Friday, March 4, 2011

சிக்கனமும் சேமிப்பும்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFxPj3tpYfGIqroDkHWX2ta9bN9PJ3-amru-BOOiBjVSk2H7i9SVaElyeFE901_8kXzSjaBg8WhlJvp2PukAvvhGHAHJnc10wHjtLEQKuTSVcOwdV9-eMYRGgFU3ZVhoWZJWuQopm7x5eZ/s320/money-saving-tips.jpg
எல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் . இன்றே உழைத்த பணத்தை இன்றே செலவழித்தால் அதில் என்ன பயன் .சிக்கனம் என்பது வீட்டைக் காக்கும் . ஆனால், சேமிப்பு நாட்டைக் காக்கும் . 
http://harshalshelat.files.wordpress.com/2010/08/wealth1_small.jpg
சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதற்க்காக உணவு உண்ணாமல் , நல்ல உடைகளை உடுக்காமல் இருப்பது என்று பொருள் அல்ல . நமது தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமித்து வைப்பதில் பயன் ஏதும் இல்லை . இப்படி இருப்பது கஞ்சத்தனம் . அப்படி இருக்க கூடாது . அதாவது அவசியமான , அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் செலவழித்து விட்டு மீதியை சேமித்து வைத்தல் என்பதே சிக்கனம் . பணத்தை வீண்விரயம் செய்யாமல் அவசியமானவற்றுக்கு மட்டும் செலவழிக்க வேண்டும் .

அன்றாட உழைப்பில் தான் நமது வாழ்க்கை ஓடுகிறது என்றால் சாப்பாட்டை மட்டும் உண்டு கொண்டு இருக்க முடியுமா . இல்லை எமக்கு வேறு தேவைகளும் இருக்கிறது .அன்றாடம் மூவாயிரம் ரூபாய் தான் சம்பளம் . இருந்தாப்போல் காச்சல் வந்து விட்டது மருந்து எடுக்க வேண்டும் . என்ன செய்வது . கொஞ்ச பணத்தை நமது கையிருப்பில் வைத்து இருந்தால் தான் வைத்தியரிடம் சென்று மருந்து எடுக்க முடியும் . சேமித்து கொஞ்ச பணம் கையிருப்பில் வைத்து இருந்தால் தான் உடனே உதவும் . 
http://www.savingstoolbox.com/wp-content/uploads/2009/01/save-money.jpg
கஞ்சத்தனமாக இருப்போரும் உண்டு . தம்மிடம் எல்லா வசதி இருந்தும் மற்றவர்களை எதிர்பார்ப்பார்கள் . போதிய வசதி இருந்தும் தமது உறவுகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள் . தமது உறவுகள் உடல்நிலை சரியில்லாது கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் போது பண உதவியோ , மனிதாபிமான உதவியோ செய்ய மாட்டார்கள் . இப்படியானவர்களிடம் பணம் இருந்தும் என்ன பயன் . 

கஷ்டத்தில் உடுக்க உணவில்லாமல் , சாப்பிட வழியில்லாமல் இருக்கும் போது பண வசதி படைத்தவர்கள் தமது ஆடம்பர செலவுகளை செய்து தமது பணத்திமிரை காட்டுகிறார்கள் . சடங்குகள் , விழாக்கள் போன்றவற்றில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வீண் விரயம் ஆக்கப்படுகிறது , அளவுக்கு அதிகமான ஆடம்பரங்கள் என்று பணத்தை தண்ணீர் போல் வாரி இறைக்கிறார்கள் . கொஞ்ச நேரம் யோசித்து இவற்றை எல்லாம் சிந்திக்கிறார்களா . மற்றவர்களின் கஷ்டத்தையும் உணர வேண்டும் அவன் தான் மனிதன் . 
http://www.savemoneyblog.net/wp-content/themes/bizine/images/feat-default.jpg
மக்களிடம் சிக்கன பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் அதன்மூலம் சேமிப்பை பெருக்க வேண்டும் . சிககனமும் சேமிப்பும் சோந்தால்தான் மூலதனம் பெருகும். சிறுவர்களுக்கு சின்ன வயதில் இருந்தே  சேமிப்பு பழக்கம் ஏற்பட்டால் தான் எதிர்கால வாழ்வை வளமுடனும், வளர்ச்சியுடனும் அமைத்துக்கொள்ள முடியும். சிறு துளி தான் பேரு வெள்ளம் .  சிக்கனம், மற்றும் சேமிப்பு என்பது பணத்தை மட்டும் சேமிப்பது மட்டுமல்ல. அதோடு நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் தண்ணீர், பெட்ரோல், மின்சாரம், காலநேரம், தானியங்கள், ஆகியவையும் அடங்கும். எனவே அனைத்து பொருட்களையும் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். வீண்விரயம் செய்வதை தவிர்க்க வேண்டும் . 
http://blog.advertisespace.com/wp-content/uploads/2009/01/save-money.jpg
சிக்கனம் என்பது மற்றவர்களின் பட்டினியைக் கூடப் போக்கும். "வாழு வாழவிடு' என்பதுதான் சிக்கனத்தின் தாரக மந்திரம். . தனி மனித வாழ்வில் மனிதனின் தரத்தை உயர்த்த சிக்கனமும், சேமிப்பும் மிக அவசியமானது . பெரியோர்களில் இருந்து சிறியோர்கள் வரை சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க பழக வேண்டும் . சிக்கன பழக்கமும், சேமிப்பும், இளம் வயதில் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பொருளாதார நிலையில் உயர முடியும். அதன் காரணமாக தங்களது வாழ்வு வளம்பெறுவது மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பெருகும். நாம் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மருந்துகள் வாங்க குடிநீர் வசதி,  பள்ளி வசதி, மருத்துவ வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உதவுகிறது.

உடனே ஏதாவது மருத்துவ தேவைக்கு , அல்லது பள்ளிகூடத்து தேவைக்கு என உடனே பணம் தேவைப்பட்டால் நாம் சேமித்த பணத்தில் இருந்து உடனே அந்த தேவையை பூர்த்தி செய்யலாம் . சேமிப்பு இல்லாவிடில் எங்களுடைய நிலைமை என்னவாகும் . அங்கும் , இங்கும் அல்லலாடுவோம் . பக்கத்து வீட்டு கதவை தட்டி கடன் கேட்போம் . அது தவறு . நூறு ரூபாயை சம்பாதித்து தொண்ணூறு ரூபாயை செலவழித்து விட்டு பத்து ரூபாயை சேமிப்பது சிக்கனம் . அதே நூறு ரூபாயை வைத்து கொண்டு நூற்று பத்து ரூபாயை செலவழித்து விட்டு பத்து ரூபாய் கடன் வாங்குவது ஊதாரித்தனம் . அது தவறு . 
http://www.bridalbuds.com/wp-content/uploads/money-tree1.jpg
நாம் உழைத்து வாழ வேண்டும் . பிறர் உழைப்பில் வாழ்தல் ஆகாது . சிக்கனத்துடனும் சேமிப்புடனும் வாழ வேண்டும் . நமது எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும் . சிக்கனமும் , சேமிப்பும் தான் வாழ்க்கையின் முதுகெலும்பு . எல்லோரும் சிக்கனத்துடனும் சேமிப்புடனும் இருந்தால் வாழ்வு வளம் பெறும், நாடு வளம் பெறும் .











7 comments:

தினேஷ்குமார் said...

தேவையான பதிவு.....

Pavi said...

நன்றி தினேஷ்

இராஜராஜேஸ்வரி said...

சிக்கனமே சிற்ந்த வருமானமாகும்.

raja said...

Good idea but stit idea.thanks paving by Bala

raja said...

Good idea but stit idea.thanks paving by Bala

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி...
http://blogintamil.blogspot.com/2014/10/blog-post_16.html?showComment=1413461117899#c3206660574817534359

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

I am a student. I will read your easy .Its very super and very interesting. All people are follow the instructions. It is very use full in all people life.