Tuesday, January 25, 2011

நமது உடல் ஆரோக்கியம்

http://www.ivstandards.net/wp-content/uploads/2011/01/healthy_diet.jpg

எமது உடல் ஆரோக்கியம் எமது நடைமுறைகளிலும் , உணவு வகைகளிலுமே தங்கி உள்ளது . உடல் ஆரோக்கியமாக இருப்பது என்பது பெரிய விடயம் . எல்லோரும் எல்லா வகை உணவுகளையும் உண்ண மாட்டார்கள் . காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் என்று எல்லா வகை உணவுகளுமே நாம் எமது அன்றாட வாழ்வில் நமது உணவில் பயன் படுத்த வேண்டும் .

இன்றைய நிலையில் ஏதேனும் ஒரு வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டு அதனை மேம்படுத்த முயல்கின்றார்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல். இந்நிலை கண்டிப்பாய் அகல வேண்டும். சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் தேக ஆரோக்கியத்தை எப்போதும் நன்முறையில் வைத்துக் கொள்ளவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லவேண்டும் என்றால் பெரும்பான்மையான உடல் நலக்கேடுகள் முறையற்ற உணவினால்தான் தோன்றுகின்றன. எண்ணெய் வகை உணவுகளுமே காரணம் . பொரியல், வதக்கல் என எல்லாமே எண்ணெய் வகை உணவுகளை உண்ண கூடாது . இது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல . 
http://www.healthyjunkie.com/UserFiles/2009/4/29/Drink%20your%20way%20to%20Good%20Health.jpg
நாம் சொல்வதுண்டு . அறுசுவை உணவுகள் என்று நாம் சொல்வதுண்டு .எமது நாக்கு ஒவ்வொரு சுவைகளை சுவைக்கிறது . துவர்ப்பு இரத்தத்தைப் பெருக்குகின்றது . உவர்ப்பு உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது.  
இனிப்பு தசையை வளர்க்கின்றது . புளிப்பு கொழுப்பினை வழங்குகின்றது . கார்ப்பு எலும்புகளை வளர்க்கின்றது . கசப்பு நரம்புகளை பலப்படுத்துகின்றது.  அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். ஆனால், இப்போது எல்லாம் அப்படி இல்லையே . 
http://www.pyroenergen.com/articles10/images/good-health.jpg
பாஸ்ட் பூட் என்று துரித உணவுவகைகளை உண்கின்றனர் இப்போதைய இளம்தலைமுறையினர் . எனவே நமது உடல் நலம் நமது கைகளில் தான் இருக்கிறது . இயற்கையாக நமது உணவு வகைகளை நாமே செய்து சத்தான உணவுகளை உண்ண வேண்டும் . நமது உடல் நலத்துக்கு ஏற்றவாறு நல்ல உணவுகளை தெரிவு செய்து உண்ணுங்கள் . நலமுடன் வாழுங்கள் . பல்லாண்டு காலம் வாழுங்கள் .








2 comments:

'பரிவை' சே.குமார் said...

உடல் ஆரோக்கியத்துக்கு பயனான கட்டுரை... நிறைய எழுதுங்கள் சகோதரி.

Pavi said...

நன்றி குமார்