Friday, December 10, 2010

ஷாம் ஷாம்


இளைய உள்ளங்களை கவர்ந்த அதுவும் பெண்கள் மனதை கொள்ளை கொண்ட சாக்லேட் போயாக வந்து கலக்கினார் ஷாம் . முன்பு பிரஷாந்த் இந்த இடத்தை பிடித்து இருந்தார் . ஜீவாவின் 12 பியில் அறிமுகமாகி அசத்தினார் . தனது முதல் படத்திலே சிம்ரன், ஜோதிகாவுடன் டூயட் பாடினார் . பின்பு பல தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் இயற்கை படம் ஷாமை இன்னும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது . நடிப்புக்கு ஏற்ற நாயகனுக்கு உரிய உடல் அமைப்பை கொண்டமைந்த நடிகர்களில் இவரும் ஒருவர் .

தமிழில் 'லவர் பாய்' பாத்திரங்களில் டிஸ்டிங்ஷனே வாங்கிய ஷாமின், நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையைத் தந்தது சுரேந்தர் ரெட்டி இயக்கிய தெலுங்குப் படம் கிக். வசூலில் புதிய சாதனைப் படைத்தது. பார்த்தவர்கள் சாஃப்டான ஷாமுக்குள் இப்படி ஒரு அதிரடி நாயகனா என பாராட்டினார்கள். இப்போது தெலுங்கில் பல படங்களை கையில் வைத்து உள்ளார் . இந்த கிக் படம் தான் தமிழில் தில்லாலங்கடியாக வெளியானது . அதில் நாயகனாக ரவியும் , போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தார் .

தமிழில் ஷாம் நடித்து வெளிவர இருக்கும் படம் அகம் புறம் . ஒரு ஆக்ஷன் படம் . திருமலை இயக்கியிருக்கிறார். எல்லோரும் ஷாமை சொப்ட் கரட்டர்களில் பார்த்தவர்கள் இதில் அடிதடி நாயகனாக ஷாமை பார்க்கலாம் போல் இருக்குது . 









1 comment:

Anonymous said...

thillalankadi sema jaaliyana padam.
shaam acting is super........


ravi