

நடந்தவை, கடந்தவை 
இன்பங்கள் , துன்பங்கள் 
எல்லாவற்றையும் மறந்து 
புதிய வருடத்தை வரவேற்போம் 

வளமான வாழ்வு எல்லோருக்கும் 
உண்டாகி எண்ணிய யாவும் 
கைகூடட்டும் - என்றும்
இன்பதுன்பம் எதுவானாலும் 
 உறுதியாகி நின்று 
இன்னல்கள் அனைத்தும் எம்மை விட்டு 
நீங்கி புதிய ஆண்டை 
புன்னகையுடன் வரவேற்போம் 

எம் சொந்தங்களின் அவல நிலையை 
போக்கி ஏக்கம் தீர்த்து அவர்கள் 
முகத்தில் புன்னகை பூக்க 
வழி செய்வாய் .......
அன்புமொழி பேசி 
அவல நிலையை 
போக்க வேண்டும் 
புதிய ஆண்டே வருக 

உலகில் அமைதி உண்டாகி 
வறுமை நீங்கி 
உண்மை பேசி உத்தமனாக 
வாழ்ந்து உள்ளங்கள் 
மகிழ புதிய ஆண்டே 
வருக வருக 

2010 ஆம் ஆண்டை அன்புடன் 
வழியனுப்பி சந்தோசமாக 
2011 ஆம் ஆண்டை ஆனந்தத்துடன் 
வரவேற்போம் ...................

 





 

No comments: