வழக்கமான விஜயின் படங்களை விட மிகவும் வித்தியாசமான படமாக இருக்கிறது விஜயின் காவலன் . சுறா, வேட்டைக்காரன் , வில்லு போன்ற படங்களை விட இந்த படம் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது . எல்லோரும் பார்த்து ரசிக்க கூடிய படம் . விஜயின் நடிப்பும் , பாடல்களில் அவரின் நடனமும் , சண்டைக் காட்சிகளும் ரசிக்கும்படியாக உள்ளது .
அடிதடி , குத்துவெட்டு , சொதப்பல் , குத்து பாட்டுகள் என்று ஒன்றும் இல்லாமல் கதைக்கு ஏற்றதுபோல் காட்சி அமைப்பு , சண்டை காட்சி என்பன உண்டு .விஜயை எமக்கு பார்க்கும் போது காதலுக்கு மரியாதை , துள்ளாத மனமும் துள்ளும் , நினைத்தேன் வந்தாய் போன்ற படங்கள் நினைவுக்கு வருகிறது . இப்படியான விஜயை தானே எல்லோருக்கும் பிடிக்கிறது .விஜயின் சொப்டான படங்கள் பார்த்த மாதிரி உள்ளது காவலன் படமும் .
விஜய் வெற்றிக்காக எவ்வளவு தூரம் இறங்கி வந்து இருக்கிறார் என்பதற்கு ரோஜாவிடம் அவர் அடி வாங்கும் காட்சி ஒன்றே போதும். விஜய்யின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான பாணியில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சித்திக். ஓவர் பந்தாவாக லாஜிக்கை மீறிய விஜய்யின் அறிமுகம் இல்லாமல் சாதாரண அறிமுகத்துடன் காவல் வேட்டையை ஆரம்பிக்கிறார் விஜய். வடிவேலுவும் அவ்வப்போது எம்மை சிரிக்க வைக்கிறார் .
முகம் காட்டாத காதலியால், திசை மாறி வாழ்க்கையில் பயணிக்கும் இளைஞன், மீண்டும் தன் காதலியோடு இணைகிறாரா? என்பதை உணர்ச்சி பொங்க, உருக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் . |
அசினின் 'தொலை பேசி வழி' காதலுக்கு அவரின் தோழி மித்ரா'டிப்ஸ்' தர சுவாரஸ்யமாக நகர்கிறது.காலேஜ் படிக்கும் அசின்,மித்ரா இருவருக்கும் பாடமெடுக்கும் புத்திசாலி பாடிகார்ட், நெருக்கமாக போன் வாய்ஸ் காதல் பேசும்போதும், காதலியை கண்டுபிடிக்க திணறுவதாக காட்டுவதிலிருந்து அசின் மேல் விஜய்க்கு சந்தேகம் வராமல் போவதுவரை, படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி ரசிக்கிறவர்களுக்கு கலகலப்பு தரும். யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ். |
விஜய்யிடம் மொபைலை கொடுத்து விட்டு வடிவேல் சொல்லும் டயலாக் 'யாரோ பார்வதி நம்பியாராம் சார்' அதற்கு விஜய் "டேய் லூசு, அது பார்வதி நம்பியார் இல்ல. 'ப்ரைவேட் நம்பர்' டா" என சொல்லும் காட்சி அருமை . 'யாரது யாரது' க்யூட் மெலடி, பட்டாம்பூச்சி பாடல் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது . பாடல்கள் கேட்கும்படியாக உள்ளது . இரைச்சல் இசை இல்லை . மொத்தத்தில் காவலன் எல்லோருக்கும் பிடிக்கும் . விஜயின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்று . ஜனத்திரள் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டு இருக்கிறது . கடைசியாக வந்த விஜயின் பல படங்களை விட எனக்கு காவலன் பிடித்து இருக்கிறது .
7 comments:
விமர்சனம் அருமை..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_31.html
எப்படியோ விஜயை காப்பாத்திட்டிங்க..
விமர்நம் அருமை
விஜயை காப்பாத்திட்டிங்க.
நன்றி கருன்
நன்றி ரசிகன்
விஜயை காவலன் காப்பாத்தினான் , நாமும் காப்பாத்துவோம்
ம்ம்மம்மம்ம்ம்ம் நன்றி குமார்
super
Post a Comment