கண்ணெதிரே தோன்றி
கண்ணெதிரே தோன்றி
மறைந்தாள் என் காதலி
அவள் கணவனுடன்
நான் அவளை நினைத்து
ஏங்கியவனாய் இங்கு
கண்களில் நீர் வழிந்து
கண்களிலே நீர் ததும்பி
ததும்பி ஓட எனது காதலியின்
இழப்பை தாங்க முடியாமல்
மயானத்திலே நின்று கொண்டு இருக்கிறேன்
அவளுக்கு வந்த தீராத நோய்
எனக்கும் வந்து நானும்
அவளுடன் இறப்பிலாவது
ஒன்று சேர்வதற்காக காத்து
இருக்கிறேன் என் இறப்புக்காக .....
கண்ணே என் கண்ணே
கண்ணின் மணி போல்
காப்பேன் என்று சொன்னேன்
என் கண்ணில் நீரையும்
காயத்தையும் உண்டாக்கி
சென்று விட்டாளே அவள் ........
கண்கள் பேசுகின்றன
அவள் கண்கள் என்னை பார்க்க
எனது கண்களும் அவளை நோக்க
இருவரது பார்வையும் காதல்
பார்வை பார்த்த வண்ணம்
கண்கள் பேசி இருவரும்
காதலர்களாகி கல்யாணத்தில்
முடிந்தன ................
கண்ணுக்கு கண்ணாக
இருவரும் காதல் திருமணம்
செய்தோம் - சந்தோசமாக
இருக்கிறோம் - அவர் என்னை
கண்ணுக்கு கண்ணாக
கவனிக்கிறார் - எனக்கு
என்ன குறை ???
2 comments:
கவிதை அருமை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html
நன்றி கருன்
Post a Comment