Saturday, January 29, 2011

இலங்கையில் புதிய நாணயத்தாள்கள் அறிமுகம்


பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் . அன்றைய தினம் புதிய பண நோட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளனர் . இதுவரை காலமும் இருந்த பண நோட்டுகளை பார்க்கிலும் அழகாகவும் , இலங்கையின் புராதன சின்னங்களை ,அபிவிருத்தி, சுபீட்சம், கலைகள், பறவைகள் என்பவற்றை கொண்டமைந்ததாக இருக்கிறது . 
http://www.atsnotes.com/catalog/banknotes-pictures/sri-lanka-ceylon/sri-lanka-102.JPG
புதிய நோட்டுகளை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டு வெளியிடுகிறது . தற்போது புழக்கத்தில் 10, 20, 50, 100, 500, 1000, 2000 ரூபா பெறுமதியான தாள்கள் புழக்கத்தில் உள்ளன . அதனை விட தற்போது புழக்கத்தில் புதிதாக ஐயாயிரம் ரூபா நோட்டுகள் முதன் முறையாக புழக்கத்தில் அமைய போகிறது . புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ரூபா நோட்டுகள் எதிர்வரும் சுதந்திர தினத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

எல்லோரும் உடனே தெரிந்துகொள்ளும் விதமாகவும் ஒவ்வொரு வர்ணங்களில் நோட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளன . நீலம், பச்சை ,நாவல் , சாம்பல் போன்ற வர்ணங்களில் அச்சிட்டு வெளியிடப்படவுள்ளது . பறவைகள் , வண்ணாத்து பூச்சிகள் , சிற்பங்கள் , நடன கலைகள் போன்ற உருவங்கள் நாணய தாள்களில் அச்சிட்டு பதியப்பட்டு உள்ளன . 

7 comments:

சக்தி கல்வி மையம் said...

தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

பாலா said...

உங்கள் தளத்தில் புதிய செய்திகள் நிறைய தருகிறீர்கள் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல். ஆமா அதில் தமிழ் இருக்கா?

தமிழக மீனவனுக்காக் நீங்களும் குரல் கொடுக்கலாமே சகோதரி.

கார்த்திகேயன் said...

உங்களின் பதிவுகள் அருமையா இருக்குங்க இப்போலாம் கொஞ்சம் புதுமையும் தனித்தன்மையும் நிறைந்திருக்குங்க...

Pavi said...

நன்றி கருன்

Pavi said...

ஆம் . தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டு இருக்கும்
நன்றி குமார்

Pavi said...

நன்றி கார்த்திகேயன்