Friday, December 31, 2010

2010 இசை எப்படி ??? பாடல்கள் எப்படி ???

ஒவ்வொரு வருடமும் நல்ல படங்கள், பாடல்கள் எம்மை , எம்மனதை வருடி விட்டு செல்கின்றன. இம்முறையும் பல பாடல்கள் எம்மை மீண்டும் மீண்டும் கேட்கும் படி தூண்டியது . அதற்க்கு காரணம் சிறந்த இசையமைப்பும் , பாடல் வரிகளும் தான் . வசூல், சாதனை , இசை என சில படங்கள் சாதித்து காட்டின .இவ்வருடம் இசையமைப்பாளர்கள் பல நல்ல பாடல்களை கேட்கும் ரசிகர்களுக்கு நல்ல பாடல்களை தந்துள்ளனர் . அவர்களை பற்றி பாப்போம் .
http://filmreviews.bizhat.com/wp-content/uploads/2010/08/yuvan-shankar-raja-011.jpg
இவ்வருடம் அதிக ஹிட் பாடல்களை கொடுத்தவர் ராஜாவின் ராஜா" யுவன் சங்கர் ராஜா " தான் . அவர் இசை அமைத்த பையா பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் தான் . எனக்கும் எல்லா பாடல்களும் பிடித்து இருந்தது . மீண்டும் மீண்டும் கேட்க தூண்டியது . "அடடா மழைடா", "துளித்துளி" பாடல்கள் மிகவும் நான் ரசித்து கேட்கும் பாடல்கள் . எல்லோரினதும் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் ஆகும் . துளித்துளி பாடலை ஹரிசரண் மிகவும் அழகாக பாடி இருந்தார். 

"என் காதல் சொல்ல நேரமில்லை " பாடலும் அருமை. யுவனே அந்த பாடலையும் பாடி இருந்தார் . அதே போல் கார்த்தி நடித்த இன்னொரு படம் "நான் மகான் அல்ல " திரைப்படம். அதிலும் யுவன் தான் இசையமைத்திருந்தார் . அந்த பட பாடல்களும் பெரிதும் எல்லோராலும் பேசப்பட்டது . "கண்ணோடு காதல் வந்தால் " பாடல் எல்லோருக்கும் பிடித்து இருந்தது . அதே போல் சர்வம் படத்தில் " சிறகுகள் வந்து " என்ற பாடலும் சூப்பர் ஹிட் பாடல் . கோவா, சர்வம், தில்லாலங்கடி, பாணா காத்தாடி போன்ற 15 படங்களுக்கு இசையமைத்து உள்ளார் யுவன் . இந்த வருடம் அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்ற பெருமையை பெறுகின்றார் .
http://farm4.static.flickr.com/3404/3337810629_275f0037d2.jpg
அடுத்து நம்ம ஒஸ்கார் நாயகன் ரகுமான் மூன்று படங்களுக்கு இசையமைத்து இருந்தார் . விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன்,  எந்திரன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருந்தார் . அதிலும் ராவணனில் "உசிரே போகுது "பாடல் மனதை வருடியது . விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அத்தனை பாடல்களும் இதம் . மனதை கொள்ளை கொண்டது . திரும்ப திரும்ப எம்மை எல்லோரையும் கேட்க தூண்டியது என்று கூட சொல்லலாம் .ஹோசனா..., மன்னிப்பாயா, ஓமனப் பெண்ணே போன்ற பாடல்கள் சூப்பர் . எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் உள்ளடங்கிய பாடல்கள் . இதயத்தில் இதமாகவும் , இளைஞர் மனதை கொள்ளை கொண்டன . 

இவ்வருடம் வெளியாகிய ரஜனியின் படமான எந்திரன் பாடல்கள் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட பாடல்கள் ஆகின . ஒஸ்கார் நாயகன் என தன்னை மீண்டும் நிரூபித்து  இருந்தார் . ரஜினியின் பம்பர் ஹிட் படமான எந்திரன் இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் உடைத்து வசூலிலும் , இசையிலும் சாதனை படைத்தது . அதிக இறுவட்டுகள் வெளியாகி சக்கை போடு போட்டது . பாடல்களிலும் சரி, இசையமைப்பிலும் சரி தற்கால தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் சிறந்த பாடல்களை தந்து ரசிகர்களை சந்தோசப்படுத்திய படம் எந்திரன் . இரும்பிலே ஒரு இதயம் மற்றும் கிளிமாஞ்சாரோ பாடல்கள் அருமையிலும் அருமை . சிறந்த காட்சியமைப்பும் கூட . அதே போல் இருப்பிலே பாடலும் சிறப்பாக இருந்தது என்று கூறலாம் . எனக்கும் இந்த பாடல்கள் மிகவும் பிடித்து இருந்தது . 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnRe2iID8yi6zB7bO0lIAx0Wt2WzaVcWdATtlg1N8oC9Cghh19w9OccAb4cI-fdzNrv_WILS7xmw42_DyNKd6mUIyLD-Uwk9N7XjYz38Lve4doSTHKmc-EkhCeexUfTD1Ikm3hvrhaM3g9/s1600/gv_prakash_kumar_photos_images_01.jpg
இளம் இசையமைப்பாளர் ஆகவும் , வளர்ந்து வரும் இசையமைப்பாளர் ஆகவும் இருக்கும் ஜீவி பிரகாஷ்குமார் இந்த வருடமும் சிறந்த மெலடியான பாடல்களை தந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் . அவர் இசையமைத்த மதராஸபட்டினம் பட பாடல்களை ரசிக்காதவர்கள் ஒருவரும் இல்லை . எல்லோருக்கும் பிடித்து இருந்தது . எல்லோரையும் திரும்ப திரும்ப கேட்க தூண்டியது . ஆருயிரே ஆருயிரே பாடல் அருமையிலும் அருமையான பாடல் . பூக்கள் பூக்கும், 'மேகமே மேகமே பாடல்களும் அருமையாக இருந்தது என்று சொல்லலாம் . வாம்மா துரையம்மா பாடலும் மனதுக்கு பிடித்து இருந்தது .
http://www.goergo.in/wp-content/uploads/2008/12/vijayantony.jpg
அங்காடித்தெரு படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருந்தனர் . அதில் விஜய் அன்டனி இசையமைத்த "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" பாடல் எல்லோரினதும் மனதை கொள்ளை கொண்டது . சூப்பர் ஹிட் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று . அதே போல் வேட்டைக்காரன் பட பாடல்களும் நல்ல பாடல்கள் . ஒரு சின்னத்தாமரை பாடல் எனக்கு பிடித்து இருந்தது . 

எனக்கு பிடித்த நான் பார்த்த படங்களில் இருந்து இவற்றை தேர்வு செய்து எழுதினேன் . இவற்றை விட வேறு சில பாடல்களும் எனக்கு பிடித்து இருந்தன. தற்போது என் மனதில் நினைவில் நின்ற பாடல்கள் இவை . இதே போல் அடுத்த ஆண்டு எப்படியான பாடல்கள் வரபோகிறது ? எவை ரசிகர் மனதை கவர்கின்றன என பொறுத்திருந்து பாப்போம் . 






No comments: