Saturday, July 31, 2010

எனக்கு பிடித்த பாடல் வரிகள்


படம்: நான் மகான் அல்ல
பாடல்:
இறகைப்போலே அலைகிறேனே

இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
http://static-p4.fotolia.com/jpg/00/00/12/97/400_F_129702_vGmZNp7Hj1BzHjy8atgURsJGYVRtpd.jpg
படம்: களவானி
பாடல்:
ஒரு முறை இரு முறை

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா
கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

படம்: நான் மகான் அல்ல
பாடல்:
வா வா நிலவப்புடிச்சித்தரவா

வானத்தில் ஏறி ஏணைகட்டு
மேகத்தை அள்ளி மாலைகட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிகட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிகட்டு
http://files.myopera.com/TheNewBlackPrince/albums/806786/Dragon%20Lovers.jpg
படம்: அய்யனார்
பாடல்:
மேகங்கள் எல்லாம் சேர்ந்து வரிசையிலே

பச்சைக்கிளிப் போல போவோமே மேலே
பன்னீர்த்துளிப் போல விழுவோமே கீழே
அன்புக்கு இலக்கணம் ஆன சொந்தம் இங்கே உண்டு
என் வீட்டில் அழகைக்காண போதவில்லை கண்கள் ரெண்டும்
பம்பரம் போலே இங்கே பாசம் வந்து சுற்றுகின்றதே
பாசத்தின் பள்ளிக்கூடம் போல் எங்கள் வீடு உள்ளதே

படம்: அய்யனார்
பாடல்:
பனியே பனியே என் இதயம்

வீட்டுச்சுவரில் உன் பெயர்
வாசல் தரையில் உன் தடம்
தூங்கும் அறையில் உன் மனம்
தினம் தொழுது உன் நினவே
போகச்சொல்லி அலைகளை தள்ளிவிடுதே கடற்கரை
போக மறுத்து திரும்பவும் வரும்
அலையென என் மனமே

கால்களுக்கு ஏற்ற செருப்பு அணியுங்கள்


  • இப்போதெல்லாம் உடை நிறத்துக்கு ஏற்ற செருப்பு அணிகிறார்கள் . அது எல்லோராலும் முடியாத காரியம் . அதனால் கருப்பு நிறத்தில் அமைந்த செருப்பாகவும் , தற்போதைய நாகரிகத்துக்கு ஏற்ற மாதிரியான செருப்பை தேர்ந்து எடுங்கள் .
http://www.sergecantininc.com/med_r/bata_2.jpg
  • கால்கள் சுத்தமாக இருப்பது போல் உங்கள் செருப்பையும் சுத்தமாக வைத்திருங்கள் .
  • ஆண்களும் சரி பெண்களும் சரி எப்பொழுதும்  செருப்பு வாங்கினாலும் அழகு, அளவு மற்றும் தரமான செருப்பாக கவனித்து வாங்கவும்.
http://www.boston.com/yourlife/home/stylephile/Marilyn%20Monroe%20P02-131.jpg
  • மற்றவர்களின் செருப்பு நல்லதாக இருக்கிறதே என்று வைபவங்களுக்கு செல்லும் இடத்தில் உங்களது செருப்பை விட்டுவிட்டு மற்றவர்களுடைய செருப்பை களவாக போட்டு கொண்டு வராதீர்கள் . இப்படி பல இடங்களில், பலர் இதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள் . அதை தவிருங்கள் .

  • கால்களுக்கு அதிக இறுக்கமான செருப்புகள் வாங்கக்கூடாது.
  • செருப்பினை கால்களில் போட்டு பார்த்து 4,5 அடி தூரம் நடந்து பார்த்து உங்கள் காலுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே வாங்கவும். அதுதான் சிறந்தது .
  • விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமான கம்பெனி தயாரிக்கும் செருப்பு வாங்கவும்.
http://bi.gazeta.pl/im/6/5500/z5500796X.jpg
  • அதிக உயரம் கொண்ட பாத அணிகளை அணியாதீர்கள் . அதாவது  ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதனை குறைத்துக்கொள்ளவும்.பாதங்களுக்கு ஓடும் இரத்தம் கட்டுப்படும் .
  • அதிக நேரம் தண்ணீரில் செருப்புகளை நனைய விடாதீர்கள் .
  • வயதானவர்கள் அதிக கனமில்லாத செருப்புகளை வாங்கவும்.

  • மழை காலத்தில் இறப்பர் செருப்புகள் அணிய வேண்டாம்.
  • பிளாஸ்டிக் செருப்புகளை வாங்குவதை விட தோல் செருப்புகள் வாங்குவது நல்லது.
  • வீட்டில் அணியும் இறப்பர்  செருப்புகள் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் . தினமும் கழுவி பயன்படுத்தவும் .














Thursday, July 29, 2010

இந்த பாடலையும் கேட்டு பாருங்க

http://www.tamilnow.com/movie/images/madharasapattinam.jpg

இப்போது வெளியாகி திரை அரங்குகளில் ஓடி கொண்டு இருக்கும் மதராசப்பட்டினம் படத்தில் வரும் பாடல் இது . பாடல் அருமையாக இருக்கிறது . பாடகர்கள் அருமையாக பாடுகிறார்கள் . சிறப்பாக நடித்து இருக்கிறார் இந்த படத்தில் ஆர்யா . காட்சி அமைப்பும் நன்றாக உள்ளது . எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது . நீங்களும் ரசியுங்கள் . பாடலை கேட்டு பாருங்கள் . வரிகளை பாருங்கள் . என்ன அருமையான வரிகள் .பாடலாசிரியர் முத்துக்குமார் இப்போதெல்லாம் பல நல்ல பாடல்களை எழுதி வருகிறார் . எல்லா பாடல்களும் சூப்பராக இருக்கிறது . அதில் இந்த பாடலும் அருமை . பிரகாஷின் இசையில் சோனு நிகம், சைந்தவி ஆகியோர் பாடலை பாடி உள்ளனர் .

http://www.celluloidtamil.com/wp-content/gallery/madharasapattinam/madharasapattinam9.jpg
ஆண் :ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

பெண்:உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
எண்ணி பிரிகிறேன்
(ஆறுயிரே..)

பெண்:விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்

ஆண்:காற்றினில் வருவேனோ
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே

பெண்:உயிரே என்னுயிரே
உனக்குமள் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னில் உறைகிறேன்
(ஆறுயிரே..)

பெண்:கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்

ஆண்: கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ

பெண் :உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே

ஆண் :நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே........


Wednesday, July 28, 2010

எல்லோரும் பாவிக்கும் வாசனை திரவியம்

perfume_bottles1

எல்லோரும் வாசனை திரவியமான சென்ட் பாவிப்பது வழமை . வியர்வை நாற்றம் தெரியாமல் , மணக்காமல் நல்ல வாசனை வீசுவதற்காக நாம் எல்லோரும் சென்ட் பாவிக்கின்றோம் . என்னதான் வித்தியாசமான உடையுடன், விதவிதமான அணிகலன்களை அணிந்து வலம் வந்தாலும், ஒருவர் உடம்பிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அவரைச்சுற்றி இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிடும்.  வெயில் காலத்தில் இதனுடைய பயன்பாடு இன்னும் அதிகரிக்கும். சிலரிடம் துர்நாற்றம் இல்லையென்றாலும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை வாசனையால் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி வருகின்றனர். 


perfumes

சில வாசனை திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக உள்ளன . ஏனையவர்களுக்கு அந்த வாசனை பிடிக்காமல் தலை சுற்றல் , தலை இடி போன்றவை இருக்கும் . அப்படியான வாசனை திரவியங்களை தவிர்த்து எல்லோருக்கும் பிடிக்கும் , எல்லோரும் விரும்பத்தக்கிய வாசனை திரவியங்களை உபயோகித்தல் நல்லது .

பழங் காலத்தில் இருந்தே உலகமெங்கிலும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தபட்ட தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், முதன்முதலில் வாசனைத் திரவியங் களை பயன்படுத்திய பெருமை எகிப்தையே சேரும். ஒரு காலத்தில் அரசர்கள் , பெரும் மதிப்புக்கு உரியவர்கள் மட்டுமே வாசனை திரவியங்களை உபயோகித்து வந்தனர் . இப்போது எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் வாசனை திரவியங்கள் வந்து விட்டன . 
 http://www.perfume-allergy.co.uk/perfume.jpg
பொது வைபவங்கள் , விழாக்கள் செல்லும்போது மட்டும்தான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. அதேபோல் இன்னார்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுபாடும் கிடையாது. அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களை யார், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 

சிலர் எளிதில் தூங்குவதற்காக இரவில் தூங்க முன்னர் மென்மையான வாசனை வீசும் திரவியங்களை பூசிக் கொள்வர். பொதுவாக வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் தாழ்வு மனபான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகக் காட்டுகிறது. தன்னம்பிக்கைடன் செயல்பட முடிகிறது.

வெயில் காலங்களில் லேசான வாசனைத் திரவியங்களைம், குளிர்காலங்களில் `ஹெவி’யான வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். இயற்கையான நறுமண பொருட்களில் மட்டுமின்றி, கெமிக்கல்ஸ், ஆயில், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்தும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன. 
http://www.behindthecounter.com/wp-content/uploads/2009/09/nina-ricci-perfumes.jpg
உடலில் பூசிக்கொள்பவை, உடையில் பூசிக்கொள்பவை என இரண்டுவிதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.

வாசனைத் திரவியங்களை பொறுத்த வரையில் பாட்டிலில் இருக்கும்போது ஒருவிதமான வாசனையும், உடலில் பூசிக்கொண்டபின் வேறுவிதமான வாசனையும் உண்டாகும். எனவே, வாங்கும்போதே உடைகளில் சிறிது தெளித்து முகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். சிலவற்றில் பூசிக்கொண்டதும் வாசனை தோன்றாமல், சிறிது நேரம் கழித்தே தோன்றும். இதுபோன்ற வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
 http://itech.dickinson.edu/chemistry/wp-content/uploads/2008/04/perfumes-set.jpg
மல்லிகையில் இருந்து தயாரிக்கும் வாசனை திரவியம் மல்லிகையின் மம் கொண்டதாக அமையும் .விதவிதமான வாசனைகளில், கலர்களில் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன.  ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதேபோல் பாரம்பரிய முறை, நவீன முறை என இரண்டு விதமான முறைகளில் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன. கூடுதலாக இளவயது ஆண், பெண் இருவருமே தங்களது எதிர்பாலினர்களைக் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர். 
http://itech.dickinson.edu/chemistry/wp-content/uploads/2008/04/800pxcollage_of_commercial_perfumes.jpg
நறுமணம் தரக்கூடிய பூக்களில் தயாரிக்கபடுபவை, பழங்களின் சாற்றில் இருந்து தயாரிக்கபடுபவை, கடலில் உள்ள பொருட்களால் தயாரிக்கப்படுபவை,  மரங்களின் வேர்கள், இலைகள், விதைகள் ஆகியவற்றில் தயாரிக்கபடுபவை, . ரோஜா இதழ்களை கொண்டு நறு மணத்துடன் தயாரிக்கப்பட்டவை என பல வகைகளில் இந்த வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன .

 வாசனைத் திரவியங்களை வாங்கும் முன், மணிக்கட்டின் மீது சிறிதளவு தெளித்து பாருங்கள். சிறிது நேரம் கழித்து அலர்ஜி எதுவும் ஏற்படவில்லையென்றால், அதை வாங்கலாம். அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் வேறொன்றை பரிசோதிபது நல்லது. 

வாசனை திரவியங்களை பயன்படுத்தும் போது தலை முடிகளில் படாதவாறு பயன்படுத்த வேண்டும் . சிறிதளவே தெளிக்க வேண்டுமே தவிர வாசனை திரவியங்களை அதிகம் தெளிக்க கூடாது . எல்லோரும் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள் . வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நாடுகளில் பிரபல்யம்  பெற்றது பிரான்ஸ் நாடுதான் .





ரசனையான பாடல்


ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடல் பிடிக்கும் . சிலருக்கு சோகப் பாடல் பிடிக்கும். சிலருக்கு குத்து பாடல் பிடிக்கும் , சிலருக்கு மென்மையான மெலடியில் அமைந்த பாடல்கள் பிடிக்கும். ஒவ்வொருவரின் ரசனையும் வேறுபட்டவை . அதுபோல் எல்லோரும் விரும்பும் பாடல்களும் உள்ளன . சிறந்த வரிகளுக்காக , இசைக்காக  பாடல்களை கேட்கும் ரசனை உள்ளவர்களும் உள்ளனர் .

எப்போதும் வாய்க்குள் முனு முணுக்கும் பாடல்களும் உண்டு . சில பாடல்கள் இயற்கையை ஒத்த சிறந்த வரிகளை கவி வரிகளை கொண்டு அமைந்திருக்கும் . அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் இயற்கையை அனுபவித்து எழுதி இருப்பார் . இந்த பாடலும் அவ்விதம் தான் .

பாடலை பாடும் விஜய் ஜேசுதாசும் , சின்மயியும் சிறப்பாக இந்த பாடலை பாடி உள்ளனர் . பொக்கிஷம் படத்தில் இடம் பெற்றது இந்த பாடல் . சிறந்த காட்சி அமைப்பு . கேட்பதற்கும் ரசனை உள்ள பாடல் .வரிகளும் அருமை .


ஆண்: நிலா நீ வானம் காற்று மழை
 என் கவிதை மூச்சு இசை
 துளித்தேனா மலரா இசை ஒளி பகல்
 நிலா நீ வானம் காற்று மழை
 என் கவிதை மூச்சு இசை
 துளித்தேனா மலரா இசை ஒளி பகல்
 தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
 கொஞ்சும் தமிழ்க்குழந்தை
 சிணுங்கள் சிரிப்பு முத்தம்
 மௌனம் கனவு ஏக்கம்
 மேகம் மின்னல் ஓவியம்
 செல்லம் பிரியம் இம்சை
 இதில் யாவுமே நீதானெனினும்
 உயிரென்றே உனை சொல்வேனே
 நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
 நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
 நிலா நீ வானம்  காற்று மழை
 என் கவிதை மூச்சு இசை
 துளித்தேனா மலரா இசை ஒளி பகல்
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrXpYcJo2V_IUU_OKdcSkOpP65aO_kjMjbDoTMrwnBeafw6dM1YmCns_yEWbqee_KsX6hTZJ8Vpynt3oBWqGnilwbb50Jwfl4h_1lCD6kaNSilDmtb-3_i69JpK2wXsaulMj130Hzuk6za/s400/pokkisham-new-hot-stills16.JPG
பெண்: அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
 அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாலனே
 அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
 அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
 அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
 அன்புள்ள படவா அன்புள்ள திருடா
 அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
 அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
 அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
 இவையாவுமே இங்கு நீ தான் என்றால்
 எந்த நாள் சொல்லச்சொல் நீயே அன்பே
 அன்பிலே ஒன்று தான் சேர்ந்திட
 வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
 

ஆண்: நிலா நீ வானம் காற்று மழை
 என் கவிதை மூச்சு இசை
 துளித்தேனா மலரா இசை ஒளி பகல்
பெண்: அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
 அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாலனே

Tuesday, July 27, 2010

இலங்கை அணி அபாரம்

Tharanga Paranavitana and Kumar Sangakkara hit centuries to help Sri Lanka to a strong 312 for 2 on the opening day at the SSC

இலங்கை , இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி நேற்று ஆரம்பமானது . 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்களை எடுத்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்து  ஆடிய   இலங்கை அணிக்கு தில்ஷன் அதிரடி தொடக்கம்  தந்தார். இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 4 வது ஓவரில், தொடர்ச்சியாக 4 பவுண்டரி அடித்து அசத்தினார் தில்ஷன். இவருடன் இணைந்த பரனவித்தாறன , பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வழக்கம் போல இந்திய அணியின் பந்து வீச்சு படுமோசமாக இருந்தது. டெஸ்ட் அரங்கில் 15 வது அரை சதம் கடந்த தில்ஷன், ஓஜா சுழலில் வெளியேறினார். இவர் 10 பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 54 ஓட்டங்களை  விளாசினார்.
Kumar Sangakkara celebrates his century with Tharanga Paranavitana

பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த பரனவித்தாறன , சங்ககரா ஜோடி இந்திய பந்து வீச்சை, நாலாபுறமும் சிதறடித்தது. அடிக்கடி பந்து வீச்சாளர்களை  மாற்றியும், இந்திய அணியால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. டெஸ்ட் அரங்கில் இரண்டாவது சதம் அடித்து அசத்திய பரண இஷாந்த் வேகத்தில் அவுட்டானார். இவர் 10 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 100 ஓட்டங்களை எடுத்தார் . . மறுமுனையில் சங்ககரா, டெஸ்ட் அரங்கில் 23 வது சதம் கடந்தார். சங்ககரா, பரணவிதனா ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 174 ஓட்டங்களை குவித்தது.
Suresh Raina and Rahul Dravid look on during the morning session

முதல் டெஸ்டில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி . இந்த ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு தரவரிசையில் பின்னடைவு ஏற்படலாம்.2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி அபாரமாக ஆடி 312 ஓட்டங்களை  குவித்துள்ளது.
Pragyan Ojha and Harbhajan Singh had a tough day

இந்திய அணி பந்து வீச்சில் போதிய கவனம் செலுத்தாததே காரணம். இனி வரும் நாள்களிலாவது இலங்கை அணியின் ரன்களை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.கம்பீர், யுவராஜ் விளையாடவில்லை .  2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 312 ஓட்டங்களை எடுத்திருந்தது. சங்ககரா (130), ஜெயவர்தனா (13) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா தரப்பில் இஷாந்த், ஓஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Kumar Sangakkara goes on the offensive
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி ஆடி கொண்டு உள்ளது . தற்போது 365 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டை இழந்து சங்ககாரவும் , மகேலவும் களத்தில் ஆடிக்கொண்டு உள்ளனர் . முரளிக்கு பதில் மென்டிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் .




 

Monday, July 26, 2010

சத்தான காய்கறிகள்

http://library.thinkquest.org/08aug/00209/Fresh-Vegetables.jpg
மாமிசம் உண்டு வாழ்பவர்களையும் பார்க்க காய்கறிகளை உண்டு வாழ்வோர் அதிக நாட்களுக்கு உயிர் வாழ்கிறார்கள் . காய்கறிகளில் பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்தவையாக காணப்படுகின்றன . ஆரோக்கிய வாழ்வுக்கு பெரிதும் உதவுகிறது காய்கறிகள் தான் .

இப்போதெல்லாம் இயற்கை உணவுகளை எல்லாம் செயற்கை மருந்துகளை தெளித்து விடுகிறார்கள் . கீரை வகை, பழவகைகள் போன்றவற்றிலும் உடனே செழித்து  வளர  இரசாயன மருந்துகளையும் , பூச்சிகள் அண்டாமல் இருக்க பலவகை கிருமி நாசினிகளையும் தெளிக்கிறார்கள் . இரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது.
http://thegreenmomreview.com/wp/wp-content/uploads/2009/06/vegetables.jpg
உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோபிளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. 
http://davidsonread.com/commercial/images/vegetable_main.jpg
கரட்டை  நாம் பச்சையாகவே உண்ணலாம் . தக்காளியை ஜூஸ் ஆக அடித்து குடிக்கலாம் . எல்லோரும் கூடுமான அளவு பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு விட்டமின்களையும் , தாதுச் சத்தையும் ,நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
http://blog.americanfeast.com/images/Stir%20Fried%20Vegetables.jpg
இரத்த உற்பத்திக்கு மிக முக்கியமானது இரும்புச்சத்து. இச்சத்துக் குறைந்தால் இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படும். உடலும் பலவீனம் அடையும். காய்கறிளிலிருந்து அதிகமாய் இரும்புச்சத்து கிடைக்கிறது. கரட்டில்  இரும்புச்சத்து அதிகம் உண்டு. தினமும் கரட்டை  சாப்பிட்டு வந்தாலே போதும், இரத்த சோகை நோயே  வராது . கரட்டை சம்பலாகவோ , வெள்ளை கறியாகவோ , வறையாகவோ செய்து சாப்பிட்டுபாருங்கள்.
http://realhomemaking.net/wp-content/uploads/2008/07/vegetables.jpg
இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகளிலும், பச்சையான - பசுமையான காய்கறிகளிலும், கீரைவகைகளிலும் கண்பார்வை தெளிவாகத் தெரியவும், கண்கள் ஆரோக்கியமாய் தொடர்ந்து இருக்கவும் கரோட்டின் என்னும் பொருள் இருக்கிறது. இது கண் பார்வை ஆரோக்கியத்துக்குத் தேவையான விட்டமின் ஏ-யை உடலில் தயாரித்துத் தந்துவிடுகிறது.

உடல்வளர்ச்சிக்கு ஆதாரமாய் இருப்பது புரதச்சத்து. உயிர் அணுக்களையும், திசுக்களையும் பழுதுபார்த்து எல்லா உறுப்புகளும் சீராய் இயங்கப் புரதச்சத்து தேவை. அவரைக்காயிலும், பச்சைப்பட்டாணியிலும் , பருப்பு வகைகளிலும் புரதச்சத்து அதிகமாய் இருக்கிறது. நமது உடல் செயல்படுவதற்கான ஆற்றலைக் கார்போஹைட்ரேட் என்று சொல்லப்படும் மாச்சத்து அளிக்கிறது.கிழங்கு வகைகளில் மாச்சத்து உண்டு . உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றில் மாச்சத்து அதிகம் இருக்கிறது.
http://www.asktonythegardener.com/dotnetnuke/Portals/0/images/DNNArticle/WLW/SummerVegetables_BCB4/Vegetables_SummerVegetables_GlebSemenjukIDreamstime.com_2.jpg

விட்டமின் ஏ, விட்டமின் சி, இரும்பு, கால்சியம், நார்ச்சத்து, விட்டமின் பி ஆகியவைகளுக்காக காய்கறிகளை நாம் அதிகம் உண்ணவேண்டும். காய்கறிகளைபெரிய துண்டுகளாக வெட்டிச் சமைக்க வேண்டும். நீண்ட நேரம் அவியவைக்கக்கூடாது.

பல் ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கவும்,  உடலில் களைப்பைத் தடுத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதகரிக்கவும், விட்டமின்  ‘ஈ’ நம் உணவில் தேவை. கீரை இனங்களில் விட்டமின் -சி அதிக அளவில உள்ளன. குறிப்பாக முட்டைக்கோஸ், தோட்டக்கீரை, அவரைக்காய், வெள்ளரிக்காய், முலாம்பழம், பசலைக்கீரை முதலியவற்றில்விட்டமின்  ‘சி’ அதிகம். 
 http://www.diabetespharmacist.com/uploads/image/green-leafy-vegetables(3).jpg
காய்கறிகளிலுள்ள நார்ப்பொருள்களே உணவுப்பொருள்களை விரைந்து செரிமானம் ஆக்கப்பயன்படுகின்றன. இவை இரத்தத்தில் கொலச்டோல்  அளவைக் குறைத்து விடுகின்றன. தினமும் மலம் நன்றாக வெளியேறச் செய்கின்றன. இந்த இரு பணிகளும் தவறாது நடைபெறக் காய்கறிகள், பழங்கள் முதலியவற்றில் உள்ள நார்ப்பொருள்கள் பயன்படுகின்றன. தக்காளி, கறிவேப்பிலை, அகத்திக்கீரை, புதினா, அவரை, முருங்கைக்காய் முதலிய காய்கறிகளில் நார்ப்பொருள்கள் தக்க அளவில் அமைந்துள்ளன. காய்கறிகளில் கல்சியமும் , இரும்பும் அதிக அளவில் உள்ளன.  இறைச்சி உணவுகளில் இருப்பதைவிடக் காய்கறி, பழம் போன்றவற்றில் சுண்ணாம்புச் சத்து அதிகமாய் இருக்கிறது. இதனால் முதுமையிலும் இளமைத்துடிப்புடன் , அழகான தோற்றத்துடன் நீண்ட நாட்களுக்கு வாழலாம் .

நாம் எமக்கு தெரிந்த விடயங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் . எல்லோருக்கும் எல்லா விடயங்களும் தெரிந்திருக்க வேண்டும் . உங்களுக்கு காய்கறிகளில் பயன்கள் பற்றி தெரிந்திருந்தால் அயலவர்களுக்கும் அவற்றை சொல்லுங்கள் . இந்த சத்து இதில் உள்ளது . நீங்கள் இதை வாங்கி சாப்பிடலாம் . அப்படி உரையாடி நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .
http://hsb.iitm.ac.in/~jm/ARCHIVES/Mar-April04/articles_files/dieting_files/vegetables.jpg
காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அதிகம் . எல்லோரும் காய்கறிகளையும் அதிகம் விரும்பி சாப்பிடுங்கள் . மாமிசத்தையே எல்லா நாட்களும் சாப்பிடாமல் காய்கறிகளையும் உங்கள் உணவோடு சேர்த்து கொள்ளுங்கள் . உடம்புக்கு மிகவும் நல்லது . ஒவ்வொரு நாளும் ஏதாவது சத்துள்ள கீரைவகையோ , கிழங்கு வகையோ , வெண்டி, கரட் போன்றனவோ சேர்த்து கொள்ளுங்கள் .

மனதில் அமைதி வேண்டும்

இப்போதெல்லாம் அமைதி
நிம்மதி என்றால் என்ன
என்று தெரியாமல்
வந்து விட்டது
இதுதான் கலிகாலம்

முன்னோர்கள் எல்லோரும்
அமைதியாகவும் , நிம்மதியாகவும்
சந்தோசமாகவும் இருந்தார்கள் ,
வாழ்ந்தார்கள் .
http://www.traileraddict.com/content/warner-bros-pictures/yes_man.jpg
இப்போதைய காலத்தில்
அந்த அமைதி, நிம்மதி
சந்தோசம் என்பன
எல்லோருக்கும் வாழ்வில்
கிடைப்பதில்லை . அப்படி
கிடைப்பது அரிது

இப்போதைய காலம்
கணணி உலகம்
படபடப்பு , அந்தரம் 
அவசரம் என போய்
கொண்டல்லவா இருக்கிறது


கணவன் வீட்டில் இருக்கும்
நேரத்தில் மனைவி வேலைக்கு
செல்வதும் , மனைவி வீட்டில் இருக்கும்
நேரத்தில் கணவன்  வேலைக்கு செல்வதுமாக
இருந்தால் அங்கே   நிம்மதி , அமைதி
எப்படி கிடைக்கும் .....

தினம் தினம் சண்டைகள், சச்சரவு
புரிந்துணர்வின்மை , தீர யோசிக்காமல்
முடிவுகளை எடுத்தல் என
அங்கு பிரச்சனைகள் தான் உருவாகின்றது

சில இடங்களில் நிம்மதி, சந்தோசமான
வாழ்க்கை அமைந்து விடுகிறது
அது ஆயிரத்தில் ஒன்று தான்
அப்படியான வாழ்க்கை எல்லோருக்கும்
கிடைப்பதில்லை தான் .

மனது சந்தோசமாகவும்
இன்பமாகவும் இருக்க
வேண்டும் . குழப்பங்கள்
இருக்க கூடாது .
அப்படியாயின் தான்
மனதில் அமைதி
நிலவும் ..............

Saturday, July 24, 2010

என்னை கவர்ந்த படமும் , பாடல்களும்

http://tamilcorn.files.wordpress.com/2009/07/mdsg257797.jpg
விண்ணைத்தாண்டி வருவாயா படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது . ஒரே அடிதடி , வெட்டு, குத்து என படம் பார்த்து அலுத்து புளித்துப்போன படங்களுக்கு மத்தியில் இடை இடையே சில நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன. ரசிகர்களும் அப்படியான படங்களுக்கு வரவேற்பு அளிக்கிறார்கள் . வெற்றிப்படமாக ஆக்குகிறார்கள் . எல்லோரும் குடும்பத்துடன் போய் பார்க்கிறார்கள் .

அண்மையில் வந்த அங்காடித்தெரு , சிங்கம் , பையா , விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் வெற்றி படங்கள் . சிம்பு தனது கைவித்தை, கால்வித்தை காட்டாமல் நடிப்பில் கவனம் செலுத்தி மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார் இந்த படத்தில் . படமும் நூறு நாட்களை கடந்து ஓடுகிறது . அளவான நடிப்பு , ஒப்பனை என எல்லாவற்றிலும் திரிஷாவும், சிம்புவும் கலக்குகிறார்கள் படம் முழுதும் .

படம் எல்லோரையும் ஏற்கிறது போல் படத்தின் இசை , பாடல்களும் கைகொடுக்கின்றன . ரகுமான் தான் ஒரு ஒஸ்கார் நாயகன் என காட்டி இருக்கிறார். மிகவும் சிறப்பாக இருக்கிறது இசை . பாடல்கள் எல்லாம் சொல்லத்தேவையில்லை . கவிதாயினி தாமரையின் வரிகள் . ஆஹா அற்புதம் . எனக்கு எல்லா பாடல்களும் பிடித்து இருக்கிறது .

எல்லோரும் பாடல்களை கேட்டு இருப்பார்கள் . வரிகளையும் புரிந்து கொண்டு இருப்பார்கள் . பாடல்களின் வரிகளை படியுங்கள் . அழகான வரிகள் . எனக்கு மிகவும் பிடித்து உள்ளது . பாடகர்களும் நன்றாக பாடல்களை பாடி உள்ளார்கள் . பல இதயங்களை கொள்ளை கொண்ட பாடல்கள் . இதோ .........
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioywiQjSRfXja17FU-kanvFQPchmVwQL3zTWJUNXaG8G9eM0Q5dw9iFeAJQt-FvAYfLTHh5u8e-mFl1fifHmnU3VQDIdMueSSlL_mk1k2G3pescbchOc1YOGusLfp1bfyOuR2LrzZyW9E/s400/Vinnaithandi-Varuvaya-stills-065+(1).jpg

ஓமன பெண்ணே

ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒஹோ

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன் ஓஹோ
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை ஓஹோ
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணைச் சேரானு
புல்லாங்குழல் பூந்துகையான நின் அழகே
நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
http://www.filmmy.com/images/Vinnaithandi-Varuvaaya-_5_.jpg

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஒ ஒ ஹோசானா ஹோசானா

அந்த நேரம் அந்தி நேரம்
கண் பார்த்து கந்தலாகி போன நேரம்
ஏதோ ஆச்சே

ஒ வானம் தேடி வந்தாச்சி
அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு
போயே போச்சே

ஹோசானா.. என் வாசல் தாண்டி போனாலே
ஹோசானா.. வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன்
சுக்கு நூராகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

ஹோசானா.. வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா.. சாவுக்கும் பக்கம் நின்றேன்
ஹோசானா.. ஏன் என்றால் காதல் என்றேன்

Hey babe i never wanna know what'd be lika feel lika
I really wanna be here with you…
It's not enough to say that we are made for each other
It's love that is hosanna true...
Hossana'll be there when you're callin' out my name...
Hossana...feeling like my whole life has changed...
I never wanna be the same...
It's time we rearrange...
I take a step,you take a step, I'm here callin' out to youu...
Hello...Helloooooo…… Helloooooo……

வண்ண வண்ண பட்டு பூச்சி
பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ.. சொட்டு சொட்டாய்
தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே

ஹோசானா.. பட்டு பூச்சி வந்தாச்சா
ஹோசானா.. மேகம் உன்னை தொட்டாச்சா
கிளிஞ்சலாகிறேன் நான்
குழந்தை ஆகிரேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்து கொள்கிறேன்
Hello...Helloooooo

ஹோசானா.. என் மீது அன்பு கொள்ள
ஹோசானா.. என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசானா.. ம்ம் என்று சொல்லு போதும்
ஹோ.. ஹோசானா..

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

http://www.tamilstudios.com/content/wp-content/gallery/vinnaithandi-varuvaya/vinnaithandi-varuvaya-07.jpg

மன்னிப்பாயா!.. மன்னிப்பாயா!....

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
(ஒரு நாள்..)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
(ஒரு நாள்..)

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
(ஒரு நாள்..)
(கண்ணே..)

Friday, July 23, 2010

சுவை மிகு பலாப்பழம்

http://www.freshplaza.com/2007/0626/jackfruit.jpg
பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் . சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .
http://www.besttravelthai.com/images/jackfruit.jpg
மஞ்சள்  நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ  சுளைகள் காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் . பலாக்கொட்டைகளை வேக வைத்தோ , அவித்தோ , பொரித்தோ , காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம் .

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும் . அப்போது தான் சமிபாடு அடையும் . இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது .
http://thaifruit.org/catalog/images/jackfruit.png
மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படுகிறது
http://www.seriouseats.com/images/20080818jackfruit.jpg
இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது . பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.  பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.
http://images.travelpod.com/users/beac/1.1231117620.jack-fruit.jpg
 100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத் தடுக்கும் "ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்' பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
http://www.backpackingmalaysia.com/images/uploads/stories/jackfruit-tree_thumb.jpg
 வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. சீசனில் கிடைக்கும் பழங்கள், நம் உணவில் இடம் பெற வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து பாருங்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள் . அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள் .

முரளியின் உலக சாதனை

http://www.sport.co.uk/public/images_news/2010/7/06/400x400_1196594566_spt_ai_srilankavengland_06.jpg
எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த உலக நாயகன் முரளி நேற்றைய இறுதி போட்டியில் உலக சாதனையை நிகழ்த்தி தனது  டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .

கடந்த 18 ஆண்டுகளாக தனது சுழல் மந்திரத்தால் எதிரணிகளை திணறடித்த இவர், பல்வேறு சர்ச்சைகளை கடந்து சாதித்துக் காட்டியுள்ளார். இவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது என முன்னாள் வீரர் வோர்ன்  தெரிவித்துள்ளார். 
http://images.cricket365.com/09/12/247/Muttiah-Muralitharan-top-wicket-taker_2394048.jpg
முரளிதரன் ஒரு "ஜீனியஸ்'. தூஸ்ரா வகை பந்துவீச்சில் கைதேர்ந்தவர். கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த சவால்களை துணிச்சலாக சமாளித்தவர். இவரது 800 விக்கெட் சாதனையை யாரும் நெருங்க முடியாது. இவரது மனஉறுதியை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்று கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார் .

முரளிதரனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியம். 8 விக்கெட் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்குடன் சிறப்பாக பந்துவீசினார். டெஸ்ட் அரங்கில் இவர் 800 விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தோனி குறிப்பிட்டுள்ளார் .
http://i2.cdn.turner.com/cnn/2009/SPORT/football/07/30/cricket.muralitharan.srilanka.retirement/art.murali.jpg
8 விக்கட்டுகள் தேவையான நிலையில் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய முரளி தனது தன்னம்பிக்கை, விடாமுயற்ச்சி , தனது சுழல் யாலத்தினால் இந்த 8 விக்கட்டுகளையும் கைப்பற்றி உள்ளார் .

முரளியை முன் மாதிரியாக கொண்டு பல இளம் வீரர்கள் முன்னேற  வேண்டும் . நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்க்க வேண்டும் . பல சவால்களை சந்தித்து வெற்றி பெற வேண்டும் .

உலக சாதனை வீரர் முரளிக்கு எல்லோரினது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .


Tuesday, July 20, 2010

மருந்தாக பயன்படும் தேன்

http://www.topnews.in/files/Honey.jpg
எல்லோரும் நீண்டகாலம் வாழவும் , நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவுவது தான் தேன் . ஒவ்வொரு நாளும் தேனுடன் வெந்நீரை கலந்து காலையில் குடித்து வந்தால் உடம்புக்கு நல்லது . சிறியவர் முதல் பெரியவர்வரை   பாவிக்கலாம் . அரு மருந்து தேன் தான்.
http://image3.examiner.com/images/blog/EXID24842/images/honey.jpg
சுத்தமான பானம் .  தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது. அது மிகவும் நல்ல தேன் . நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் இருக்கும் . நீண்ட நாட்களுக்கு பாவிக்கலாம் .
http://www.vuatkerala.org/static/mal/advisory/agri/apiculture/image/bee12oc%5B1%5D.jpg
தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர். சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.
http://www.treehugger.com/european-honey-bee-080826.jpg
தேனை அதிக அளவு எடுத்து குடிக்கக் கூடாது. சிறிது சிறிதாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி சாப்பிட்டால் உமிழ் நீருடன் தேன் சேர்ந்து உடலுக்குள் செல்கிறது. தேனை அதிகம் பயன்படுத்தினால் அது மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும் . அதனால் அளவோடு பயன் படுத்துங்கள் .
http://www.cosmosmagazine.com/files/imagecache/news/files/news/20080925_honey.jpg
இது நிறைய கலோரி நிறைந்ததாகும்.  ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளை தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.
http://www.canada-photos.com/data/media/12/busy-honey-bees_1712.jpg
தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், விட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
http://www.mediterraneandiet.com/Images/raw-honey.jpg
தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு  காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி,  குணம், தடிமன் வேறு படும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது.
http://scienceblogs.com/retrospectacle/honey.jpg
தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள்  இருக்கிறது . தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். இரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமானஉறக்கம் வரும். தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும். 
 http://blog.makezine.com/honey1_20081118.jpg
 தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும். தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்தியையும்  கொடுக்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQHe3nho9mkuhfHNmqHc4w-QbP2tjW5rskeTmO7mfyyCa-cAg00SIfG02gRugOjLEoTeNRYFlOYIa38kulgoSpRtPG188NpTjKilZneFAyrLWdTXEPy6tPiOJXOlUTXrOW5zqnSI_j0n0/s400/honey.jpg
நீங்களும் தேனை பயன்படுத்தி பாருங்கள் . உடல் ஆரோக்கியத்துடன் இருங்கள் .