Sunday, January 23, 2011

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?

http://www.wrd.org/water_quality/images/drinking-water-standards.jpg

நாம் அன்றாடம் தண்ணீர் அருந்துகிறோம் . அதுபோல தான் குளிர்பானங்களையும் தண்ணீர் போல் அருந்துகிறோமே. அதுதான் பிரச்சனை . நாம் சுத்தமான தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் . பிரச்சனை இல்லை . உடம்புக்கு நல்லது . தாகத்தை தீர்க்கும் . அதுக்காக குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக குடித்தால் அது ஆபத்து .

நாம் ஒரு விழாவுக்கு அல்லது நிகழ்ச்சிகளுக்கு , பார்டிகளுக்கு என்று செல்கின்றோம் . அங்கு உடனே குளிர்பானங்கள தூக்கி தருகிறார்கள் எம்மை வரவேற்று . நாமும் வாங்கி குடிக்கின்றோம் . எமது நண்பனுடன் ஏதாவது ஒரு இடத்துக்கு செல்கின்றோம். சரியான தாகமாக இருக்கிறது . உடனே கடையில் குளிர்பானத்தை வாங்கி குடிக்கின்றோம் .
http://www.co.washington.or.us/HHS/EnvironmentalHealth/DrinkingWater/images/blue-glasswater_1.jpg
சோடா வகைகள் , பழங்களில் செய்யப்பட்ட ஜூஸ் வகைகள் என ஏராளமான குளிர்பானங்கள் விற்பனைக்கு உண்டு . இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் போத்தல்களில் , டின்னில்  நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது. கலரில் உள்ள பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமா, பரு,  முதலியவற்றை உண்டாக்குகிறது. 

குளிர்பானங்கள் எல்லாம் பற்பல நிறங்களில் உள்ளன. மஞ்சள் , சிகப்பு, கருப்பு, ஆரஞ்சு , இளம் மஞ்சள் என பல நிறங்களில் சுவை ஊட்டப்படுகின்றன . கலர் பானங்களைப் பதனப்படுத்துவதுடன் எலுமிச்சை பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும், சல்ஃபர்டையாக்ஸைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர்டையாக்ஸைடு, ஒரு நச்சு முறிவு மருந்துதான். 
http://www.vissastudios.com/wp-content/uploads/2011/01/lemon-juice.jpg
பல பானங்கள் குடிக்கும்போது நறுமணம் வீசும் .பானங்கள் நறுமணமாக இருக்க, காஃபைன் சேர்க்கப்படுகிறது. சில  பானங்களில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் காஃபைன் சேர்க்கப்படுகிறது. இந்த அளவு, நாம் தினமும் அருந்தும் காபி, தேநீர் போன்றவைகளில் உள்ள அளவிற்குச் சமம். காஃபைன், உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது.  

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கும் பானங்களுக்கு பின்லாந்து , நோர்வே ஆகிய நாடுகள் தடை விதித்து உள்ளன. சிவப்பு நிற பானங்களை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன . அதற்க்கு காரணம் தோலுக்கு அலர்ஜியை உண்டு பண்ணுகிறது .ஏன் நாம் இந்த குளிர்பானங்களை அருந்துவதை விட்டு விட்டு களைப்பாக இருந்தால் எலுமிச்சை சாறு பிழிந்து தண்ணீரில் விட்டு சீனியும் போட்டு கலக்கி அருந்தினால் உடலுக்கு நல்லது . ஒரு தீங்கும் இல்லை .
http://foodmapper.files.wordpress.com/2008/04/orange-juice.png
 ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்து சீனியும் சேர்த்து கலந்து குடியுங்கள் . இயற்கையாக நீங்கள் தயாரித்து குடித்து பாருங்கள் எப்படி இருக்கிறது என்று . மிகவும் சுவையாக இருக்கும் . திராட்சை பழத்தை பிழிந்து குடித்து பாருங்கள் . இப்படி இயற்கையாக செய்து குடியுங்கள். 
http://zicococonutwater.org/wp-content/uploads/2010/07/coconut-water.jpg
இதை விட இன்னம் ஒன்று சொல்கிறேன் அதுதான் இளநீர் . எல்லா இடங்களிலும் எவ்வேளைகளிலும் கிடைக்கும் . எல்லோருக்கும் உகந்த பானம் . தாகத்தை தீர்க்கும் . இயற்கையான பானம் . தீங்கு ஒன்றும் இல்லை .எனவே இயற்கை பானங்களை அருந்துங்கள் . உடல் நலத்துடன் இருங்கள் . குளிர்பானங்கள் எமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் . இயற்கை பானங்கள் எமக்கு நன்மை பயக்கும் .






8 comments:

Jafarullah Ismail said...

இயற்கையை வெற்றி பெற செயற்கை பானங்கள் ஒருபோதும் இயலாது என்பதை அழகாக பதிவு செய்துள்ளீர்கள் பவி. பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

நல்ல பயனுள்ள பதிவு.படங்களுடன் பார்க்கையில்
இன்னும் சிறப்பாக உள்ளது.தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

நல்ல பகிர்வு.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பயனுள்ள பதிவு.

Pavi said...

நன்றி ஜபருல்லாஹ்

Pavi said...

நன்றி ரமணி

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா

Pavi said...

நன்றி குமார்