Tuesday, July 20, 2010

மருந்தாக பயன்படும் தேன்

http://www.topnews.in/files/Honey.jpg
எல்லோரும் நீண்டகாலம் வாழவும் , நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவுவது தான் தேன் . ஒவ்வொரு நாளும் தேனுடன் வெந்நீரை கலந்து காலையில் குடித்து வந்தால் உடம்புக்கு நல்லது . சிறியவர் முதல் பெரியவர்வரை   பாவிக்கலாம் . அரு மருந்து தேன் தான்.
http://image3.examiner.com/images/blog/EXID24842/images/honey.jpg
சுத்தமான பானம் .  தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது. அது மிகவும் நல்ல தேன் . நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் இருக்கும் . நீண்ட நாட்களுக்கு பாவிக்கலாம் .
http://www.vuatkerala.org/static/mal/advisory/agri/apiculture/image/bee12oc%5B1%5D.jpg
தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர். சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.
http://www.treehugger.com/european-honey-bee-080826.jpg
தேனை அதிக அளவு எடுத்து குடிக்கக் கூடாது. சிறிது சிறிதாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி சாப்பிட்டால் உமிழ் நீருடன் தேன் சேர்ந்து உடலுக்குள் செல்கிறது. தேனை அதிகம் பயன்படுத்தினால் அது மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும் . அதனால் அளவோடு பயன் படுத்துங்கள் .
http://www.cosmosmagazine.com/files/imagecache/news/files/news/20080925_honey.jpg
இது நிறைய கலோரி நிறைந்ததாகும்.  ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளை தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.
http://www.canada-photos.com/data/media/12/busy-honey-bees_1712.jpg
தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், விட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
http://www.mediterraneandiet.com/Images/raw-honey.jpg
தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு  காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி,  குணம், தடிமன் வேறு படும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது.
http://scienceblogs.com/retrospectacle/honey.jpg
தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள்  இருக்கிறது . தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். இரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமானஉறக்கம் வரும். தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும். 
 http://blog.makezine.com/honey1_20081118.jpg
 தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும். தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்தியையும்  கொடுக்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQHe3nho9mkuhfHNmqHc4w-QbP2tjW5rskeTmO7mfyyCa-cAg00SIfG02gRugOjLEoTeNRYFlOYIa38kulgoSpRtPG188NpTjKilZneFAyrLWdTXEPy6tPiOJXOlUTXrOW5zqnSI_j0n0/s400/honey.jpg
நீங்களும் தேனை பயன்படுத்தி பாருங்கள் . உடல் ஆரோக்கியத்துடன் இருங்கள் .

12 comments:

Senthu VJ said...

நல்ல பதிவு, நன்றிகள்.
அத்தோடு நல்ல தேனை எப்படி இனம் காண்பது என்றும் சொல்லலாமே?

Anonymous said...

புகைப்படங்கள் அதிகமாக உள்ளன.இது தளம் திறப்பதை தாமதப்படுத்தும்.கவனிங்க

Anonymous said...

nalla vidayam intha pathivu......


mani

'பரிவை' சே.குமார் said...

Nalla pathivu...

pavi, padangalai kuraikkalamey?

Pavi said...

நன்றி செந்து

Pavi said...

நன்றி சதீஷ் குமார்
இனி அப்படி கவனிக்கிறேன் .
படங்களை குறைக்கிறேன்

Pavi said...

நன்றி மணி

Pavi said...

நன்றி குமார்
இனிமேல் அப்படி செய்கிறேன்
உங்களுடைய எல்லோரினதும் கருத்துக்களை வரவேற்கின்றேன் .

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு,

Pavi said...

நன்றி வெறும் பய

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுனு நம்முன்னோர்கள் கூறிய கருத்து இதற்கும் எதற்கும் பொருந்தும் வகையில்...

தேன்! நீண்ட காலத்திற்கு கெட்டு போகாத ஒரு பொருள் என்றும் சொல்லலாம்...

Pavi said...

ம்ம்ம்ம் அது உண்மைதான் வாசன் .
நன்றி வாசன்